ஞாயிறு, 22 டிசம்பர், 2024

Treatment for this: Always keep fruit juice and glucose handy. Proper diagnosis is essential for diabetes. Know the type of diabetes y

எரிபொருள்: சர்க்கரை/விறகு

ஊக்க எரிதிரவம்: இன்சுலின்/மண்ணெண்ணெய்

பற்றவைப்பு: ATP-ADP சுழற்சி/தீப்பெட்டி

காற்று/சுவாசம் மற்றும் உடல் உழைப்பு.

 

இந்த நான்கும் ஒருங்கே இணைந்தால்தான் உடல் சர்க்கரையை எரித்து ஆற்றலை வழங்க முடியும். இதில் ஏதாவது ஒன்று குறைவுபட்டால்,அல்லது கூடினாலோ சர்க்கரை உயர்வு அல்லது  இன்சுலின் முறிவு/இன்சுலின் அதிர்ச்சி ஏற்படும்.


சர்க்கரை நோய்: இரத்தச் சர்க்கரைக் குறைவு [Hypoglycemia] இரத்தச் சர்க்கரைக் குறைவு (இரத்தச் சர்க்கரைக் இறக்கம்-60>40 ) விஷயத்தில், இரத்தச் சர்க்கரை அளவு மிகக் குறைந்து போதல்: வியர்வை, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது.


காலை உணவு எடுக்காமல் பாடசாலை செல்லும் பிள்ளை, பசியில் மயக்கம் போட்டு விழுவாங்க இல்லையா, அதேதான் இதுவும், இதுவொரு சாதாரண நிகழ்வுதான் இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும்..


அதற்கான காரணங்கள் மூன்று, சிறுநீர் மூலம் அதிக சர்க்கரை வெளியேற்றம், அதிக இன்சுலின் செலுத்துதல் மற்றும் அளவுக்கு மீறிய உடற்பயிற்சி.


சர்க்கரைநோயாளிகள்: உடற்பயிற்சி, நடைப்பயிற்சி எதுவாக இருந்தாலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவு அவசியமானது.


காரணம் ஒரு வாகனத்திற்கு 15 € எரிபொருள் போட்டால் 15கிலோமீட்டர் ஓடும், தீர்ந்து போனா திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். சாப்பிடனும் அதற்கு தேவையான அளவு இன்சுலின் போடனும்.


சேமித்த சர்க்கரையை மறுசுழற்சி செய்யும் அற்புத திறனை மனிதன் இழந்து நீண்ட காலமாச்சு. விலங்குகளும் ஆதிமனிதனும்  குறைந்தது இரண்டு நாட்கள் சாப்பிடாமல் வேட்டையாட முடியும். இன்றய மனிதன் அடுத்த உணவுக்கான நேரம் வெகுவாக குறைந்து  மூன்று மணித்தியாலங்களில் வந்து நிற்கின்றது அதிலும்  சர்க்கரை நோயாளிகள் ஒரு மணித்தியாலம் தாக்கு பிடிப்பதே அதிசயம்.


இதற்கான சிகிச்சை: பழரசம், குளுக்கோசு எப்பவுமே கையுடன் வைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கு சரியான நோய் அறிதல் அவசியமானது. உங்கள் சர்க்கரை நோயின் வகையை அறிந்து கொள்ளுங்கள் அதற்கான சிகிச்சை முறையை கையாளுங்கள், உங்களால் சர்க்கரை நோயுடன் கைகோர்த்து வாழமுடியும் இல்லை என்றால் அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும்.


என்னுடைய கட்டுரைகள் அத்துனையும் பிள்ளைகளை மனதில் வைத்து எழுதப்பட்டது, ஒவ்வொரு எழுத்தும் என்னுடைய கைப்பட எழுதப்பட்டவை எந்தவித ஆபாச வார்த்தைகள், படங்கள் எதுவும் இல்லை பயமின்றி உங்கள் பிள்ளைகளை அனுமதிக்கலாம்.

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine.

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக