வியாழன், 14 அக்டோபர், 2021

நாளைய சந்ததிக்காக பூமி தன்னைத் தானே சுத்திகரிக்க தொடங்கிவிட்டது.

ஒரு காட்டில் வாழ்ந்த மான்கள் ஒரு நாள் கடவுளை பார்த்து புலி சிங்கங்கள் எங்களை அடித்து தின்னுகின்றது அவைகளை கண்டிக்க சொன்னது. கடவுள் மான்களுக்கு என்ன பதிலை சொல்லியிருப்பார்.. விலங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவைகளை நான் உருவாக்கினேன்.

மனிதனின் இறப்பு என்பது இயற்கையானது. மனிதனின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இயற்கை அவ்வப்போது பேரழிவுகளை உருவாக்கி கொண்டுதான் இருக்கும். மான்கள் புலிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு கடவுள் அவைகளுக்கு ஓடும் திறனை கொடுத்தது போல் மனிதனுக்கு அறிவையும், தன்னை காக்கும் திறனையும் வைத்தான், உன்னால் முடிந்தால் உன்னை நீயே காப்பாற்றிக் கொள் கடவுள்(என்) மீது பழியை போடாதே

என்னதான் நீங்கள் ஆழிப்பேரலை சுனாமியை திட்டி தீர்த்தாலும் அது மீண்டும் ஒருநாள் வரும் என்பது தான் உண்மை. இயற்கை பேரழிவு என்பது பூமி தன்னைத் தானே புரணமைத்துக் கொள்ளும் திட்டங்கள் அதை கண்டு பயந்து நடுங்காதே இயற்கைக்கு மனிதன் எவ்வளவு கெடுதல்களை செய்திருக்கின்றான் அது பொறுத்திருக்குமா பொங்கித்தான் எழும்.

உச்சத்திற்கு ஏறுவதற்கு உதவிய ஏணியை எட்டி உதைப்பார்கள் மூடர்கள்” நல்வாழ்விற்கு உதவிய கடவுளை இழிவுபடுத்தி உரைப்பது பிற்கால வாழ்கையில் மோசமான விளைவை தேடித்தரும்.

உனக்கான காலம் குறுகியது, முடிந்தவரை உன்னை நீயே காப்பாற்றிக்கொள் மற்றவர்களை நம்பி ஏமாந்துபோகாதே”



புதன், 13 அக்டோபர், 2021

மலக்குடல் மற்றும் மலவாயில் பெரும் குடலின் கடைசி பகுதி 16 செமீட்டர் நீளமுள்ளதை மலக்குடல் என்று அழைக்கப்படுகின்றது. மலக்குடல் மற்றும் குத கால்வாய் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பிந்தையது ஆசனவாயில் திறக்கின்றது.

மலக்குடல் அடிவயிற்று குழிக்கு கீழே உள்ள சிறிய இடுப்பில் அமைந்துள்ளது மற்றும் இது கொழுப்பு திசுக்களால் சூழப்பட்டுள்ளது, அதன் குடல் வேர்களையும் சுற்றியுள்ளது. மலக்குடலின் மிகக் குறைந்த பகுதி சுருக்கு தசைகளினால் சூழப்பட்டுள்ளது, இது மலம் கழிக்கும் தூண்டுதல் வரும் வரை மலக்குடலில் மலத்தை சேகரிக்க உதவுகின்றது.

மலம் கழிக்கும் போது சுழல் தசைகள்(மூலம்) இறுக்கத்தை தளர்த்தி குடல் செரிமான கழிவுகளை காலியாக்கின்ற சேவையை செய்கின்றது. குத கால்வாய், மூடுதசை மற்றும் சிரை மூடி ஆகியவை முக்கியமாக மலம் மற்றும் செரிமான வாயு/காற்றுத் தொடர்ச்சியாக வெளியேறும்போதும் இருமல் மற்றும் தும்மும் போதும் மலம் கொட்டுண்டு போகாமல் பாதுகாக்கும் ஒரு சிக்கலான பொறிமுறையில் செரிமான வாயு மற்றும் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கழிப்பறை காகிதம் அல்லது தண்ணீர் பயன்படுத்துவது எது சரியானதாக இருக்கும் மலம் கழித்தவுடன் மென்மையான கழிப்பறை எண்ணைய் காகிதம் கொண்டு துடைத்துவிடுவதுதான் மிகச்சிறந்தது தண்ணீர் சவர்க்காரம் போட்டு கழுவக்கூடாது அல்லது குறைவாக பயன்படுத்தவும்.

குறிப்பாக மழலை, குழந்தைகளுக்கு நீர் கழுவலை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளுங்கள். மிருதுவான எண்ணைய் நனைந்த காகிதம் பயன்படுத்தவும் இல்லாது போனால் மலவாயிலுள்ள கொழுப்பு, மெழுகு சுரப்பிகள் உலர்ந்து அரிப்பெடுக்கத்தொடங்கும் இதனுடைய நீண்டகால பாதிப்பு மூலநோய்க்கு வழிவகை தேடித்தரும்.

கழிப்பறை காகிதம் பயன்படுத்துவதில் எந்தவிதமான சுகாதார கேடுமில்லை நீர் கழுவலை காட்டிலும் நூறுமடங்கு சுத்தமானது. என்னடா இப்படி சொல்லிட்டாரே என்று நினைக்காதீர்கள் உடலின் நன்மை, தேவை கருதிமட்டுமே பேசுகின்றேன்.

மனிதன் என்னதான் நவநாகரீகம் அடைந்திருந்தாலும் அவன் உடல் இன்றுவரைக்கும் கற்காலத்திற்கு ஏற்றவாறுதான் இயங்குகின்றது”

மூலம், மூல நோய் எதனால் ஏற்படுகின்றது, உண்மையில் மூலநோய்  என்று தனியாக இல்லை மாறாக, அவை மனித உடற்கூறியலின் இயற்கையான ஒரு பகுதியாகும். ஒவ்வொருவருக்கும் அவை உள்ளன, மேலும் அவை மலக்குடலின் ஒரு பகுதி முக்கியமான நோக்கத்திற்காக சேவை செய்கின்றது.

மலக்குடலின் சளி சவ்வில் மூலம் உள்ளது. ஹேமிராய்டுகள் நல்ல இரத்த விநியோகத்துடன் கூடிய குகை உடல்கள், அவை நரம்புகள் மற்றும் தமனிகளுடன் சேர்ந்து ஒரு வகையான வாஸ்குலர் குஷனை உருவாக்குகின்றன.

வெளிப்புற சுழல் தசைகள், சுருக்குதசைகள் குடல் வாயிலை அடைக்க உதவுகின்றது. கடின உழைப்பு, பாரங்கள் தூக்கும் போதும், தும்மல் அல்லது இருமலின் போதும் ​​இந்த  மூலம் பயனுள்ளதாக செயல்படுகின்றது குடல் செரிமான உள்ளடக்கங்களை தற்செயலாக பிதுங்கி வெளியேறாமல் தடுக்கின்றது.

இதைச் செய்ய, மூல தசை ஓய்வில் இருக்கும்போது இரத்தத்தால் நிரப்பப்பட்டு, ஆசனவாயை மூடுகின்றது. மலக்குடல் காலியாகும்போது ​​விறைப்பு திசுக்களில் இருந்து இரத்தம் வெளியேறி, அவற்றின் அளவைக் குறைத்து மலம் வெளியேற அனுமதிக்கின்றது. இது இயல்பான ஒரு செயல்பாடுஒரு சிலருக்கு  மூலத்தின் மிகைப்படைந்த செயல்பாடு  பிதுங்கி வெளியே தள்ளி இரத்த கசிவினை ஏற்படுத்துகின்றது.

மூல நோய் பெண்களை விட ஆண்கள்தான் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். முக்கியமான இந்த மூல தசை பிதுங்கி வெளியே தள்ளுவதற்கு பல காரணங்கள் உள்ளது  முதிர்வயது, பரம்பரைகுடும்ப அழுத்தம் மனநிலை அல்லது மரபணு குறைபாடு,நாள்பட்ட மலச்சிக்கல்(முக்கி மலம் கழித்தல்) மற்றும்  தொழில்முறை பாரம் தூக்குதல்உடற்பயிற்சி பளுதூக்குதல் அதிகநேரம் உட்கார்ந்திருக்கும்  அலுவலக வேலைகள் உடற்சூடு, உடல் பருமன், நீரிழப்பு மலமிளக்கியின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தொற்றுநோய் காரணிகள்.

அறியாமையினால் பலர் இந்த மூல நோயினால் அவதிப்படுகின்றார்கள் வராமல் தடுப்பதற்கு முன்கூட்டியே உங்களுக்கான மூலநோய் காரணிகளை தேடுங்கள்.

தேநீர் சிகிச்சை டேன்டேலியன் வேர், இஞ்சி




நியூரோடெர்மாடிடிஸ்,(நரம்புத் தோல் அழற்சி) அரிக்கும் தோலழற்சி: விடாது அரிக்கும் இந்த சரும கோளாறு பரம்பரையாக வருகின்ற ஒரு குறைபாடு, இதற்கும் நோயெதிர்ப்பு அமைப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கின்றது, அலர்ஜி/ஒவ்வாமை நோய்க்கு எப்படி நோயெதிர்ப்பு சக்தி செயல்படுகின்றதோ அதேபோலத்தான் இதற்கும் செயல்படுகின்றது. இருப்பினும் இது அலர்ஜி நோய் கிடையாது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பல நோய்களின் முகப்புரையாக நோயெதிர்ப்பு அமைப்பு இருக்கின்றது. சர்க்கரை நோய் வகை-1 தொடங்கி சொறி சிரங்கு, ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி வரைக்கும் 80க்கும் மேற்பட்ட சுய-உடல்-தாக்கி நோய்கள் இருக்கின்றது அதாவது நோயெதிர்ப்பு சக்தியே நேரடி காரணியாக இருக்கின்றது.

காய்ந்து உலர்ந்து போன சருமம் இதை தொடக்கி வைக்கும் முதன்மை காரணியாக செயல்படுகின்றது, பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு பரம்பரையாக பிறப்பிலிருந்தே இந்த சரும குறைபாடு வருகின்றது. பின்னால் வளர்ந்து பூப்பெய்த பின்னர் இந்த சரும கோளாறு தானாகவே இல்லாது போகின்றது மற்றும் சிலருக்கு தொடர்கின்றது.

தாய் தந்தையினருக்கு இருந்தால் பிறப்பிலிருந்தே பிள்ளைகளுக்கும் ஏற்படும். சின்ன வயதில் சொறி சிரங்கு, எக்ஸிமா, நியூரோடெர்மாடிடிஸ் அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பிற்காலத்தில் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி மற்றும் சர்க்கரைநோயினால் அவதிப்படுவார்களாக இருப்பார்கள்.

எங்களுடைய தோல் எப்படி செயல்படுகின்றது, நியூரோடெர்மாடிடிஸ் நோயாளிகளுக்கு தோலில் ஏதாவது மாற்றம் உள்ளதா, எங்களுடைய தோல் மூன்று அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது மேலடுக்கு சருமம், இடைச்சருமம் மற்றும் அடிச்சருமம் இதில் மேலடுக்கு சருமம் அல்லது வெளித்தோல் லிப்பிட், சரும கொழுப்புகளால் நிறைந்தது.

இந்த லிப்பிட், சரும கொழுப்பு பரம்பரையாகவோ அல்லது வேறு காரணங்களின் நிமித்தம் அழிந்து போனால் எடுத்துக்காட்டாக: தினமும் வெந்நீர் குளியல், அடிக்கடி சவர்க்காரம் போட்டு கழுவுதல், அதிகளவில் ஒப்பனைபொருள்களின் பயன்பாடு, சர்க்கரைநோய், அதிகளவு மதுபானங்களினால் இந்த லிப்பிட், சரும கொழுப்பு அழிக்கப்படுகின்றது அல்லது குறைவுபடுகின்றது.

பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூச்சை காளான் மற்றும் சூடு குளிர் போன்ற அந்நிய ஊடுருவலிருந்து உடலை பாதுகாக்கும் அரணாக இருக்கும் இந்த லிப்பிட், சரும கொழுப்பு இல்லாது இருப்பதினால் நோய்க்கிருமிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடும்.

சைட்டோகைன் இந்த இடத்தில்தான் நோயெதிர்ப்பு சக்தி அதனது செயல்பாட்டினை முடுக்கிவிடுகின்றது. அரிப்பு ஏற்பட்டு சொறிந்து சொறிந்து சிவந்து புண்ணான இடத்தில் வீக்கத்துடன் அழற்சியை ஏற்படுத்துகின்றது. மனித நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் காயங்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக வினைபுரிகின்றது.

நோயெதிர்ப்பு அமைப்பு வெளியிடும் சைட்டோகைன் இன்டர்லூகின்-6 (IL-6) போன்ற தூது பொருட்களால் உடலில் வீக்கம் தூண்டப்படுகின்றது. இந்த பெப்டைட் ஹார்மோன் உயிரணுக்களில் உள்ள சிறப்பு ஏற்பி மூலக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டு அழற்சியை ஊக்குவிக்கின்றது.

எங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, காய்ச்சல் வந்தால் வைரஸ் தூண்டுதலாக இருந்தாலும் காய்ச்சலை தோற்றுவிப்பது எங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பு, இருமல் தும்மல் அரிப்பு எரிச்சல் வீக்கம், அழற்சி வாந்தி பேதி போன்ற பல உபாதைகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு வெளியிடும் தூது பொருட்கள்தான் காரணியாக இருக்கின்றது.

இரத்தத்தில் சைட்டோகைனின் அதிகப்படியான அளவு இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கும் இதனுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இதனுடைய வெளிப்பாடு இருக்கும். காரணம் இல்லாமல் உடலில் ஏற்படும் கடுமையான அரிப்பு புற்றுநோய் அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் அரிப்புக்கு காரணியான ஹிஸ்ட்டமின் வெளிப்பாடு தொடர்ந்து விடாது அரிக்கின்றது. இதனுடைய தொடராக ஏற்படும் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி நிரந்தரமாக இந்த நோயாளியை பீடிக்கின்றது.

அதிகளவு ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவது அத்தியாவசியமான சரும கொழுப்பு மெழுகு சுரப்பிகளை அழித்துவிடுகின்றது. சருமத்திற்கு கொழுப்பு எவ்வளவு முக்கியமானது அதை மருந்து மாத்திரைகள் ஒப்பனை பொருட்கள் மூலம் அழிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நியூரோடெர்மாடிடிஸ் அரிக்கும் தோலழற்சியை குணப்படுத்தமுடியும், அதற்கான காரணிகளை களைந்து, தோல் தொற்று நோய்கள் ஏற்படாமல் நல்ல பராமரிப்பு எண்ணைய், களிம்பு தடவுதல் மூலம் கட்டுப்படுத்தினால் சிறிதுகாலத்தில் முற்றுலுமாக இல்லாது ஒழிக்கமுடியும். கவனமின்றி இருந்தால் இது தொடக்கி வைக்கும் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜியை குணமாக்கமுடியாமல் போகும் என்பதுதான் இதனுடைய உச்சம்.

எங்களுடைய உடல் நோயெதிர்ப்பு என்னும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது”

சைட்டோகைன்கள் இன்டர்லூகின்-6, (IL-6 ) உயர்வுக்கு  நியூரோடெர்மாடிடிஸ் ,தோல் அழற்சியை தவிர்த்து புற்றுநோய், கொரோனா வைரஸ் காரணியாக இருக்கின்றது இவைகளை எதிர்த்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் T-செல்கள் போராடுகின்றது.

புற்றுநோய் செல்கள் பல்வேறு மூலக்கூறு தந்திரங்கள்  மூலம்  நோயெதிர்ப்பின் சாதாரண தாக்குதல் முயற்சிகளை தவிர்க்கின்றன. இதனால், T- செல்கள் மந்தமாகவே இருக்கும் இவைகள்  தங்கள் எதிரி புற்றுநோய் செல்கள் என தெரிந்ததும் தாக்குதலை ஆரம்பிக்கின்றது.

T செல்களின் தீவிர தாக்குதல் பல பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன T-செல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன, இருப்பினும் சில சமயங்களில் அவை கட்டுப்பாட்டை இழக்கின்றன அவற்றின் அதிகப்படியான செயல்பாடு நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கூடிய காய்ச்சல், இதய படபடப்பு, மூச்சுத் திணறல்  ஏற்படும்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக CAR -T செல் சிகிச்சை செய்யப்படுகின்றது.

இன்டர்லூகின் -6, கோவிட்-19 அதிகரிக்க செய்கின்றது இதன் நிமித்தம் நுரையீரல் அல்வியோலி  வீக்கம் ஏற்படுகின்றது

சைட்டோகைன்  உற்பத்தி செய்யும்  செல்கள். - மேக்ரோபேஜ் - T-லிம்போசைட் - மாஸ்ட் செல் - எண்டோடெலியல் செல்கள் ( இரத்த தமனி செல்கள்)- ஃபைப்ரோபிளாஸ்ட் (தோல் செல்கள்) கிரானுலோசைட்- பாசோபிலிக் கிரானுலோசைட் (பாசோபில்ஸ்) - நியூட்ரோபில் கிரானுலோசைட் (நியூட்ரோபில்ஸ் - ஈசினோபில் கிரானுலோசைட்  (ஈசினோபில்ஸ்.)

ஆரோக்கியமான தோல். லிப்பிட் சரும கொழுப்பு  இங்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றது இதன் நிமித்தம் நோய்கிருமி அந்நிய ஊடுருவலை தடுக்கின்றது.

நியூரோடெர்மாடிடிஸ்  (நரம்புத் தோல் அழற்சி) லிப்பிட் சரும கொழுப்பு, ஈரப்பதம் இல்லாதது. அந்நிய ஊடுருவலை  தடுக்கும் ஆற்றலை இழக்கின்றது இதன் நிமித்தம் நோய்கிருமிகள், பாக்டீரியாக்கள் ஒவ்வாமை பொருட்களின் ஊடுருவல் அரிப்புக்கு வழிவகை செய்கிறது.