உங்களால் நம்ப முடிகின்றதா பசுவின் பால் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று: பசுவின் பால் எலும்புகளுக்கு கால்சிய சத்தை கொடுக்கின்ற ஒரு சஞ்சீவி அல்ல, மாறாக பலரின் ஆரோக்கியத்தை மோசமாக்கின்றது. வளர்ச்சிதை மாற்றத்தை சிதைத்து எலும்புகளை உடைய வைக்கின்றன.
பசுவின் பால் அவசியமான உணவு அல்ல, பெரியவர்களுக்கு, குறிப்பாக வயது வந்த மனிதர்களுக்கு பசுவின் பால் தேவையற்றது.பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்றாட உணவில் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு குற்றவாளியாகும்.
பலர் பால் பொருட்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மை ஏற்படும். பால் பொருட்களை அடிக்கடி உண்பவர்களுக்கு அது பழகி விட்டதாக தெரிந்தாலும் உடனடியாக உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தாது நீண்ட காலத்துக்கு பிற்பாடு நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு அது வழி வகுக்கின்றன. குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரைநோய் வகை-2.
ஏனெனில் பசுவின் பால், இன்னுமொரு விலங்கின் கன்றுகளுக்கு உணவாகும் அது எப்படி மனிதக் குழந்தைகளுக்கு உணவாகும். அந்த விலங்குகளின் குடல் அமைப்பு மனித குடல் அமைப்பு போல் இல்லாதது.
அது ஒரு பக்கமாக இருந்தாலும், எந்த விலங்காவது இரண்டு வயதுக்கு மேல் பால் குடிப்பதில்லை மனிதன் மட்டும்தான் சாகும் வரையும் பால் குடிக்கின்றான். [ஒராங்குட்டான் மட்டும் தனது குட்டிக்கு 5-6 வயது வரை பாலூட்டும்]
இரண்டு வயது மட்டும் தான் தாய்ப்பால் கூட ஒரு குழந்தைக்கு அல்லது ஒரு கன்றுக்குட்டிக்கு ஒத்துக்கொள்ளும் அதற்குப் பிற்பாடு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இரண்டு வயதுக்கு பிறகு குடல் திட உணவுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளுகின்றது. இந்த நேரத்தில் பாலை ஊத்தினால் அது குடலுக்கு விஷமானது.
இரண்டு வயது மட்டுமே பால் சக்கரை லாக்டோசை உடைக்கும் என்சைம் லாக்டோஸை உற்பத்தி செய்யும் அதற்கு பிறகு இயற்கையாக என்சையும் குறைந்துவிடும்.
அதாவது பாலை நொதிக்க வைக்கும் நொதிகள் இல்லாமல் போய்விடுகிறது. நீண்ட காலமாக செரிக்காமல் தேக்க நிலையில் இருக்கும் பால் பொருட்கள் குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மேலும் பாலில் உள்ள ஹார்மோன்கள் பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. சில ஆய்வுகள் இப்போது பால் நுகர்வுக்கும் சில நோய்களை உருவாக்கும் போக்குக்கும் இடையே உறுதியான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளன.
பால் குடிக்கும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் 32 சதவீதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
மற்றொரு ஆய்வு பால் நுகர்வு மற்றும் விதைப்பை [டெஸ்டிகுலர்] புற்றுநோயின் அதிகரித்த நிகழ்வு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்டியது.
கருப்பை மற்றும் மார்பகக் கட்டிகளும் உருவாகின்றன, மேலும் அதிகமாக பால், பால் பொருட்களை உட்கொள்பவர்களுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுகின்றது.
ஐரோப்பாவில் வாழுகின்ற மக்களின் சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகமாக பால் பொருள் நுகர்வு ஒரு காரணமாக இருக்கலாம்.
விளம்பரம் : பசுவின் பால் குழந்தைகளுக்கு நல்ல உணவாகும், மற்றும் பால் பொருட்கள் எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் ஒரு சஞ்சீவி என்று, விளம்பரங்களில் பல ஊட்டச்சத்து நிபுணர்களால் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டாலும்.
குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்கு மேல் அது எந்த பாலாக இருந்தாலும் சரி, தாய்ப்பால் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். பாலுக்கு மாற்றீடாக உடலின் கால்சியத் தேவையை வேறு மூலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும்.
பால் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக