சனி, 11 பிப்ரவரி, 2023

Let's leave a healthy new world to the next generation.

ஆரோக்கியமான புதியதொர் உலகத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம்; மனிதனுடன் இயற்கை தொடுத்த யுத்தத்தில் இயற்கை ஒரு நாள் வெல்லும். அதுவொரு கணக்கு வைத்திருக்கின்றது இவ்வளவு சுமையைத்தான் தன்னால் சுமக்க முடியுமென்று, அந்த கணக்கு வர அதுவாக நிறுத்திக் கொள்ளும்

இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை எவராலும் சொல்லிவிட முடியாது ஆனால் உனக்கான காலம் குறுகியது. அதிலிருந்து தப்பிப்பிழைப்பது உன் வலிமையை பொறுத்தது.

புதிய கொரோனா  நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது ஒப்பீட்டளவில் குறைவாகவும், அதனுடைய நோய் குறிகள் லேசானதாக இருந்தாலும் ஒரு நோயின் விளைவுகள், நீண்ட மற்றும் பிந்தைய கோவிட்   விளைவுகள் ஒருபோதும்  எங்களை விட்டு நீங்காது. கொரோனா வைரஸ்களை சாதாரணமாக நினைக்காதீர்கள் திரும்பத் திரும்ப உங்களை வந்து அது தாக்கும்.

அதற்கு எதிராக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள ஒரே ஆயுதமாக இருப்பது கொரோனா தடுப்பூசிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் சொல்ல வந்த தலைப்புக்கு திரும்ப வருகிறேன். "பத்து முட்டை தின்றவன்  பயில்வானும் கிடையாது தயிர்சாதம் உண்டவன் நோஞ்சானும் இல்லைபலமும் பலவீனமும்  உணவை சார்ந்ததல்ல, அது மரபணுவை சார்ந்தது.

உணவு உனக்கான உரிமை அதில் யாரும் தலையிட போவதில்லை. பழுதுபட்ட பூமி உன்னிடத்தில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றது. இறைச்சி சாப்பிடாமல் இருப்பதன் மூலம் அல்லது குறைப்பதன்  மூலம்  நாம், எங்களுடைய பூமிக்கு  எவ்வளவு உதவ முடியும்?

இறைச்சி ஒரு நல்ல உணவு தான் இருப்பினும் இறைச்சி உற்பத்தி  காலநிலைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது. சைவத்திற்கான பொதுவான வாதம் அது காலநிலை பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றதுநம் முன்னோர்கள் சைவ உணவுகளை முதன்மைப்படுத்தியதற்கான   காரணம் அது இயற்கையை பாதுகாக்கின்றது.

இந்த எண்ணம் எங்கிருந்து வருகின்றது, அதன் பின்னால் எவ்வளவு உண்மை இருக்கின்றது?

கார்பன் டை ஒக்சைடு [CO₂]. போன்ற  கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றங்களில் பெரும்பாலானவை இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு பொருட்களின் தயாரிப்பால் ஏற்படுகின்றன. ஏனெனில் இவை தாவர அடிப்படையிலான உணவுகளை விட உற்பத்தியின் போது அதிக தீங்கு விளைவிக்கும் பசுமை இல்லா வாயுக்களை ஏற்படுத்துகின்றன.

இறைச்சி உற்பத்தி சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது நிரூபிக்கப்பட்ட ஒன்று. கால்நடைகள் போன்ற[ ருமினண்ட்] அசைபோடும் விலங்குகளினால்  வெளியிடப்படும் மீத்தேன் வாயு [CH₄] இது CO₂ விட வலுவான கிரீன்ஹவுஸ் விளைவைக் கொண்டுள்ளதுஎனவே இது சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும்.

இறைச்சி உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்கள் இது உலகின் 77 சதவீத விவசாய நிலங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள மூன்றில் விலங்குகளுக்கு தீவனம் பயிரிடவும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பகுதிகளை மக்களின் தாவர உணவு அடிப்படையிலான தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடி நிலங்களாக  உணவுக்கு பங்களிக்க பயன்படுத்தலாம். இதன் பொருள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு மாடுகளை வளர்ப்பதை குறைத்து, அதை காய்கறி பழங்கள் சாகுபடி நிலங்களாக பயன்படுத்தலாம்.

இதன் நிமித்தம், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் சுமார் பன்னிரெண்டு சதவீதம் குறையும். நாம் அனைவரும் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால், அது 30-50 சதவீதம் கூட இருக்கலாம். மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைக்கு இறைச்சி சாப்பிடாமல் இருப்பதை விட இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றது  புவி வெப்பமடைதலை  தடுப்பதற்கு,

மேற்கோளாக: போக்குவரத்து வழிகளைக் குறைக்கவும் ஆற்றலைச் சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் இறக்குமதியாகும் உணவைத் தள்ளி வைத்துவிட்டுபிராந்திய ரீதியாக சாகுபடி செய்யப்பட்ட காய்கறி பழங்களை வாங்கப்பட வேண்டும்.

இலங்கை இந்தியாவிலிருந்து காய்கறிகள் மீன் வகைகள் வருவதற்கு ஏகப்பட்ட கார்பன் டை ஒக்சைடு [CO₂] உமிழப்படுகின்றது.

சைவ உணவுகளை எடுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்நீங்கள் எடுக்கும் சைவ உணவுகளில் நல்ல இரும்பு சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய புரதம் மற்றும் விற்றமின் பி-12 விநியோகம் இறைச்சியை விட்டு விடுவதன் காரணமாக   இழக்கப்படுகின்றன

இறைச்சிக்கு பதிலாக பச்சை காய்கறிகள் கீரை வகைகள் மற்றும் சிறு முழு தானியங்கள்  கூடுதலாக, பால் பொருட்கள் மற்றும் முட்டைகள், சோயா, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகள் மூலம் இந்த இழப்பை ஈடுசெய்யலாம். தேவைப்பட்டால் விற்றமின் மாத்திரைகள் கூட எடுத்துக்கொள்ளலாம்.

சொல்வது எளிது, கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. முயற்சித்து பாருங்கள் முயற்சி திருவினையாக்கும். 


அறிவாளிகளிடமிருந்து முட்டாள்களை வேறுபடுத்தும் 5  பழக்கவழக்கங்கள்.

1) முட்டாள்கள் தங்கள் தவறுக்கு மற்றவரை குற்றம் சாட்டுகிறார்கள்.

புத்திசாலிகள் மற்றவர்களை ஊக்குவிக்கவும் உதவவும் முயற்சி செய்கிறார்கள்.


2) முட்டாள்கள் மற்றவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணிக்கிறார்கள்.புத்திசாலிகள் எப்போதும் தானாகவே மற்றவருடன் உடன்படுகிறார்கள்.


3) முட்டாள்கள் மற்றவர்களைவிட தாங்களே சிறந்தவர்கள் என்று நினைக்கின்றார்கள்.

புத்திசாலிகள் மற்றவரின் புதிய  தகவல்கள் கருத்துகளுக்கு தங்கள் மனதை திறக்கிறார்கள்.


4) முட்டாள்கள் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கின்றார்கள்.

புத்திசாலிகள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசுகின்றார்கள்.


5)  முட்டாள்கள் தங்களுடைய பாதையை மாற்றிக் கொள்வதில்லை. அறிவாளிகள் தங்களுடைய தவறான பாதைகளை திருத்திக் கொள்கின்றார்கள்.


"விழுந்துவிட்டேன் என்று கவலைப்படுவதை காட்டிலும் எப்படி எழுந்திருப்பது என்று சிந்திப்பவன் புத்திசாலி"

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine


"மேன்மைகொள் சைவம் தளுவு அது இந்த உலகை மலர்ந்திடசெய்யும்".



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

Vitamin D3 + K2 intake via tablets [supplements]; Vitamin D3 supplementation is less effective when BMI is high

விற்றமின் D3 + K2 மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ளுதல் [ சப்ளிமெண்ட்ஸ்]; பிஎம்ஐ அதிகமாக இருக்கும் போது விற்றமின் D3 யின் சேர்க்கை குறைவான செயல்திறன் கொண்டவை [Body-Mass-Index]

ஒரு உடல் விற்றமின் டியை உணவு விநியோகத்தின் [சப்ளிமெண்ட்ஸ்] மூலம் எவ்வளவு திறம்பட வளர்சிதைமாற்றம் செய்கின்றது என்பது உடல் நிறை குறியீட்டெண் [பிஎம்ஐ] சார்ந்தது. இது அமெரிக்காவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருண்ட பருவத்தில் நமது விற்றமின் டி3 வீட்டிற்கு போதுமான சூரியனை நிரப்புவது கடினம். அதற்கு நீங்கள் பணம் செலவு செய்து தெற்கே, வெப்பமண்டல நாடுகளை நோக்கிசெல்ல வேண்டும். மாத்திரைகள் இதற்கான ஒரு மாற்றீட்டை உங்களுக்கு உறுதியளிக்கின்றன,

விற்றமின் டி3 செரோடோனினுடன் நெருங்கிய தொடர்புடையது விற்றமின் டி3 உங்கள் உடல் மகிழ்ச்சியின் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றது.

இருப்பினும் அவை எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு எடுத்துக் கொள்வது அதிகப்படியான அளவு ஏற்படாமல் இருப்பதற்கு உறுதி செய்யப்படுகின்றது.

விற்றமின் டி அதிகமாக உட்கொள்வதால், உடலில் கால்சியத்தின் அளவுகள் [ஹைபர்கால்சீமியா] அதிகரிக்கின்றது, [கால்சியம் அயனி இரட்டை நேர்மறை மின்னூட்டம் உள்ள ஒரு தனிமம்  Ca2+] 

விற்றமின் டி3 அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். கடுமையான சந்தர்ப்பங்களில், இது உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் அல்லது இதயத்துடிப்பில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்

இது கடுமையான குமட்டல், பசியின்மை, வயிற்றுப் பிடிப்புகள், வாந்தி அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில்,  சிறுநீரக செயலிழப்பு, இதயத் துடிப்பு மாற்றங்கள், சுயநினைவின்மை மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.

விற்றமின் டி உடலில் சூரிய ஒளி கிடைக்கும் கோடை காலத்தில் தேவையான அளவு சேமித்து வைக்கப்படுகின்றது.இன்றைய உணவு வழங்கல் முறையில் தேவையான அளவு விற்றமின் டி3, அயோடின், ஃபோலிக் அமிலம்  சேர்க்கப்பட்டிருக்கின்றது. எனவே மாத்திரைகள் முழுங்குதல் அவசியமா..?   இது உங்களுக்கும் மருத்துவருக்குமான முடிவுகள்.

தோல் அடுக்குகளில் சேமிக்கப்படும் கொழுப்புத் திசுக்கள் சூரிய தகடு போல் செயல்பட்டு விற்றமின் டி யை உற்பத்தி செய்கின்றது. இதற்கு சிறுநீரகங்கள் ஒப்புதல் அளிக்கின்றனர் விற்றமின் டி உற்பத்திக்கு கொலஸ்ட்ரால் கொழுப்புகள் முக்கியமானவை.

உடலில் உள்ள திசுக்கள் விற்றமின் டி யை சேமிப்பு திறன் கொண்டது. முக்கியமாக மனித உடலின் கொழுப்பு மற்றும் தசை திசுக்களில் சேமிக்கப்படுகின்றது.

மற்றும் சிறிய அளவு கல்லீரலிலும் காணப்படுகின்றது. ஒட்டுமொத்த சேமிப்புத் திறன் ஒப்பீட்டளவில் இது பெரியது மற்றும் குளிர்காலத்தில் விற்றமின்- D விநியோகம் [சப்ளைக்கு] திறன் பட இந்த சேமிப்பு பங்களிக்கின்றது.

விற்றமின் டி குறைபாடு அடிக்கடி ஏற்படும் சோர்வு, ஆகியவற்றில்  வெளிப்படுத்துகின்றது. இருண்ட பருவத்தில் பெரும்பாலும் குளிர்கால மனச்சோர்வு என்று அழைக்கப்படும் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். நோய்த்தொற்றுகள் மற்றும் முடி உதிர்தலுக்கான அதிக உணர்திறனையும்  இதன் குறைபாட்டினால் காணலாம்.

விற்றமின் டி3 அதிகமாக உட்கொள்ளும் போது இரத்தத்தில் கால்சியத்தின் அளவும். அதிகரிக்கின்றது அதற்கான காரணம் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு விற்றமின் டி3 தேவைப்படுகின்றது.

எனவே விற்றமின் டி3 உட்கொள்ளல் அதிகரித்தால், குடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதும் அதிகரிக்கின்றது.

கடுமையான விற்றமின் டி3 குறைபாடு எலும்பில் உள்ள கால்சியம் கரைக்கப்படுகின்றது இது எலும்பு தேய்மானத்துக்கு வழிவகுக்கும். விற்றமின் டி3 யை மாத்திரைகள் மூலம் எடுக்கும் போது அதை ஈடுகட்டுவதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விற்றமின் டி3 யின் அவசியம் தெரிந்து தான் இயற்கை அதை இலவசமாக வைத்திருக்கின்றது. ஐரோப்பா வாழ் மக்கள் இருண்ட குளிர்காலத்தில் குறைந்தது 4-5 மாதங்கள் விற்றமின் டி3 யை விலைகொடுத்து வாங்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

விற்றமின் D3 ஐ எடுத்துக் கொள்ளும்போது விற்றமின் K2 சேர்க்கை முற்றிலும் அவசியமானது.

விற்றமின் டி3, ஏ,ஈ மற்றும் கே2 [மெனாகுவினோன்] கொழுப்பில் கரையக்கூடிய விற்றமின்களில் ஒன்றாகும், மேலும் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுகின்றது. ஆஸ்டியோகால்சின் மற்றும் எம்ஜிபி [மேட்ரிக்ஸ்-ஜிஎல்ஏ புரோட்டீன்] ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு மெனாகுவினோன் முக்கியமானது ,

ஆஸ்டியோபிளாஸ்ட்கள் என்பது எலும்பு செல்கள் ஆகும், அவை எலும்புப் பொருளின் உருவாக்கம் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். அவை எலும்பு திசுக்களில் சிறிய குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்கின்றன. அவர்களின் எதிரிகள் ஆஸ்டியோக்ளாஸ்ட்கள், அவை எலும்பை சிதைக்கும்

இது கால்சியத்தை எலும்புகளுக்கு எடுத்துச் சென்று அது உள்ள இடத்தில் சேமித்து வைக்கின்றது. இரண்டு விற்றமின்களும்[ K2, D3] உடன் இணைந்து செயல்படுகின்றது.

ஆஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும் போதுமான அளவு மெனாகுவினோன் உதவுவதாக ஆய்வுகள் உள்ளன .

விற்றமின் K2 எலும்புகளின் நுண்ணிய கட்டமைப்பில் செயல்படுகின்றது, குறிப்பாக கொலாஜன் உருவாக்கம் மற்றும் கொலாஜன் அமைப்பில். இது எலும்புகளை உருவாக்கும் ஆஸ்டியோபிளாஸ்ட்களின் உருவாக்கத்தையும் தூண்டுகின்றது

அதிகப்படியான கால்சியத்தின் அளவைத் தவிர்க்க, அதை சேமிப்பதற்கு விற்றமின் டி3+கே2 அவசியமானது.

விற்றமின் K2 குறைபாடு, மெதுவாக குணமடையும் காயங்கள் மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு, இந்த இரண்டு அறிகுறிகளுக்கு மேலாக மூக்கில் இரத்தம் கசிதல் மற்றும் காயத்தால் ஏற்படும் இரத்தப்போக்கு போன்றவை விற்றமின் கே குறைபாட்டைக் குறிக்கலாம்.

விற்றமின் கே1 மற்றும் விற்றமின் கே2 . இவை இரண்டும் சேர்ந்து விற்றமின் கே குழுவை உருவாக்குகின்றன. குறிப்பாக பச்சை இலை காய்கறிகளில் விற்றமின் கே1 உள்ளது.

விற்றமின் கே2 பொதுவாக இயற்கையான பாக்டீரியா நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது, மற்றும் கல்லீரலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மறுபுறம் முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு பொருட்கள் மூலம் உட்கொள்ளலாம்.

விற்றமின் கே இரண்டு வடிவங்களில் இயற்கையாகவே கிடைக்கின்றது. விற்றமின் K2 இன் வெவ்வேறு வடிவங்கள் உள்ளன, அவை உடலுக்கு அவற்றின் செயல்திறனில் வேறுபடுகின்றன, இதன் மூலம் உற்பத்தி செயல்முறையயில் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது.

தாவரங்களில் இருப்பது விற்றமின் டி2 (எர்கோகால்சிஃபெரால்)  விலங்குகளில் இருப்பது விற்றமின் டி3 (கோல்கால்சிஃபெரால்)


"இல்லங்கள் அருகில் இருந்தும் உள்ளங்கள் தொலைதூரமானது. காயப்பட்ட மனிதனை மீண்டும் காயப்படுத்தாமல் வாழப்பழகு "



ஞாயிறு, 29 ஜனவரி, 2023

Prolonged Coronavirus: Prolonged Covid is a disorder with many faces.

நீண்ட கொரோனா பாதிப்பு: நீண்ட கோவிட் என்பது பல முகங்களைக் கொண்ட ஒரு கோளாறு.  பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு தீவிரத்தன்மையின் வெவ்வேறு அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிலருக்கு நோய்த்தொற்றின் கடுமையான கட்டத்திற்குப் பிறகும் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகும் ஒரு சில அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் விவரிக்கின்றார்கள்.

இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபட்டவை மற்றும் சில நேரங்களில் மிகவும் தனித்துவமான வேறுபட்டவையாக காணப்படும். அறிவாற்றல் செயலிழப்பு,  மூச்சுத் திணறல், இதய பிரச்சினைகள், வாசனை மற்றும் சுவை  அறிதல் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது உடல் மன சோர்வு ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

இது மாறுபட்ட நோய்க்குறிகளை காட்டுகின்றது என்பதை ஆதாரப்படுத்துகின்றது. பொதுவில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் சார்ஸ்-கோவி-2 போன்ற நோய் தொற்றுகள் நாட்பட்ட நோய்களையும் ஏற்படுத்துவதாக நீண்ட காலமாக  சந்தேகப்பட்டதை நிரூபனமாக்கின்றது..

மேற்கோளாக: ஹான்டாவைரஸ்கள் உலகம் முழுவதும் நிகழ்கின்றன மற்றும் இந்த வைரஸ்கள்பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. நோய்க்கிருமிகள் எலிகள் போன்ற கொறித்துண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகின்றன. இதனுடைய நீண்ட கால விளைவுகள் சிறுநீரக செயலிழப்புகளுக்கு காரணியாகின்றது.

கொரோனா வைரஸும் இதுபோன்ற ஏதாவது ஒரு நீண்ட கால விளைவுகளை கொண்டு வருமா என்றால் நரம்பு மண்டலங்களை பாதிப்பதாக அறியப்படுகின்றது.[autoimmune disease சுய-உடல்-தாக்கி நோய்]

மேலும் சேதமடைந்த நுரையீரல் நோயின் கடுமையான போக்கு கொரோனா வைரஸ் தொற்று கோவிட்-19 ஆல் குறிப்பாக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, சிஓபிடி அல்லது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளன.

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நோயாகும், இது காற்றுப்பாதைகளை சுருக்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். சிஓபிடி என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும், இது மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் மூச்சடைப்பு/மூச்சுத் திணறல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றது.

இந்த நோயால், மூச்சுக்குழாய் நாள்பட்ட காலத்திற்கு வீக்கமடைகின்றது, இது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை படிப்படியாக அழிக்கின்றது.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் , நுரையீரல் இணைப்பு திசுக்களின் நீண்டகால வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அல்வியோலி தழும்புகளுக்கு இடையே உள்ள மென்மையான இணைப்பு திசு. நுரையீரல் விறைத்து, விரிவடைய முடியாதபடி நுரையீரல் செயல்திறனை முடக்குகின்றது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட இதய செயல்திறன் பலவீனமான இதய செயல்திறன் கொண்ட நோயாளிகளும் கோவிட்-19 இன் கடுமையான போக்கிற்கு குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒரு நிலையான நோயெதிர்ப்பு அமைப்புக்கான வலிமையைக் கொண்டிருக்கவில்லை.

கொரோனா  வைரஸ் தொற்றின் நீண்டகால பாதிப்புகளை மக்கள்  கொஞ்சம் கொஞ்சமாக  உணர/சொல்ல தொடங்கியுள்ளார்கள்.

முன் எச்சரிக்கையாக இரத்த பரிசோதனை மூலம், [தானியக்க ஆன்டி உடல்கள் மற்றும் 20 புரதங்கள் இரத்த அடையாளம்] கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அது நீண்ட கோவிட் நோய்க்குறியாக அச்சுறுத்துகின்றத என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கொரோனா நாசி தடுப்பு மருந்து : இதுவரை காலமும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தசைகளுக்குள் செலுத்தப்பட்டு. அவை முதன்மையாக உடலுக்குள் ஒரு பாதுகாப்பை உருவாக்குகின்றன.

சுவாசக் குழாய் வழியாக நமக்குள் நுழைகின்ற சார்ஸ்-கோவ்-2 வைரஸ்களை தடுப்பதற்காக முன்கூட்டியே   அந்த இடத்தில் பலமான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருந்தால் நமது முழு உடலும் பலமான பாதுகாப்பு அரணுக்குள்ளே வந்துவிடும்.

சுவாச வைரஸ் என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ். அதனுடைய முதல் ஆக்கிரமிப்பு நுரையீரல் தான் எனவே, முதலில் பாதுகாக்கப்பட வேண்டியது நமது காற்றுப்பாதைகள்தான்

கொரோனா தடுப்பூசி,சிரிஞ்சிற்கு பதிலாக இப்போது நாசி ஸ்ப்ரே அறிமுகமாகின்றது.

கொரோனாவுக்கு எதிரான நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்து இந்தியாவில் சந்தைக்கு வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் ஒரு கொரோனா ஸ்ப்ரே அங்கீகரிக்கப்பட்டது,

இது கொரோனா வைரஸ்கள் உட்பட அனைத்து வைரஸ்களிலும் 99 சதவீதம் வரை கொல்லும் என்று கூறப்படுகின்றது.

இது ஐரோப்பாவிலும் ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகின்றது. ஆராய்ச்சி எவ்வளவு தூரம் உள்ளது மற்றும் தடுப்பு மருந்து பொருட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்ற ஆய்வுகள் நடந்து வருகின்றது.

இதற்கிடையில் இந்தியாவில் முதல் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது.

பாரத் பயோடெக் இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிராக நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இது சளி சவ்வு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு வருவதாகவும், இதனால் தொற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஐரோப்பாவிலும் சீனாவிலும் கிடைக்கும் கொரோனா நாசி ஸ்ப்ரேகள் வித்தியாசமாக வேலை செய்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இருப்பினும் லேசான மற்றும்  வீட்டிலேயே சிகிச்சையளிக்ககூடிய  மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்,  தற்போதைய ஓமிக்ரான் மாறுபாட்டுடன் மற்றும் பெரும்பாலான பழைய மாறுபாடுகளுக்கு பதில் அளிக்குமாம் என்று நம்பப்படுகின்றது.

எங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி, தன்னுடைய அமைப்பில், ஒவ்வொரு எதிராளிகளையும் கண்காணித்து விசாரிப்பதற்காக தனித்தனி அதிகாரிகளை நியமித்திருக்கின்றது.  நுரையீரல் பாதிக்கப்படும் போது அவர்கள்தான் அந்த இடத்திற்கு விரைந்து ஓடிவருவார்கள்.

மகரந்தம்/மாசு [ஆஸ்துமா/அலர்ஜி]  மூக்கு, காற்றுப்பாதையை கண்காணித்து விசாரிப்பதற்காக  மாஸ்ட் செல்கள் பணியில் ஈடுபடுகின்றது. 

சிஓபிடி நோயினால் நுரையீரல் பாதிக்கப்படும் போது மேக்ரோபேஜ்கள் பணியில் ஈடுபடுகின்றது.  [புகைத்தல்/மற்றும் காரணிகள்]

கொரோனா நோயினால் நுரையீரல் பாதிக்கப்படும் போது ஒரு பெரிய ராணுவமே  [இம்யூனோகுளோபுலின் IgM, IgA, IgG ] பணியில் ஈடுபடுகின்றது. 

ஒரு நாட்டுக்குள்ளே ராணுவம் புகுந்தால் என்னவாகும், கொரோனா வைரஸ்களுடன் எதிர்த்து போராடும் போது சொந்த திசுக்களையும் சேர்த்து அழிக்கும். வைரஸ்களை விட ஆபத்தானது மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு சக்தி,

ஒரு முறை கிளர்ச்சி அடைந்தால் அதை தணிப்பது கடினம், அது உங்களை வாழ்நாள் பூராகவும் தொல்லை பண்ணும்.

மேற்கோளாக: ஒவ்வாமை/அலர்ஜி, குணமாக்க முடியாது இருப்பினும் மருந்து மாத்திரைகள் மூலம்  அவ்வப்போது ஏற்படும் அலர்ஜியை தணித்துக் கொள்ளமுடியும் [தானியக்க ஆன்டி உடல்கள் மற்றும் autoimmune disease சுய-உடல்-தாக்கி நோய்] 

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் அரிதானவை மற்றும் தடுப்பூசி சேதம், அதற்கான இழப்பீடு அரிதாகவே அங்கீகரிக்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசியால் பாதிப்புகள் உள்ளன. ஒரு ஊடக அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசியின் விளைவாக உடல்நலக் கேடு பாதிப்புகளுக்கு நிதி உதவிக்காக இதுவரை 6,000 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன

ஐரோப்பா/ஜெர்மனியின் மத்திய மாநிலங்கள் இதுவரை 250 பேருக்கு மேல் இழப்பீடு வழங்க விரும்புகின்றன.

மற்றுமொரு செய்தித்தாள் அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசியின் கடுமையான விரும்பத்தகாத பக்க விளைவுக்கான இழப்பீடுக்காக மத்திய மாநிலங்கள் இதுவரை 253 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.  நாடு தழுவிய கணக்கெடுப்பின்படி, ஜெர்மனி/பவேரியா மாநிலங்களின் ஓய்வூதிய அலுவலகங்களில் 61 மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா 38 அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுடன் முன்னணியில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அளவிலான சேதத்திற்கு மேல், மாநிலம் மாதத்திற்கு 164 முதல் 854 யூரோக்கள் வரை வாழ்நாள் முழுவதும் அடிப்படை ஓய்வூதியத்தை வழங்குகின்றது. கூடுதலாக, தேவைப்பட்டால், சிகிச்சை செலவுகள் ஈடுசெய்யப்படும் மற்றும் தொழில்சார் சேத இழப்பீடும் வழங்கப்படும்.

அதற்கு நீங்கள்,  தடுப்பூசியால் எனக்கு பாதிப்புகள் உள்ளன என முறையாக  ஆவணப்படுத்த வேண்டும்.

1808 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, மேலும் 3968 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. இதய தசையின் வீக்கம், சைனஸ் வெயின் த்ரோம்போசிஸ் மற்றும் குய்லின்-பார்ரே சிண்ட்ரோம், நரம்புகளின் அரிய நோயானது, முக்கியமாக தடுப்பூசி சேதமாக அங்கீகரிக்கப்படுகின்றன. ஒரு ஆய்வு குழுமத்தின் கூற்றுப்படி, அவ்வப்போது இறப்புகளும் உள்ளன.

குய்லின்-பார்ரே சிண்ட்ரோம் என்பது: தசை பலவீனத்தை ஏற்படுத்தும் பாலிநியூரோபதியின் ஒரு வடிவமாகும். இந்த பலவீனம் பொதுவாக சில நாட்கள் முதல் வாரங்கள் வரை மோசமாகிவிடும், பின்னர் படிப்படியாக மறைந்துவிடும் அல்லது தானாகவே போய்விடும்.

கொரோனா வைரஸ் இன்னும் மிகவும் ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகள், நோயாளிகளுக்கு ஆபத்தானதாக மாறலாம். 






ஞாயிறு, 22 ஜனவரி, 2023

Parasites Let me introduce you to one more thing

ஒட்டுண்ணிகள்: வைரஸ்கள் பாக்டீரியாக்களை தாண்டி உங்கள் உடலிலே வாழ்ந்து உங்களை துன்பப்படுத்தும் இன்னும் ஒருவரைப் பற்றி  நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

போஸ்ட்மார்ட்டம் செய்த 10 சடலங்களில் 9 சடலங்கள் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 78% வழக்குகளில் இறப்புக்கு ஒட்டுண்ணிகள் தான் காரணமாக இருந்தது . [இது ஒரு நோயியல் நிபுணரின் அதிர்ச்சி தரும்  வாக்குமூலம்] 

இறந்தவர்களின் உடல்களில் ஒட்டுண்ணிகள் பலர் நினைப்பது போல, குடல், இரைப்பைக் குழாயில் மட்டுமல்ல அவற்றின் காலனிகள் உள் உறுப்புகளிலும் வாழ்கின்றன, ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் மூளையில் கூட வாழ்கின்றன

மேலும் அவைகளின் முட்டைகள்  [லார்வாக்கள்] உயிருள்ள உடல்களின் திசுக்களை உணவாக உட்கொள்கின்றன. அவற்றின் கழிவுகள் இதயம் உட்பட அத்துனை உறுப்புகளின் செயல்பாட்டையும் சீர்குலைக்க வழிவகுக்கின்றது.

ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தால்  அதற்கான காரணம் கொழுப்பு/ உயர் இரத்த அழுத்தம் என்ற பார்வையில், ஒட்டுண்ணிகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகின்றது. அப்படித்தான் இல்லை,  அவர் தொடர்ந்து பேசும் போது,

அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு வழக்கு. 49 வயதான ஒரு நோயாளியின் மூளை முழுவதும் ஒட்டுண்ணிகள் மற்றும் அவற்றின் முட்டை [லார்வாக்களால்]  நிரம்பியிருந்ததை கண்டறிந்தார்.

மரணத்திற்கான காரணம் [இஸ்கிமிக் பக்கவாதம்]கால்-கை வலிப்பு [பிட்ஸ்]. ஆனால் இது ஒரே ஒரு விளைவுதான் உண்மையில்  ஒட்டுண்ணிகள் வெறுமனே மனித மூளை திசுக்களை உணவாக உட்கொண்டு அதை உயிருடன் விழுங்கின. இந்த நோயாளி தனது வாழ்நாள் முழுவதும் தலைவலி, தூக்கம் மற்றும் நினைவகக் கோளாறுகளால் [விசர்] பைத்தியத்தினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கின்றார்.

ஏற்கனவே பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தபோது, இதனுடன் கால்-கை வலிப்பு சேர்க்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் இறந்தார். இவை தோராயமான தரவு அல்ல,  78% துல்லியமான புள்ளிவிவரங்கள் என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

இயற்கையான அல்லது வேறு காரணங்களின் இறப்புகளில் 80 விழுக்காடு மரணங்கள்  ஒட்டுண்ணிகளால் ஏற்படுகின்றன.  ஐரோப்பா மக்களின் முழுமையான எண்ணிக்கையில், சுமார் 1.5 மில்லியன் இறப்புகள் ஒட்டுண்ணிகள் தான் காரணியாக இருந்திருக்கின்றது. 

ஒட்டுண்ணிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள் நேருக்கு நேர் மோதும் வைரஸை காட்டிலும்  ஒட்டுண்ணிகள் ஆபத்தானவை  அவை உங்கள் உடலில் ஒட்டியிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக உங்களை சாகடிக்கும். அவை உங்கள் உறுப்புகளை அழிக்கின்றன, அவை உங்கள் இரத்தத்தை நச்சுகளால் விஷமாக்குகின்றன, அவை உங்கள் மூளை மற்றும் நுரையீரல் திசுக்களை உணவாக உட்கொள்கின்றன.

பொதுவாக சிகிச்சையளிக்கப்படாத அல்லது  சிகிச்சையளிக்க முடியாத  பல நோய்கள்உள்ளன அதற்கு முழுக்காரணியாக இருப்பதும் இந்த ஒட்டுண்ணி தொற்று பிரச்சினையே.

வெளிப்படையாக, ஐரோப்பா/ஜேர்மனியில் உள்ள மக்கள் மிகவும் பொறுப்பானவர்கள் இருப்பினும். நோய்கள் மிகவும் தாமதமாகும் போது தான் அவர்கள் மருத்துவரிடம் செல்கிறார்கள். வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாய்வு ஆகியவற்றை யாராவது கவனிக்கிறார்களா என்றால் இல்லை அதை அடிக்கடி வந்து போகும் நோயாக விட்டுவிடுகின்றார்கள்.

இவைகளை நீங்கள் புறக்கணிக்காதீர்கள்,  அபாயங்களை குறைத்து மதிப்பிடாதீ்ர்கள், ஒட்டுண்ணிகள் குடலில் வாழும் வெறும் புழுக்கள் என்று  நினைக்காதீர்கள் ஆனால்  அவைகள் அப்படியல்ல ஆபத்தானவைகள்.

வழுக்கத்தலை, உங்கள் தலைமுடியை நிற்க வைக்கும் விஷயங்களில் கூட  ஒட்டுண்ணிகள்  மிகப்பெரிய காரணிகளாக இருக்கின்றன. ஒட்டுண்ணிகள் உங்கள் உடலில் அதிகமாகும் போது முடி உதிர்வது கூட கட்டுப்படாது.

ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன அவை கண்ணுக்கு தெரியாத மிகச்சிறியவை ஆனால் மிகவும் நச்சுத்தன்மையுள்ளவை  அவை உங்கள் உடலை விஷமாக்குகின்றன, இரத்த ஓட்டத்தில் ஊடுருவுகின்றன, இதயத்தின் இயக்கத்தை அவற்றின் நச்சுகளால் குறைக்கின்றன,

இஸ்கீமியா, இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கின்றன. அவை நுரையீரல், கல்லீரலில் குடியேறுகின்றன, மூளைக்குள் ஊடுருவுகின்றன, மேலும் உள்/வெளி உறுப்புகள் கண்களில் கூடவாழ்கின்றன.

பெரும்பாலான [விசர்] பைத்தியங்களுக்கு  ஒட்டுண்ணிகள் தான் முழுமுதற் காரணியாக இருக்கின்றது.

முக்கிய உறுப்புகளை பாதிக்கும் ஹெல்மின்த்ஸின் பிரதிநிதிகள் டைனியா சோலியம், எக்கினோகாக்கஸ் (எக்கினோகாக்கஸ் கிரானுலோசஸ்), ட்ரைசினெல்லா  (ட்ரைசினெல்லா ஸ்பைரலிஸ்). எச்சினோகாக்கஸ் என்பது எச்சினோகாக்கஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு புழுவின் லார்வா நிலை. இவை அனைத்து வகையான ஒட்டுண்ணிகளும் ஒரு நபரைக் கொல்லக்கூடியவை.

ஒட்டுண்ணிகளை குணப்படுத்தும் மருந்துகள்: குடல் ஒட்டுண்ணிகளுக்கு தீர்வுகள் உள்ளன. ஆனால் மூளை, இதயம் நுரையீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் குடியேறிய ஒட்டுண்ணிகளை குணப்படுத்துவது கடினம்  மற்றும் குறுகிய காலத்தில் ஆபத்தை விளைவிக்ககூடியது.

ஒட்டுண்ணிகளின் பரவல் பெரும்பாலும் சுத்தமில்லாத உணவுகள் குடிநீர் மற்றும் கொசு, ஈக்கள், படுக்கை போன்ற பாதிக்கப்பட்ட மேற்பரப்பு தொடர்புகள் மூலம் நிகழ்கின்றது.

ஒட்டுண்ணிகளின் முட்டைகள் இந்த மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ளும். இதன் நிமித்தம் ஒருவர் மீண்டும் மீண்டும் தொற்று நோயை பெறலாம்.

ஒட்டுண்ணிகளின் முட்டைகள்  வெளியில் இரண்டு வாரங்கள் வரை உயிர்வாழ முடியும். துரதிர்ஷ்டவசமாக, ஒட்டுண்ணி தொற்றுநோயில் பெரும்பாலும் பெரிதாக அறிகுறிகள் இல்லை.   நீண்ட காலத்திற்கு பிறகுதான் அதனுடைய வேலையை காட்ட ஆரம்பிக்கும்.அதுவும் தன்னை மறைத்து இன்னுமொரு நோய்க்கு  கையைக்காட்டும்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட நபர்கள் மலக்குடலின் பகுதியில் அரிப்பு இருப்பதாக புகார் செய்யலாம் இது பொதுவாக இரவில் அதிகமாக இருக்கும்.

கூடுதல் அறிகுறிகள்: மலச்சிக்கல். வயிற்றுப்போக்கு. குறைந்த பசி. குமட்டல், தலைவலி, பற்களை அரைத்தல். மஞ்சள் நிற சருமம்.

உதவிகுறிப்புகள்: உங்கள் விரல் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் மற்றும் கை கழுவாமல் உணவு உண்ண வேண்டாம்.

முடிந்தவரை துணிகளை கிருமிநாசினி சூடான வெந்நீரில் துவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

திராட்சை விதை எண்ணெய், புதினா, பூண்டு/உள்ளி சின்ன வெங்காயம், வினிகர் ஊறுகாய்கள் இயற்கையான ஒட்டுண்ணி எதிர்ப்பியாக செயல்பட்டு, உடலை உட்புறத்தில் இருந்து சுத்தப்படுத்துகின்றது இது குடல் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்.