வெள்ளி, 5 ஜூன், 2020

.கோலி பாக்டீரியா 4500 மரபணுக்களை கொண்டது.மனித மரபணுவில் சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகள் உள்ளது.vமரபணு கோர்வையில் சுமார் 60-80 பில்லியன் DNA எழுத்துக்கள் இருக்கலாம் 

இந்த எழுத்துக்கள்  மூன்று மூன்றாக முற்றுப்புள்ளி, அல்லது கம, இல்லாமல் தொடர்ந்து எழுதப்படுகின்றதுஇது போல் ATG CGC AAT GCG ATA TAC

நான்கு வர்ண மரபணு எழுத்துக்கள் 20 வகை அமினோ அமிலங்களை உருவாக்கின்றது இந்த அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து ஒரு கோர்வையாகி மாறுபட்ட புரதங்களை சமைக்கின்றது. இந்த புரதங்களை கொண்டுதான்  இரத்தம், தசை, எலும்பு, மயிர், நகம் மற்றும் ஹார்மோன்கள் என்று எங்கள் உடல் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நான்கு வர்ண எழுத்துக்களில் ( நியூக்ளியோடைட்களில்ஏதாவது ஒரு எழுத்து  தவறாக வரையப்பட்டிருந்தால் எடுத்துக்காட்டாக: A க்கு பதில்  U இருப்பது மற்றும்  எழுத்துக்கள் எதுவும் இல்லாமல்   பொத்தல்கள் விழுந்திருந்தால் 

அந்த மனிதனின் தலையெழுத்தே மாறிப்போகும். அதாவது பரம்பரை நோயில் விழுந்து போய்கிடப்பான்.இந்த எழுத்துக்கள் மாறியிருப்பதற்கு பரம்பரை, வாழ்வியல், உணவு, நச்சு, கதிரியக்கம், மின் புகை  போன்ற பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றதுஇதனுடைய வெளிப்பாடு பரம்பரை வழி நோய்கள் ஆஸ்துமா, சர்க்கரை நோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும்

இதற்கான மரபணு சிகிச்சை முறைகளும் தற்சமயம் இருக்கின்றது. பழுதடைந்த மரபணுக்களை அடையாளம் கண்டு, மீள் கட்டமைப்பு செய்து தீராத நோய்களை  குணப்படுத்துவதுஎதிர்காலத்தில் இந்த மருத்துவம் தான் முதன்மை படுத்தப்படும்.
DNA சோதனை செய்து உங்களுடைய பரம்பரை நோயை அறிந்து கொள்ள முடியும்.
 20 அமினோ அமிலங்கள்
Glycin - கிளைசின்
Alanin - அலனைன்
Valin - வாலின்
Serin - செரின்
Leucin - லுசின்
Cystein - சிஸ்டைன்
Isoleucin - ஐசோலூசின்
Aspartat - அஸ்பார்டேட்
Threonin - த்ரோயோனைன்
Asparagin - அஸ்பாரகின்
Methionin - மெத்தியோனைன்
Glutamat - குளுட்டமேட்
Lysin - லைசின்
Arginin - அர்ஜினைன்
Phenylalanin - ஃபெனைலாலனைன்
Tyrosin - டைரோசின்
Tryptophan - டிரிப்டோபன்
Prolin - புரோலைன்
Histidin (?)
பெப்டைடு: என்பது அமினோ அமிலங்களுக்கு இடையில் பெப்டைட் பிணைப்பைக் கொண்ட ஒரு கரிம கலவை ஆகும். பல அமினோ அமிலங்களுடனான பொலிபீப்டைடுகள் தனித்துவம் வாய்ந்தது, நீண்ட பொலிபீப்டைட் சங்கிலிகளும் புரோட்டீன்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

◼️புரதங்கள்: அமினோ அமிலங்களின் மூலக்கூறு சங்கிலிகள் ஆகும். அமினோ அமிலங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒத்திசைவு புரதங்கள் மாறுபடுகின்றது,

- ஒரு பெப்டைட் (இரு, அமினோ அமிலம்), ஒரு பெப்டைட், புரதத்தின் அடித்தளம் என்று சொல்லலாம். - ஒலிகோபப்டைடு (10 வரை உள்ள அமினோ அமிலம்), - பொலிபீப்டைட் (10 அமினோ அமிலங்களுக்கு பிறகு

- புரதம் (50 அமினோ அமிலங்களுக்கு பிறகு ) புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றது. உ|த: இன்சுலின் 51 அமினோ அமிலங்கள் நீளம் கொண்டது ஆகவே, இது ஒரு புரதம் ஆகும். (அறியப்பட்ட புரதங்களின் பெரும்பகுதி 50 முதல் 1000 அமினோ அமிலங்கள் நீளம் கொண்டது.) அமினோ அமிலம்:  பெப்டைட் மூலக்கூறு சங்கிலிகள் படியெடுத்தல் >→ நகல்-பெயர்ப்பு >→ விளைபொருள்⇢ புரதம்

◻️ புரதம்: இரட்டைப் பின்னல் மரபணுக்கள் (டிஎன்ஏ) பிளக்கப்பட்டு, ஒற்றைப் பின்னல் (ஆர்என்ஏ) பல்வேறு வடிவ புரதங்களாக மடிக்கப்படுகின்றது, நீளம், வட்டம், தட்டை மற்றும் உருளை, உருண்டை , இவைகள் உடல் செல்களாக அதாவது தாய் செல்களிலிருந்து சரிபாதி பிரதி திசுக்களாக பரிணாமிக்கின்றன

|த: இரட்டை நிறமூர்த்தம் (சாதாரண உடல் செல்கள் 46) உ|த: (தோல் செல், கணையம் - இன்சுலின் புரதம் ) (நகம், தலைமயிர்- கெரட்டின் புரதம், மேலும் பாம்பு - நச்சு புரதம், சிலந்தி வலை-பட்டு புரதம்)

மற்றும் ஒற்றை நிறமூர்த்தம் (23 குரோமோசோம்) கொண்டது உ|த: தாயின் கருமுட்டை, தந்தையின் உயிரணுசெல்கள். தந்தை மற்றும் தாய்வழி எளிய குரோமோசோம்களின் தொகுப்பைக் கொண்டிருக்கின்றது இதனால்த்தான் மீண்டும் மீண்டும் இணைய தூண்டப்படுகிறது.

அனைத்து தாவரங்களும் (புரதங்கள்) பாலிபிளொயோடி, (இரண்டு குரோமோசோம்கள் ) இரட்டை நிறமூர்த்தங்களை கொண்டது. சில சமயங்களில் மூன்று நிறமூர்த்தங்களை (டிரிபோலிடி) கொண்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளில் பெரும்பாலும் தாவரங்களில் அறியப்பட்டிருக்கின்றன,

DNA  வில் நான்கு வெவ்வேறு நியூக்ளியோடைட்களை மட்டுமே கொண்டுள்ளது மேலும்  DNA ஆரம்பத்தில் RNA வில் இருந்து படியெடுக்கப்பட்டு பின்னர் ஒரு புரதமாக மொழிபெயர்க்கப்படுகின்றது.

இந்த புரதங்கள் ஒவ்வொரு உயிரினத்திலும் பலவிதமான பணிகளைச் செய்கின்றன,   ஒரு புரதத்தில் பல அமினோ அமிலங்கள் இருந்தாலும் நான்கு வெவ்வேறு நியூக்ளியோடைட்களின் வரிசையில் 20 அமினோ அமிலங்களின் வரிசையை  கொண்டுள்ளது.

|: இன்சுலின் 30+21 = 51 அமினோ அமிலங்கள்  இருந்தாலும்  நான்கு வெவ்வேறு நியூக்ளியோடைட்களின் வரிசையில் 20 அமினோ அமிலங்களின் வரிசையை  கொண்டுதான் கட்டமைக்கப்படுகின்றது.
DNA வரிசையிலிருந்து; DNA இழையாக உள்ள தளங்களின் வரிசை DNA வரிசை என குறிப்பிடப்படுகின்றது. டி.என்.ஏவின் தளங்கள் அடினீன் (A), தைமைன் (T), சைட்டோசின் (C) மற்றும் குவானைன் (G) ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு DNA வரிசை இதுபோல் தோன்றலாம்: ... ATG CGC AAT GCG ATA TAC ... DNA 🧬 இரட்டை இழைகளைக் கொண்டுள்ளது அதாவது இந்த வரிசை உண்மையில் இப்படி இருக்க வேண்டும்
... ATG CGC AAT GCG ATA TAC ...
... TAC GCG TTA CGC TAT ATG ...

இருப்பினும், மரபணுக் குறியீட்டிற்கு ஒரே ஒரு இழை மட்டுமே பொருத்தமானது மற்றும் அது மட்டுமே படிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சு|ரு: DNA  படியெடுத்தல் >→ நகல்-பெயர்ப்பு mRNA நான்கு வர்ணங்களும் தான்  படிக்கப்படுகின்றது.  A, G, C, U இந்த நான்கு நியூக்ளியோடைடுகள்  நான்கு தலையாக இருந்து உயிர்களை படைக்கின்றது. (படத்தில் உள்ளது போல்)

எங்கள் விஷயத்தில் அது இழையாக இருக்கும் ... ATG CGC AAT GCG ATA TAC .... சில குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்ட வார்ப்புருவாக எந்த இழையை (ஸ்ட்ராண்டை) பயன்படுத்த வேண்டும் என்பதை செல் அங்கீகரிக்கின்றது.

இந்த கட்டுரையில் DNA இன் mRNA மற்றும் mRNA இன் புரதத்திற்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நீங்கள் படிக்கலாம்.

குறியீட்டைப் பயன்படுத்த, (டிரான்ஸ்கிரிப்ஷனின்) , படியெடுத்தலின் போது T நியூக்ளியோடைடுகள் (வர்ணம்)  U ஆகின்றது என்பதை அறிந்து கொள்வது அவசியம். படியெடுத்தல் அல்லது டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு எங்களுடைய DNA  வரிசை இதுபோல் இருக்கும்: .. AUG CGC AAU GCG AUA UAC ... அதாவது DNA 🧬 வரிசையில் T இருக்கும் RNA வரிசையில் U இருக்கும்.

அமினோ அமில வரிசை : DNA அல்லது RNA. ஸ்ட்ராண்டில் (இழை) அடுத்தடுத்து மூன்று தளங்கள் கோடன்கள் அல்லது அடிப்படை மும்மூர்த்திகள் என குறிப்பிடப்படுகின்றன. மேலே உள்ள எடுத்துக்காட்டில், ATG / AUG, CGC, AAT / AAU போன்றவை ஒற்றை கோடன்கள் அல்லது அடிப்படை மும்மூர்த்திகளாக இருக்கும்.

ஒரு கலத்தின் முழு DNA வையும் ஒரு புத்தகமாக நீங்கள் நினைத்தால், கோடன்கள் புத்தகத்தில் உள்ளது  இது போன்று ATG  AUG  CGC  AAT  AAU எழுத்துகளாக இருக்கும். ஒரு மரபணு இந்த கோடன்களில் பலவற்றைக் கொண்டுள்ளது.

1. முக்குறியீடு ( மூன்று எழுத்துகள்/கோடன்கள்) 2. யுனிவர்சல் ( சகல  உயிர்களுக்கும் பொதுவானது) 3. பிறப்பு 4. காற்புள்ளிகள் இல்லாதது (,கமா இல்லாமல் தொடந்து எழுதுவது) 3 தளங்கள் = 1 அமினோ அமிலம் -> 4'4'4 = 64 சாத்தியங்கள்  

(நான்கு நியூக்ளியோடைடுகள் 20 அமினோ அமிலங்கள் 64 சாத்தியங்களை உருவாக்கின்றது.) குறியீடு - சூரியன் -> உள்ளிருந்து வெளியே படிக்கவும் (5'—>3')
தொடக்க புள்ளி -> AUG( Met) நிறுத்து புள்ளி -> UAA, UAG, UGA DNA: TAG AAG TTA GTC GTG ATC mRNA: AUG UUC AAU CAG CAC UAG அமினோ: Met Phe Ans Gln His. இல்லை

மெசேஞ்சர் (Messenger) mRNA கோடன்கள் (மும்மூர்த்திகள்(AUG) ◾ஸ்ட்ராண்டில் (இழை) டிரான்ஸ்கிரிப்ஷனின் (படியெடுத்தல் ) நியூக்ளியோடைடுகள்  ( நான்கு வர்ணம்)

மரபணு, நான்கு தலைகள் இந்த மண்ணில் எவ்வளவு அழகாக உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றது. மரபணு DNA 🧬 100-1000 நியூக்ளியோடைடுகள் கொண்ட ஒரு துண்டு, DNA வில் நான்கு வெவ்வேறு நியூக்ளியோடைட்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த நான்கு வர்ணங்களும் DNA ஆரம்பத்தில் RNA வில் இருந்து படியெடுக்கப்பட்டு பின்னர் 20 அமினோ அமிலங்களாக தொகுத்து மீண்டும் தேவைக்கான புரதமாக மொழிபெயர்க்கப்படுகின்றது.

நாங்கள் ஒன்றும் அசல் தலைமுறைகள் கிடையாது, பல தலைமுறைகள் கடந்து வந்த ஒரு நகல் உருவங்கள் அதாவது நாங்கள் ஒரு கொப்பி. எங்களுடைய 46 மரபணுக்களும் ஒழுங்காக நேர்த்தியாக இருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது  அது பல இடங்களில் எழுத்துக்கள் காணாமல் போய் பொத்தல்கள் விழுந்த நிலையில் தான் கிடக்கின்றது.

எங்களுடைய அத்துனை மரபணுக்களும் ஒழுங்காக நேர்த்தியாக இருந்தால் எங்களுடைய  நிலையே வேறு, உடல் அமைப்பிலிருந்து வீரம், அறிவு, ஆற்றல் வரைக்கும் வேறு விதமாக அமைந்திருக்கும்நாங்கள் இன்று வழுகி தழுவிய ஒரு இனமாக இருக்கின்றோம்.
மரபணு குறியீட்டு அறிவியல் கண்டுபிடிப்பைப் பின்பற்றுதல் 1953 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் எங்கள் மரபணு தகவல்களைக் கொண்டிருக்கும் மூலக்கூறான DNA🧬 வின் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார்கள்.

1958 ஆம் ஆண்டில், பிரான்சிஸ் கிரிக், முதலில்  மூலக்கூறு உயிரியலின் மையக் கோட்பாட்டை முன்வைத்தார் DNA 🧬 டி.என்.ஏவிலிருந்து RNA, ஆர்.என். வழியாக புரதத்திற்கான தகவல் ஓட்டம் நடைபெறுகின்றது என்பது அந்த கோட்பாடு, இருப்பினும் பல கேள்விகள் அவர்களுக்குள்ளே எழுந்தன, எஞ்சியிருந்தது ஒரு கேள்வி மட்டும்தான் இந்த நான்கு எழுத்துக்கள் DNA (A, C, T மற்றும் G)  RNA (A, C, U und G க்கு சமமான, அமினோ அமிலங்களின் இருபது எழுத்துக்களின் எழுத்துக்கள் எங்கள் புரதங்களை உருவாக்குமா ? மரபணு குறியீடு என்றால் என்ன?

1961 ஆம் ஆண்டில், மார்ஷல் டபிள்யூ நிரன்பெர்க் மற்றும் ஜொஹான் எச் மத்தேய் ஆகியோர் இந்த குறியீட்டின் முதல் எழுத்தை புரிந்துகொண்டு, UUU RNA வரிசை அமினோ அமிலம் ஃபைனிலலனைனை குறியீடாக்குகின்றது என்பதை வெளிப்படுத்தி காட்டியது.

ஹார் கோவிந்த் கோரானா பின்னர் அமினோ அமிலங்களின் செரீன்-லுசின்-செரீன்-லுசைன் ஆகியவற்றின் தொடர்ச்சியான நியூக்ளியோடைடு வரிசை UCUCUCUCUCUC குறியீடுகளைக் போட்டு காட்டினார். 1965 ஆம் ஆண்டில், நிரன்பெர்க் மற்றும் கோரானாவின் பணிக்கு வெற்றி கிடைத்தது மரபணு குறியீடு முற்றிலும் புரிந்துகொள்ளப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்திற்கான மூன்று நியூக்ளியோடைட்களின் (கோடன்கள் எனப்படும்) குறியீடுகளின் ஒவ்வொரு குழுவும், அதன் விளைவாக வரும் புரதத்தின் அமினோ அமிலங்களின் வரிசையை கோடன்களின் வரிசை தீர்மானிக்கின்றது  இதன் விளைவாக அதன் வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளும் உருவாகின்றது.

எங்கள் உடல் புதிதாக எதையும் உருவாக்கவில்லை அது ஒரு பிரதியை வைத்துக் கொண்டு கொப்பிதான் எடுத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் கோடான கோடி தடவைகளுக்கு மேல் பிரதி எடுக்கப்பட்ட ஒரு நகல் உருவங்கள் எங்களுடைய உண்மையான உருவம் எது என்பது எங்கள் மூலப்பிரதியை வைத்து ஒப்பீடு செய்யும் போதுதான் தெரியவரும் எங்கள் மரபணுவில் எத்தனை எழுத்துக்கள் தேய்ந்து  பொத்தல் விழுந்து கிடக்கின்றது என்று.

இந்த மண்ணிலுள்ள அத்துனை உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்று பதியம் வைத்து வளர்ந்த நகல் உயிரினங்கள் தான். நாங்கள் வாழுகின்ற  பூமி மற்றும் அதில் வாழுகின்ற அத்துனை உயிரினங்களும் ஒரு மூலத்திலிருந்து  கொப்பி/நகல் எடுக்கப்பட்டு வந்தவைதான்.

பாம்பின் விஷத்திலிருந்து சாப்பிடுகின்ற பருப்பு வரைக்கும் 20 அமினோ அமிலங்களின் வரிசையை கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதுவெறும் நான்கு வர்ண எழுத்துக்களை தலையாக வைத்துக் கொண்டு இந்த மண்ணில் உயிர்கள் அத்துனையும் படைக்கப்பட்டிருக்கின்றது.
முற்கோண முதல் உதவிகள் விபத்து கால முதல் உதவிகள் தலையில் பலமான அடி, காயம், இரத்த போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், எலும்பு முறிவு, நினைவிழப்பு, மயக்கம்.

இயல்பு வாழ்க்கை முதல் உதவிகள் மாரடைப்பு, சர்க்கரை மயக்கம், உயர் இரத்த அழுத்தம், உணவு ஒவ்வாமை, அலர்ஜி சொக், நச்சு, ஆஸ்துமா மூச்சடைப்பு, மது, வஸ்து போதை மயக்கம், மனவழுத்தம், சுற்றுச் சூழல் மாசு மற்றும் கோடைகால வெப்ப சோர்வு, மயக்கம் கருவுற்ற தாய்மார்கள், மழலைகள் முதியவர்களுக்கான பிரத்தியோகமான முதல் உதவிகள்.

நீர், நீச்சல் குளம் மற்றும் தீ, பட்டாசு விபத்து, இயற்கை பேரழிவுகள் மழை வெள்ளம் மற்றும் நில அதிர்வு மீட்பு முதல் உதவிகள் மேலும் நச்சு வாயு கசிவு, கெமிக்கல் விபத்து, அமில வீச்சு, அணுவுலை விபத்து கதிர்வீச்சு, நச்சுக்கடி, தற்கொலை முயற்சி, தடியடி, சண்டை மண்டை உடைப்பு அவசரகால முதல் உதவிகள்.  

போர்க்கால முதல் உதவிகள் வெட்டுக்காயங்கள், குண்டு பட்ட காயங்கள், உயிரியல் ஆயுதம் மற்றும் நச்சு வாயு தாக்குதல்களுக்கான முதல் உதவிகள் மேலும் பண்டமி, எபிடெமி தொற்று நோய்களுக்கான போர்க்கால முதல் உதவிகள்

பார்ப்பதற்கும் கேள்விப்படுவதற்கும் ஒன்று போல தெரிந்தாலும் முதல் உதவிகளை மூன்று வகையாக பிரித்து பயிற்ச்சி பெற வேண்டும்.

முதலுதவி மருந்து-பெட்டகம் வீட்டு, மருந்து பெட்டகம்அவசர தொலைபேசி எண்கள் (.... உங்கள் நாட்டின்)முதலுதவி வழிமுறைகள் ( இந்த கலியுகத்தில் )கத்திரிக்கோல், சிறிய வெட்டி, வெப்ப கையு மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும். http://mahesva.blogspot.de/2017/04/blog-post.html
கருவில் இருக்கும் மழலையை வைரஸ் தொற்று பாதிக்குமா.?
அமுதசுரம்/நச்சுக்கொடி பெரும்பாலும் நச்சுக்கள், பாக்டீரியாக்கள் வைரஸ்களை தடுத்துவிடுகின்றது, இருப்பினும் மதுபானம், போதைவஸ்து, சுற்றுச்சூழல் நச்சுக்கள் மற்றும் மலேரியா, ஜிகா, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல்  போன்ற நுளம்புகள் மூலம் பரவும் தோல் வழி தொற்று வைரஸ்கள் கண்டிப்பாக கருவிலிருக்கும் மழலையை பாதிக்கும்.

கொரோனா வைரஸ் சுவாச வழி தொற்று, நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக பாதிக்கின்றது. இந்த வைரஸ்கள் நுரையீரலை மட்டுமின்றி இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைத்தான் அதிகமாக பாதிக்கின்றது.

இதன் நிமித்தம் கருவிலிருக்கும் சிசுவை பாதிக்கலாம் மேலும் தாயின் கடுமையான இருமல் தும்மல் மற்றும் சுவாசிப்பது கடினம், மூச்சு விடுவதில் சிரமம் கருவிலிருக்கும் சிசுவுக்கு ஒட்சிசன் பற்றாக்குறை கூட ஏற்படலாம். இன்றைய ஒரு செய்தி ரஷ்ய ஒசேஷியாவில் ஒரு குழந்தை கொரோனா வைரஸுடன் பிறந்திருக்கின்றது.

🙏பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக