செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Guillain-Barré Syndrome (GBS) (Acute Inflammatory Demyelinating Polyneuropathy, Acute Idiopathic Polyneuritis)

குய்லின்-பாரே நோய்க்குறி (GBS): (கடுமையான அழற்சி டிமெயிலினேட்டிங் பாலிநியூரோபதி, கடுமையான இடியோபாடிக் பாலிநியூரிடிஸ்)

குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) சிண்ட்ரோம் என்பது தசை பலவீனத்தை ஏற்படுத்தும் பாலிநியூரோபதியின் ஒரு வடிவமாகும். இந்த பலவீனம் பொதுவாக சில நாட்கள் முதல் வாரங்களுக்குள் மோசமடைகிறது, பின்னர் படிப்படியாக தானாகவே சரியாகிவிடும் அல்லது மறைந்துவிடும்.

சில நோயாளிகளில், ஜிகா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அல்லது கோவிட்-19 இன் விளைவாக [நீண்ட கோவிட்] குய்லின்-பாரே நோய்க்குறி உருவாகின்றது . [கொரோனா வைரஸ் ஒரு ரகசிய கொலைகாரன்]

ஜிகா வைரஸ் தொற்றுக்கும் நரம்பியல் நோயான குய்லைன்-பாரே நோய்க்குறி (GBS)க்கும் இடையேயான தொடர்பு  மிகவும் சாத்தியமானதாகக் கருதப்படுகின்றது. ஜிகா வைரஸ் உலகம் பூராகவும், குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில்   2015-19 முதல் வேகமாகப் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது [ஜிகா வைரஸ் புலி கொசுவால் பரவும் நோய்]

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகளில், குய்லின்-பார்ரே நோய்க்குறியின் அறிகுறிகள் லேசான தொற்று ( காம்பிலோபாக்டர் தொற்று , மோனோநியூக்ளியோசிஸ் அல்லது பிற வைரஸ் தொற்று போன்றவை), அறுவை சிகிச்சை அல்லது தடுப்பூசிக்குப் பிறகு சுமார் ஐந்து நாட்கள் முதல் மூன்று வாரங்களுக்குள் தொடங்குகிறது.

காம்பிலோபாக்டர் தொற்று  என்பது: அசுத்தமான உணவு அல்லது பானங்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக தொற்றும் ஒரு பாக்டீரியா நோய்.

குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) சிண்ட்ரோம் ஒரு ஆட்டோ இம்யூன்[ சுய-உடல்-தாக்கி நோய்] எதிர்வினையால் ஏற்படுகின்றது என்று கருதப்படுகின்றது. இதற்கு முழுமுதல் காரணியாக இருப்பது வைரஸ் தொற்று, இந்த வைரஸ்களின் தொற்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தை எரிச்சல் அடைய செய்து, மிகைப்படைய செய்கின்றன, மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு நல்ல திசுக்களையும் தாக்குகின்றது. இதன் நிமித்தம் நரம்பு மண்டலம் தாக்கி அழிக்கப்படுகின்றது.

குய்லைன்-பார் நோய்க்குறி (GBS) என்பது மிகவும் அரிதான நரம்பியல் கோளாறு ஆகும். கால்களில் திடீர் பலவீனம், அதே போல் வலி, கூச்ச உணர்வு மற்றும் கைகால்களில் உணர்வின்மை ஆகியவை பெரும்பாலும் இந்த நோயின் முதல் அறிகுறிகளாகும். மோசமான நிலையில், உடல் முழுவதும் paralysis [முடக்குவாதம்] ஒரு சில நாட்களுக்குள் ஏற்படலாம்.

மற்றும் குய்லின்-பாரே நோய்க்குறியில் சிறுநீர் பாதை செயலிழப்பு, மலக்குடல் சிக்கல்கள் போன்றவை.அடங்கும்.

குய்லின்-பாரே நோய்க்குறி (GBS)   தொடர்ந்து படிக்க

https://mahesva.blogspot.com/2023/07/guillain-barre-syndrome-guillain-barre.html?view=magazine

 

 

https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

 



https://youtu.be/2q1gk5SB3nc?si=LnTDPQ-ipfCJrq-5

என்னுடைய பாடல் வரிகளுக்கு " ai song generator"  இசையமைத்துள்ளார். இதேபோல் 100 பாடல்கள் எழுதியிருக்கின்றேன்.கேட்டுப்பாருங்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக