தோரியம் அணு உலை [Th-90] 232 [திரவ உப்பு அணு உலை ] இன்று புழக்கத்திலிருக்கும் அணுப்பிளவு அணு உலையை காட்டிலும் 0,1 % குறைவான கதிரியக்கத்தை வெளியிடக்கூடியது, தோரியம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது. உலகில் உள்ள மொத்த யுரேனியம் 235 ஐ விட தோரியம் 500 மடங்கு அதிகமாக உள்ளது.
இலங்கை, இந்தியா கடலோரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாகவே கிடைக்கின்றது உலக இருப்புகளில் இந்தியாவில் மட்டும் 13 % மேல் உள்ளது. இதில் அணு உலை கழிவுகள் எதுவும் இல்லாதது, அல்லது குறைவானது.தோரியம்,
யுரேனியம்-233; ஒரு நியூட்ரானை யுரேனியம்-233 மீது எய்தல் யுரேனியம்-233 ஒரு நியூட்ரானை உறிஞ்சி பிளவுக்கு உட்படுத்துகின்றது, செயல்முறையைத் தொடர ஆற்றல் மற்றும் நியூட்ரான்களை வெளியிடுகின்றது. அந்த நியூட்ரான்கள் தோரியம்-232 இல் மோதுகின்றது.
தோரியம்-232 இயற்கையான தோரியம் பிளவுபடும் நியூட்ரானை உறிஞ்சி தோரியம்-233 ஆக மாறுகின்றது
தோரியம்-233 விரைவாக சிதைந்து (1/2 ஆயுள் = 22 நிமிடங்கள்) புரோட்டாக்டினியம்-233 ஆக மாறுகின்றது(குறைவான கதிரியக்கமுள்ள தனிமங்கள்)
புரோட்டாக்டினியம்-233 [திரவ உப்பு] புரோட்டாக்டினியம்-233 ஒரு மாதத்தில் மெதுவாக (1/2 ஆயுள் = 27 நாட்கள்) யுரேனியம்-233 ஆக சிதைகின்றது.
திரும்பவும் முதலில் இருந்து இந்த சுழற்சி தொடர்கின்றது. யுரேனியம்-233; யுரேனியம்-233 ஒரு நியூட்ரானை உறிஞ்சி பிளவுக்கு உட்படுகின்றது, செயல்முறையைத் தொடர ஆற்றல் மற்றும் நியூட்ரான்களை வெளியிடுகின்றது.
இந்த சுழற்சி பாதுகாப்பானது ஏனென்றால் அடிக்கடி எரிபொருள் நிரப்பும் தேவையிருப்பதினால் விபத்து ஆபத்திருந்தால் எரிபொருள் நிரப்புவதை நிறுத்திவிட்டால் அணு உலை தானாக அணைந்து போகும், அப்படி விபத்து ஏற்பட்டாலும் குறைவான கதிரியக்கத்தை வெளியிடக்கூடியது,
திரவ உப்பு உலை தொழில்நுட்ப தகவல்கள் : நடைமுறை திட எரிபொருள் தண்டுகளுக்கு பதிலாக, திரவ அணு எரிபொருளைப் பயன்படுத்துவது. யுரேனியம் உருகிய உப்பாக, இது ஒரு ஹீட்டரில் உள்ள தண்ணீரைப் போலவே ஒரு வட்டத்தில் பாய்கின்றது. உருகிய உப்பு உலைகள் 500-1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டது.சுழற்சியின் ஒரு கட்டத்தில், யுரேனியம் அணுக்கரு சங்கிலி எதிர்வினையில் பிளவுபடுகின்றது[ மித மிஞ்சிய நியூட்ரான்களை உருகு நிலை ஈயத்தை கொதி கலன்களில் நிரப்பி சமநிலையில் வைக்கப்படுகின்றது.
கொள்கையளவில், தோரியத்தை எந்த அணு உலை கருத்தாக்கத்திலும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இருப்பினும் தோரியத்தில் சொந்தமாக பிளவுபடக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை. தோரியம் தனியாக செயல்படாது அதற்கு யுரேனியத்தின் உந்துதல் தேவை.முதலில் யுரேனியம்-233 தோரியத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
வெளிப்படையான தொழில்நுட்ப தகவல்கள் சரியாக இன்னும் வெளிவரவில்லை, அந்த நாடுகளின் தயாரிப்பு நிறுவனங்கள் அதை இரகசிய ஆவணங்களாக பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றது. இதில் தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் கூட கொண்டுவரலாம் இருப்பினும் அடிப்படையில் திரவ உப்பு உலை இப்படித்தான் தொழில்படுகின்றது.
நன்மைகள்: திரவ உப்பு உலையின் மிகப்பெரிய நன்மை, இன்று புழக்கத்திலுள்ள அணுவுலை யுரேனிய கழிவுகளை இதில் எரிபொருளாக பயன்படுத்தலாம். அணுஉலை கதிரியக்க கழிவுகளின் மறுசுழற்சி, குறைவான கதிரியக்க கழிவுகள் மற்றும் விபத்து அபாயமில்லை, குறைவான சிலவு,
வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை கிலோவாட்/மணிநேரம்[Kwh] 3 சென்ட்ற்கும் குறைவாக வழங்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது [தற்சமயம் மின்சாரத்தின் விலை 37,30 சென்ட் Kwh]
தீமைகள் என்றுபார்த்தால் இதில் வரும் கதிரியக்க கழிவுகள் நாசகாரர்களின் கைகளுக்கு போனால் அழுக்கு குண்டுகளை தயாரிக்க பயன்படுத்தலாம். திரவ உப்பு உலை இன்னும் வர்த்தக ரீதியாக இயங்கவில்லை, அதற்கு இன்னும் நீண்டகாலம் தேவைப்படலாம்.
தோரியம் வெப்ப உலை விபத்து: ஜெர்மனி/ஹாம் நகரின், ஹாம்-யுன்ட்ராப் மாவட்டத்தில் உள்ள உயர் வெப்ப அணு உலை விபத்து 05. 1986 களில் நடந்தது. 04. 1986 வில் நடந்த செர்னோபில் அணு உலை விபத்துக்கு பிறகு ஒரு மாதம் கடந்து இந்த விபத்தும் நடந்திருக்கின்றது.
தொழில்நுட்ப தவறினால் ஏற்பட்ட இந்த விபத்து ஏகப்பட்ட கதிரியக்கங்களை அன்று வெளியிட்டிருந்தது.
இங்கு எரிபொருளாக தோரியம் கோளங்கள் பயன்படுத்தப்பட்டது இந்த அணு உலை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில். இது 650,000 கூழாங்கற்களைக் கொண்ட ஒரு கூழாங்கல் உலை ஆகும். ஒவ்வொரு தோட்டாவிலும் ஒரு கிராம் யுரேனியம் மற்றும் பத்து கிராம் தோரியம் நிரப்பப்படிருந்தது. இந்த தோட்டாக்களை புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும். சுழற்சி அமைப்பில் ஏற்பட்ட சிரமங்களினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
இதிலிருந்து திரவ உப்பு உலை தொழில்நுட்ப முற்றிலுமாக மாறுபடுகின்றது, தோரியம் திரவ உப்பு வெப்ப கூழ்களாக மாற்றப்படுகின்றது.உருகிய உப்பு உலைகள் 500-1,000 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் மட்டுமே இயங்குகின்றது. இது இரும்பு உருக்கு ஆலைகளின் வெப்பத்திற்கும் குறைவானது.
அறியப்பட்ட 111 வேதியியல் தனிமங்களில், 91 தனிமங்கள். கல், மண் அல்லது பாறைகளில்.இயற்கையில் கதிரியக்க வடிவத்திலேயே கிடைக்கின்றது.
எங்களுடைய பூமி உருவானதிலிருந்து இன்று வரைக்கும் வேறு சில கதிரியக்க தனிமங்களும் உள்ளன, மேற்கோளாக ஒரு சில, பொட்டாசியம்-40 மற்றும் ரூபிடியம்-87 மற்றவை தொடர்ந்து வளிமண்டலத்தில் உருவாகின்றன [எ|கா. டிரிடியம், பெரிலியம்-7, கார்பன்-14 மற்றும் பிற]
இயற்கையாக நிகழும் யுரேனியம் மற்றும் தோரியம் ஆகிய தனிமங்களிலிருந்து தொடங்கும் சிதைவு சங்கிலிகளும் உள்ளன. யுரேனியம் போன்ற நிலையற்ற அணுக்கருக்களின் கதிரியக்கச் சிதைவு நிலையான மற்றும் கதிரியக்கச் சிதைவுப் பொருட்களை உருவாக்கலாம்.
நிலையான அணுக்கருக்கள் உருவாகும் வரை கதிரியக்க பொருட்கள் சிதைவடைகின்றன. இது இயற்கை சிதைவு தொடர் என்று அழைக்கப்படுகின்றது. புள்ளியியல் சராசரியில், கதிரியக்கச் சிதைவு என்பது காலப்போக்கில் மாற்றத்தின் நிலையான விதிகளுக்கு உட்பட்டது.
அரை ஆயுள் என்பது சிறப்பியல்பு, அதாவது பாதி கதிரியக்க அணுக்கள் மாற்றப்பட்ட நேரம். பல்வேறு ரேடியோநியூக்லைடுகளின் அரை-வாழ்க்கை மைக்ரோ விநாடிகள் மற்றும் பில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உள்ளது.
மூன்று இயற்கை கதிரியக்க சிதைவு சங்கிலிகள் உள்ளன. யுரேனியம்-238, யுரேனியம்-235 மற்றும் தோரியம்-232 ஆகியவை நீண்ட காலம் வாழும் தாய் நியூக்லைடுகளாகும். யுரேனியம்-238 இலிருந்து உருவாகும் நிலையற்ற மகள் உறுப்புகளில் ஒன்று ரேடான் ஆகும்.
பெட்ரோமாக்ஸ் மேன்டில்கள்: கடந்த காலத்தில் பயன்படுத்திய பெட்ரோமாக்ஸ் மேன்டில்கள் 99% கதிரியக்க தோரியம் நைட்ரேட் மற்றும் 1% சீரியம் நைட்ரேட் ஆகியவற்றின் உப்புக் கரைசலில் துணியை ஊறவைத்து, உலர்த்திய பின்னர் மேன்டில்கள் தயாரிக்கப்பட்டன.
பற்றவைப்பதன் மூலம் வெப்பத்தில், தோரியம் நைட்ரேட் தோரியம் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் வாயுக்களாக சிதைகின்றது. இது வாயுச் சுடரில் ஒரு வெள்ளை ஒளியை வெளியிடும் [பெட்ரோமாக்ஸ் மேன்டில்கள் குறைவான கதிரியக்கமுள்ளது]
இயற்கையில் தற்செயல் நிகழ்வுகள் எதுவுமே இல்லை, அப்படி எதுவுமே நடக்கவும் இல்லை அத்துனை படைப்புகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு உருவாக்கத்திற்கு பின்னாலும் யாரோ ஒருவரின் [கடவுள்] கைத் தடங்களை காணமுடிகின்றது. கடவுளின் தடயங்களை தேடி…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக