நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி, எந்த நோய் எதிர்ப்பு அதற்கு பொறுப்பாக வேலை செய்கின்றது.?: எங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மிகப்பெரிய காவலாளி அதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் உன் வாழ்நாளில் நீ தான் ஆரோக்கிய ராஜா.
நுரையீரலின் அல்வியோலர் பகுதியை சுத்தம் செய்யும் முக்கியமான பொறுப்பு, சிறப்பு மொபைல் பாகோசைட்டுகளால் மேற்கொள்ளப்படுகின்றது,
அவை அல்வியோலர் மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்] என்று அழைக்கப்படுகின்றன. இந்த செல்கள் தூசித் துகள்களை உறிஞ்சி, ஏற்றப்படும் போது, நிணநீர் திரவம் அல்லது இரத்த நாளங்கள் வழியாக நுரையீரலில் இருந்து குப்பை, அழுக்குகள், இறந்த பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
இது சரியாக வேலை செய்யவில்லை என்றால், நுரையீரலில் அதிக அளவு சுரப்பு குவிந்து, [சளி, குப்பை சேகரிப்பு] சுவாசத்தை பாதிக்கின்றது மற்றும் நுரையீரல் தொற்று அபாயத்தையும் அதிகரிக்கின்றது.
ஆல்வியோலர் மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்]: துப்புரவு ஊழியர்கள் என்றும் அழைக்கலாம். ஒரு அழகான வீட்டிற்கு துப்புரவு பணியாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட ஆயிரமடங்கு இந்த விழுங்கி செல்கள் எங்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியமானவைகள்.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாகோசைட்டுகள், அவை ஆல்வியோலியில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன, அதாவது அந்நிய ஊடுருவல் துகள்களை (நோய்க்கிருமிகள், தூசி, புகை) உட்கொள்வதன் மூலம் நுரையீரலை சுத்தம் செய்தல். அவை அழற்சி மற்றும் அதிக உணர்திறன் எதிர்வினைகளிலும் ஈடுபட்டுள்ளன.
ஆல்வியோலர் மேக்ரோபேஜ்கள் எலும்பு மஜ்ஜையில் உள்ள மோனோசைட்டுகளிலிருந்து உருவாகின்றன, இரத்த நாளங்கள் வழியாக நுரையீரலுக்குள் இடம்பெயர்ந்து நுரையீரல் நுண்குழாய்களின் எண்டோதெலியத்துடன் ஒட்டிக்கொள்கின்றன. அந்நிய ஊடுருவல் துகள்கள் தோன்றும்போது, அவை அல்வியோலியில் இடம்பெயர்கின்றன. அங்கு அவை தங்கள் பணிகளை செய்கின்றன.
நுரையீரல் திசுக்களை வரிசையாகக் கொண்ட வகை 1 ஆல்வியோலர் எபிதீலியல் செல்கள், ஒட்சிசன்[ O2 ] மற்றும் கார்பன் டை ஆக்சைடு [ CO2 ]வாயுக்களின் பரிமாற்றத்திற்கு முக்கியமானவை. மேலும் வகை 2 (AT2) ஆல்வியோலர் எபிதீலியல் செல்கள், ஆல்வியோவில் காயமடைந்த அல்லது இறந்த எபிதீலியல் செல்களை மாற்றுவதற்கு ஸ்டெம் செல்களாக செயல்படுவதாக அறியப்படுகின்றது.
இயற்கை மூலிகைகள்: அதிமதுரம், வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி, கறி மஞ்சள், ஆர்கனோ, தைம், ரோஸ்மேரி.
இன்ஹேலர்: நுரையீரல் சளியை சுத்தம் செய்யும் இன்ஹேலர்.தூள் அல்லது ஈரப்பதமான பொருட்கள் [மூலிகை] ஒரே மூச்சில் சுவாசக் குழாயில் உறிஞ்சப்படும் வகையில் அமைந்த ஒரு தெளிப்பான்.[Spray] இவைகள் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்ய உதவமுடியும்.
acetylcysteine (ACC): இருமல் சளி நீக்கி அசிடைல்சிஸ்டீன் (ACC) தடிமனான சளியின் அமைப்பை தளர்த்தி, அதை மெல்லியதாக மாற்றுகிறது.
Ambroxol: அம்ப்ராக்ஸால் சளியை திரவமாக்கி, அதை அகற்ற சிலியாவை செயல்படுத்துகிறது.
Myrtol: மிர்டால் 6 வயது முதல் குழந்தைகளுக்கான மூலிகை சளி நீக்கி.
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக