வெள்ளி, 5 ஜூன், 2020

வளர்சிதை மாற்ற கோளாறு (சர்க்கரைநோய்)
சர்க்கரை நோய்க்கு இரத்த சர்க்கரையை குறைத்தால் போதுமானதாக இருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை உடலுக்கு சக்தி வழங்கும் இன்சுலின் /குளுகோகான் மற்றும் சர்க்கரை(குளுக்கோசு) இவை இரண்டும் இணைந்த ஒரு பணி,சேவையைத்தான் உடல் எதிர்பார்கின்றது.

முதுமை காரணமாக இன்சுலின் சுரப்பது தாமதமாகலாம் அல்லது வேறு காரணங்களினால் நத்தை வேகத்தில் செல்களை வந்தடையலாம் மேலும் தொப்பை, கொழுப்பு கல்லீரல், மது, மாத்திரைகள் சுற்றுச்சூழல் நச்சுக்கள் போன்ற வேறு காரணங்களினால் எதிர்ப்படைந்து கூட போகலாம்.

இந்த நேரத்தில் சர்க்கரையை குறைத்தால் தாமதமாக சுரந்த இன்சுலினும் பயன்படாமல் முறிவுற்று நாளடைவில் உடல் இளைத்து துரும்பாக போகும். சர்க்கரையை உடல் பயன்படுத்தி ஆரோக்கியமாக இரத்த சர்க்கரை அளவினை மேன்படுத்த உதவும் இரண்டு மூலிகைகள் ஒன்று இலங்கை கறுவா மற்றது ஐரோப்பிய செலிரி-தழை.

இதனுடன் இன்சிலின் குறைபாட்டினை சமநிலைப்படுத்த ஊசி போட்டுக் கொள்வது அவசியமானது. இதன் நிமித்தம் உடல் இழந்த சக்தியை மீள் கட்டமைப்பு செய்ய உதவுகின்றது.

இன்சுலின் குறைபாட்டினை எப்படி தெரிந்து கொள்வது, ஒரு சிலருக்கு இரத்த சர்க்கரை 350 தாண்டியிருக்கும் போது கடுமையான பசி எடுக்கும் மற்றும் சிலருக்கு இரத்த சர்க்கரை பயன்படாமல் சிறுநீருடன் வெளியேறியிருக்கும் இதை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

இன்சுலின் ஊசி போட்டு மீண்டும் சக்தியை பெறமுடியும் சிறிது நேரத்தில் கடும் பசியும் நின்றுபோகும். (இன்சுலின் ஊசிக்கு பதில் குளுகோகான் ஊசி கூட பயன்படும் இது தொப்பையான நோயாளிகளுக்கு பொருத்தமாக இருக்கும்)

செலிரி-தழை இதையொரு மருந்தாக இல்லாமல், ஒரு உணவாக எடுத்துக்கொள்ளலாம் மேலும் நீண்டகால சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு கண்டிப்பாக சர்க்கரை இறக்கம் ஏற்படும் உடனடியாக வாழைப்பழம் பழரசம் அருந்தவும் இல்லாது போனால் புலம்பல்கள் அதிகமாகி வாய்ச்சண்டையில் வந்து முடியும்.(குடிகாரர்கள் போல் நடந்து கொள்வார்கள் என்பதைத்தான் இப்படி சுற்றிவளைத்து சொன்னேன்)

செலரியின் ஊட்டச்சத்து மதிப்புகள்: ஒரு கப் நறுக்கிய செலரியில்(300 கிராம்)
5 கிராம் ஃபைபர், 5 மி.கி விற்றமின் கே, 36 மி.கி ஃபோலிக் அமிலம், 22 மி.கி விற்றமின் A, 40 மி.கி கால்சியம், 263 மி.கி பொட்டாசிய சத்தும் உள்ளது.

சுவாரஸ்யமாக இவைகளுடன் கூடுதலாக, பிளஸ்சாக உள்ள சத்துக்கள் மற்றும் தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் நிறைய விற்றமின்கள் B1,B2,B6,E மற்றும் விற்றமின் C மற்றும் 16 கிலோகலோரி மற்றும் கொழுப்பு மட்டும் பூஜ்ஜியமாக உள்ளது.

விற்றமின்கள், கனிமச்சத்துக்கள் அத்துனை காய்கறி உணவுகளில் பொதுவாக இருந்தாலும் தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் என்பது ஒவ்வொரு தாவரங்களுக்கும் தனித்துவமானது இதன் அடிப்படையில்தான் மூலிகைகள், காய்கறிகள் தனித்துவமான தங்களுடைய கற்பக சக்தியை பெறுகின்றது.

தாவர நிறமிகள்: (ஃபிளாவனாய்டு) தாவர உணவுகளில் காணப்படும் ஆபிஜெனின் என்ற தாவர நிறமி.

ஃபிளாவனாய்டுகள் (அப்பிஜெனின்): தாவரங்களில் இரண்டாம் நிலை தாவரப் பொருள். ஒட்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள ஃபிளாவனாய்டுகள் தாவரங்கள் மற்றும் காய் கறிகள், பூக்களில் காணப்படும் செம்மஞ்சள் நிறப்பொருள் (செந்தூரம்) இது மருத்துவ ரீதியாக பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.

காய்கறிகள்: கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ், செலரி மற்றும் மூலிகைகள்: மிளகுக்கீரை, தைம், ரோஸ்மேரி, ஆர்கனோ, வோக்கோசு போன்ற சமையல் மனமூட்டிகளில் லுடோலின் காணப்படுகின்றது. மேலும் தாவர எண்ணெய்கள் நல்லெண்ணைய், ஆலிவ் எண்ணெயிலும் அப்பிஜெனின் கிடைக்கின்றது. ( தாவர நிறமியான அப்பிஜெனின் (ஃபிளாவனாய்டு) மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது)

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் செலரியின் விளைவுகள்:செலரியில் காணப்படும் தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருள்b தாவர நிறமியான அப்பிஜெனின் (ஃபிளாவனாய்டு) ஹார்மோன் சார்ந்த மார்பக புற்றுநோயின் வளர்ச்சியை மெதுவாக்குவது மட்டுமல்லாமல் வீரியம் மிக்க கட்டிகளையும் குறைக்கக்கூடும் என்று பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு கூறுகின்றது மேலும் மேலும் செய்யப்பட்ட பல ஆய்வுகள் இதன் உண்மை தன்மையை நிரூபிக்கின்றன.

வெளிர் மஞ்சள் செலரி தாவர நிறமியின் தாக்கமும் அதனுடைய குணமாக்கும் திறன் பற்றி உயிரியலாளரும் ஆராய்ச்சி குழுவின் தலைவருமான டாக்டர்.ஃபீல் டூபிங்கன் மாநிலம் / ஜெர்மனியில் விளக்குகின்றார்: பெருங்குடல், மார்பகம், கல்லீரல், தோல், எலும்பு, கணையம், புரோஸ்டேட்(விந்து உந்துப்பை) மற்றும் லுகேமியா இரத்த புற்றுநோயிலிருந்து அப்பிஜெனின் பாதுகாக்கின்றது என்ற அவரின் விளக்கம் எடுத்துக்கொள்ளும்படியாக இருந்தது.

அவர் மேலும் ஃபிளாவனாய்டுகள் (அப்பிஜெனின்): தாவரங்களில் இரண்டாம் நிலை தாவரப் பொருள் பற்றி விளக்குகிறார் இது ஒரு கட்டியின் ஆக்கிரமிப்பைக் குறைக்கின்றது மற்றும் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கின்றது என்று அவரின் விளக்கம் தொடர்கின்றது இருப்பினும் எனக்கு தேவையானதை நான் உள்வாங்கி கொண்டேன்.

மேலும் புற்றுசெல் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிற மெட்டாஸ்டேஸ்களை உருவாக்குகின்ற (புற்றுநோய் பரவல்) .புற்றுநோய்களுக்கு இடையில் சமிக்ஞை செய்யும் பாதைகளை அப்பிஜெனின் தடுக்கின்றது,

இதனால் அவை உடலில் ஒரு மூடிய உயிரணு குழுவாக பயணிக்க முடியாது மற்றும் புற்றுநோய் கட்டியில் புது இரத்த நரம்புகள் உருவாக்கத்தை தடுத்து வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது இதன் நிமித்தம் சர்க்கரை மற்றும் சத்துக்கள எடுக்க முடியாமல் கட்டிகள் சுருங்கி இறந்து போகின்றது. (காரணமின்றி இரத்த சர்க்கரை குறைந்து போனால் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்)

மேலும் கீமோதெரபியில் கூட அபிஜெனின் உதவுகின்றது. கீமோதெரபி போன்ற பிற புற்றுநோய் சிகிச்சை முறைகளுடன் செலரி-தழை அபிஜெனின் சிறந்தது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது என்று புற்றுநோய் டாக்டர்கள் கூறுகின்றார்கள்.

இது வெவ்வேறு கீமோதெரபியில் நிரூபிக்கப்பட்டுள்ளது மேலும் செலரி புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்குவதிலிருந்து உடலைத் தடுக்கின்றது இதன் நிமித்தம் புற்றுநோயை குணப்படுத்துவதில் முன் நின்று வழிநடத்துகின்றது சுருங்கச் சொன்னால் கீமோதெரபியை உள்வாங்கும் திறனை வலுப்படுத்துகின்றது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது: தாவரப் பொருட்களின் தாலைடுகள் மற்றும் நைட்ரேட் உப்புகள் இரத்த நாளங்களிலுள்ள சுவர்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்று அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்தம் குறைந்த அழுத்தத்தில் பாய்கின்றதை செலரி தழைகள் உறுதிசெய்கின்றது.

சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை நச்சுத்தன்மையாக்கும் பொருட்களை வெளியேற்றுகின்றது: இரத்த நாளங்களை அகலப்படுத்துவதன் மூலம் நிணநீர் மண்டலத்திலும் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவை இரத்தத்துடன் இணைந்து கழிவுகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன..... அவை முழு வேகத்தில் தீயாக வேலை செய்கின்றன,..... சுற்றுச்சூழல் நச்சுகளை கொண்டு செல்கின்றன.....

உணவு மற்றும் மாத்திரைகளிலிருந்து வரும் நச்சுக்கள், தேவையற்ற பிற பொருட்கள் உலோகங்கள் பாதரசம், அலுமினியம், பிளாஸ்டிக், மேலும் உடலில் இருந்து பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் (சிறுநீர்ப்பை தொற்று) போன்ற நோய்க்கிருமிகளை அவசரமாக வெளியேற்றுகின்றது.

சிறுநீர்பை மற்றும் சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றது: செலரி நாரிலுள்ள ஔடத எண்ணெய் பொருள் சிறுநீரகங்களை பலப்படுத்துகின்றது மற்றும் சிறுநீர் பெருக்கி டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நன்கு உதவுகின்றது, மேலும் மறுதலிக்கும் தொற்று நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கின்றது.

இரைப்பை மற்றும் வயிற்றைப் பாதுகாக்கின்றது, குடலைத் தூண்டி செரிமானத்தை இலகுவாக்கின்றது: டானின்கள் (சாயமேற்றும் இரசாயன பொருட்கள்) மற்றும் இயற்கையான ஆல்கஹால் எத்தனால் இரைப்பை சளிச்சுரப்பியை வலுப்படுத்தி மென்மையாக்குகிறது மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி கிருமியின் தாக்குதல்களிலிருந்து இரைப்பையை பாதுகாக்கின்றது.

செலரியில் நார் பொருள், ஃபைபரின் ஆதிக்கம் அதிகம் உள்ளதினால் குடலைத் தூண்டி துரிதப்படுத்துகின்றது, இதன் நிமித்தம். குடல் மந்தம், மலச்சிக்கலைத் தடுக்கின்றது. இது ஆரோக்கியமான குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றது இதனால் ஒரு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக உதவுகின்றது, ஏனெனில் 80 சதவீதம் வரை நோயெதிர்ப்பு சக்தி பெருங்குடலில் அமர்ந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமில மிகைப்பு மற்றும் நெஞ்செரிச்சலுடன் போராட உதவுகின்றது: டானின்கள் (சாயம் ஏற்றும் பொருட்கள்) இரைப்பை வயிற்று அமிலத்தின் உற்பத்தியை மிகவும் புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்துகின்றன, அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சல் குறைவாக நிகழ்கின்றது என்று ரியாத்தில் உள்ள கிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீக்கம் மற்றும் அழற்சிக்கு எதிரான செயல்கள்: ஆர்கானிக் கிளைகோசைடு கலவைகள் மற்றும் சாய குர்செடின் ஆகியவை நுண்ணிய அழற்சியை ஊக்குவிக்கும் புரதங்களைத் தடுக்கின்றன. இந்த செயல்திறன் நீரிழிவு/ சர்க்கரை நோய், தமனி பெருங்குடல் அழற்சி மற்றும் சுய-உடல்-தாக்கி-நோய் (ஆட்டோ இம்யூன் நோய்கள்) தீராத நாள்பட்ட வலி, வாத நோய் போன்றவைக்கு எதிராகவும் மனச்சோர்வு மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகளுக்கு செலரி நல்ல தீர்வாக செயல்படுகின்றது.

கல்லீரல் பிரச்சினைகளை குறைக்கின்றது: செலரி கல்லீரலின் மந்தநிலைக்கு எதிராக செயல்படுகின்றது கல்லீரல் வாங்கிகள்/வழங்கிகள் மற்றும் நொதியம் (என்சைம்) வேலையை அதிகரிக்க செய்கின்றது மற்றும் சேமிக்கப்பட்ட கொழுப்பை உடைக்கின்றது என்பதை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் நிமித்தம் கொழுப்பு கல்லீரல், தொப்பை குறைக்கப்பட்டு சர்க்கரை எரிக்கப்பட்டு, உடல் தீயாக வேலை செய்கின்றது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 கிராம் செலரி சாப்பிடும்போது இது வேலை செய்கின்றது அதே நேரத்தில் மூளையை இளமையாக வைத்திருக்க கடுமையாக பாடுபடுகின்றது.

மூளையை இளமையாக வைத்திருக்கின்றது, முதுமை நோய்க்கு எதிராக செயல்படுகின்றது மற்றும் மனச்சோர்வைத் தடுக்கின்றது: பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி இரண்டாம் நிலை செலரி பொருள்; பொதுவில் தாவர ஆற்றல் பொருள்கள் ஃபிளாவனாய்டு, அபிஜெனின் நரம்பு செல்களுக்கு இடையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி மூளையின் திறனை ஊக்குவிக்கின்றது. இது நினைவகம் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றது இது மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மையை தடுக்கின்றது.

கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது: ஒரு நாளைக்கு 200 முதல் 300 கிராம் செலரி சாப்பிடும்போது முழுப்பலனையும் அடைய முடியும். செலரி, HDL இரத்த லிப்பிட்களை அதிகரிக்கசெய்கின்றது அதே நேரத்தில் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் LDL கொழுப்பை 7 சதவிகிதம் குறைத்து கொழுப்பின் வரவு செலவினை கட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள உதவுகின்றது.

பொதுவில் தாவரத்தின் நார்ச்சத்து இழைகள் இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்துகின்றன இது இரத்த சர்க்கரையை பச்சை வரம்பில் வைத்திருக்கின்றது. அதாவது சர்க்கரைக்கு கிரீன் சிக்னல் காட்டுகின்றது.

செலரி இலை தழையில் நிறைய நார்ச்சத்து இருக்கின்றபடியால் இரத்த சர்க்கரையை உறுஞ்சுவதை நத்தை வேகத்தில் எடுத்துவருகின்றது இது வயதுமுதிர்ந்த சர்க்கரை நோயாளிகளுக்கு தாமதமாக வெளிப்படும் இன்சுலினுக்கு இணையாக செயல்படுகின்றது. மேலும் சிறுநீரகங்களில் தேங்கியுள்ள சர்க்கரை நச்சு கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகங்களை புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மருத்துவ மையம், மஷாத் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகம். எகிப்தியன் ஹெல்வான் பல்கலைக்கழகம், ரியோ டி ஜெனிரோ பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம்,

ஈரானில் உள்ள மஷாத் பல்கலைக்கழகங்களின் ஆய்வின் முடிவுகளை தொகுத்து மேலும் எனக்கு தெரிந்தவற்றையும் ஒரு கோர்வையாக்கி இந்த கட்டுரையை எழுதியிருக்கின்றேன். உங்கள் பல்கலைக்கழகங்கள் கூட செலரி பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்த கட்டுரை உதவும் என்று நினைக்கின்றேன் குறிப்பாக தாவரங்களில் இருக்கும் இரண்டாம் நிலை தாவரப் பொருள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்வதற்கு உதவும்.

🙏பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   …

sri rama jyam-2016.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக