சனி, 17 செப்டம்பர், 2022

Nuclear accident: What steps would you

 அணுவுலைவிபத்து:நீங்கள் வாழும் ஊரில் அல்லது அருகாமையில் எல்லை பகுதியில் தற்செயலாகஒரு அணுவுலைவிபத்து ஏற்பட்டால் என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்? எந்த கதிர்வீச்சு ஆபத்தானது?


கதிரியக்கத்தன்மை: உறுதியற்ற தன்மையுள்ள ஒரு அணு சிதைவுறும் போது ஆல்பா, பீட்டா காமா கதிர்வீச்சுக்களை வெளியேற்றுகின்றது. ஆல்பா கதிர்வீச்சு குறுகிய பரவலை கொண்டது.


கிட்டத்தில் இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும் ஒரு பேப்பர் அட்டையை வைத்து தடுத்துவிடமுடியும், கவச ஆடைகள் இதனை தடுக்க கூடியது.


ஆனால் ஆபத்தானது. [He₂+] [வெளி எலக்ட்ரான்கள் இல்லாமல்] ஒரு மணி நேரத்திற்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது


பீட்டா கதிர்வீச்சு இதில் இரண்டு வகைகள் உண்டு [பீட்டா+ பீட்டா-] அயனியக்கம் என்று அழைக்கப்படுகின்றது. இது நடுத்தர பரவலை கொண்டது மிகவும் ஆபத்தானது. ஒரு தடிப்பான அலுமினிய அட்டையை வைத்து தடுத்துவிடமுடியும்.


இதில் வெளியேறும் எலக்ட்ரான்கள் அணுக்கருவை சுற்றி ஓடும் எலக்ட்ரான்கள் அல்ல மாறாக அணுக்கருவிலுள்ள, நியூட்ரான்—> புரோட்டானாக மாற்றமடையும் போது குறுகிய நேரத்தில் எலக்ட்ரானாக மாற்றமடைந்து வெளியேறுதல். (e-)


இப்படி அணுக்கருவிலிருந்து வெளியேறும் எலக்ட்ரான்கள் மிகமிக ஆபத்தானது. மின்னல் வேகத்தில் வெளியேறி உடல் திசுக்களை தாக்க கூடியது.


தைராய்டு புற்றுநோய், மரபணு பிறழ்வு[ இரண்டு தலை உயிரினம், எண்ணிக்கையில் கூடிய கைவிரல்கள் உடல் சிதைவு] DNA சிதைவு, இரத்த புற்றுநோய் “லுகேமியா” போன்ற பல வகை புற்றுநோய்களுக்கு காரணியானது. ஒரு மணி நேரத்திற்கு 130,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.


காமா கதிர்வீச்சு என்று தனியாக நிகழ்வதில்லை, உறுதியற்ற தன்மையுள்ள அணுக்கள் சிதைவுறும் போது ஆல்பா, பீட்டா துகள்கள் வெளியேறும் போது பெரும் ஆற்றல் சக்தி, X-கதிரியக்கமாக இந்த காமா கதிர்கள் வெளியேறுகின்றது.


காமா கதிர்வீச்சுக்களை தடுப்பது கடினம், அது கனமான காங்கிரீட் கட்டிடங்களை கூட ஊடுருவக் கூடியது. எல்லா திசைகளிலிருந்தும் வெளியேறும். விண்வெளியில் பூமியில் இயல்பாக வெளியிடக் கூடிய ஒரு கதிர்வீச்சு.


இருப்பினும் கனமான ஈயத் தகடுகள், உடைகள், கிரானைட் கற்கள், நிலத்தடி அறைகள், காமா கதிர்களை தடுக்க கூடியது. மிக குறைவான காமா கதிர்வீச்சு குறைவான ஆபத்தை விளைவிக்க கூடியது. *நேரடி தொடர்புகள் எல்லா கதிர்வீச்சுகளும் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.


காமா கதிர்வீச்சு எவ்வளவு ஆபத்தானது?: கதிர் வீச்சின் அளவினை பொறுத்து  மனித உடலில், காமா கதிர்வீச்சு, [ஃபோட்டான் துகள்] பேரழிவு விளைவை ஏற்படுத்துகின்றது. மனித திசுக்களில் உறிஞ்சப்படும் காமா கதிர்கள் உடல் திசுக்களை [உயிரினத்தை] அயனியாக்குகின்றன.


அயனியாக்கம் காரணமாக, இரண்டாம் நிலை கதிர்வீச்சு உருவாகின்றது. இது எலக்ட்ரான்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களை வெளியிடுகின்றது..


காமா கதிர்வீச்சு  உயிரினத்தின் மரபணு [DNA] சங்கிலியை சிதைக்கின்றது. ஒவ்வொருமுறையும் உடல் திசுக்களில் படும்போது பிளேடு வைத்து அறுத்ததுபோல் அறுத்துவிட்டு போகும். மரபணு பாதிப்பு, தவறான செல் பிரிவு, அடுத்த தலைமுறையினரின் உடல் ஊனத்திற்கு வழிவகை தேடித்தரும்


இந்த கதிர்வீச்சுக்களை தடுக்கும் முதல் நடவடிக்கையாக, விபத்து நடந்த இடத்தை விட்டு விலகி ஓடுதல். பாதுகாப்பு உடைகளை அணிதல், நல்ல ஊட்டசத்து உள்ள உணவுகளை எடுத்தல் அவசரதேவைக்காக விற்றமின், கனிமசத்து மாத்திரைகளை எடுத்தல் குறிப்பாக அயோடின், கால்சியம் போன்றவை.


அவசியம் என்றால் இருப்பிடத்தை மாற்றியமைத்தல், கண்டிப்பாக மருத்துவ கண்காணிப்பு அவசியமானது. சரியான நேரத்தில் முறையான நடவடிக்கை கதிரியக்க புற்றுநோயிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்கமுடியும்.


வேதியியலில், வினைத்திறன் என்றால் என்ன.? ஒரு வேதியியல் எதிர்வினைக்குள் நுழைய ஒரு பொருளின் திறன். இது ஒரு வெப்ப இயக்கவியல் அல்லது இயக்க அளவு அல்ல, ஆனால் ஸ்திரத்தன்மைக்கு அல்லது ஒரு பொருளுக்கான எதிர்வினையை குறிக்கின்றது.


தனிம அட்டவணையில் வினைத்திறன்: பிரதான குழுவின் கூறுகள் ஆல்காலிமெட்டல்கள், அதாவது காரவுலோகங்கள் லித்தியம், சோடியம், பொட்டாசியம், ரூபிடியம், சீசியம் மற்றும் பிரான்சியம். அவற்றில் ஒரு வேலன்ஸ் எலக்ட்ரான் மட்டுமே இருப்பதால்,


அவை மிகவும் எதிர்வினை கூறுகள், எனவே இந்த அணுக்கள் ஒரு எலக்ட்ரானை கைவிட வேண்டும்,இவை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட வெளிப்புற ஓடுபாதையை கொண்டுள்ளது. அதாவது ஒன்றை கைவிட்டு முழுமையடைகின்றது.


மருத்துவத்தில்: வெளிப்புற தூண்டுதல்களுக்கான எதிர்வினைகளுக்கு ஒரு உறுப்பு அல்லது திசுக்களின் திறன் வினைத்திறன் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு வினைத்திறன் ஒரு மூலகத்தை ஒரு மூலக்கூறாக மாற்றுகின்றது. “எலக்ட்ரோலைட்” [எலக்ட்ரான்களின் பகிர்வு இங்கு நடக்கின்றது] இது ஆபத்து இல்லாதது.


கதிரியக்கத்தில் ஒரு மூலகம் இன்னுமொரு மூலகமாக மாறுகின்றது. அது ஆபத்தான கதிர்வீச்சுகளை வெளியிடக் கூடியது. இது அண்ட வெளியில் பாதிப்பு இல்லாதது. இது பூமியில் நாங்கள் வாழும் இடத்தில் நடக்கும் போது பேராபத்தானது.

கதிரியக்கத்தன்மை என்றால் என்ன?: [ஒரு அணுவின் உறுதியற்ற தன்மை] கதிரியக்கத்தின் வரையறை இயற்பியலில் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கதிரியக்க கதிர்வீச்சை தன்னிச்சையாக அனுப்ப. அணு கரு மற்றொரு அணு கருவாக மாறுகின்றது அல்லது அதன் ஆற்றல்மிக்க நிலையை மாற்றுகின்றது.


கதிரியக்க கதிர்வீச்சு மற்ற அணுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்களை தீர்க்க முடியும், எனவே இது அயனியாக்கும் கதிர்வீச்சு என குறிப்பிடப்படுகின்றது. அதாவது புதிய தனிமங்களாக மாறுகின்றது /மாற்றுகின்றது.


இந்த புதிய தனிமங்கள் எடுத்துக்காட்டாக: ஆபத்தான ஓரிடமூலகங்கள் [ஐசோடோப்பு] அயோடின்-131, யுரேனியத்தின் அணுக்கரு பிளவின் ஒரு பிளவு [Cs]சீசியம்-137 இரத்த புற்றுநோய் லுகேமியா மற்றும் [Sr]ஸ்ட்ரோண்டியம்-90 எலும்பு புற்றுநோய்க்கும் காரணியானது.


ஸ்ட்ரோண்டியம்-90 என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஓரிடமூலகமாகும், [உறுதியற்ற தன்மையுள்ளது, எந்த நேரத்திலும் சிதைவுக்கு உள்ளாக கூடியது] இதன் அரை ஆயுள் 28.5 ஆண்டுகள் ஆகும். அதிகபட்சமாக 546 keV (β-சிதைவு) கொண்ட எலக்ட்ரானை [Y]யுட்ரியம்-90க்குள் வெளியிடுவதன் மூலம் இது சிதைகின்றது


இப்படி மாறுகின்றபோது ஏற்படும் அணு சிதைவு [நியூட்ரான் —> புரோட்டான் அணுக்கரு எலக்ட்ரான் வெளியேற்றம்] உடல்திசுக்களில் படும்போது அங்குள்ள எலக்ட்ரான்களை தள்ளிவிடுகின்றது அல்லது கூட ஒட்டிக்கொள்கின்றது. இதன் நிமித்தம் உடல் திசுக்கள் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய்க்கு காரணியாகின்றது.


உடலில் ஊட்டசத்துக்களின் குறைபாடு ஏற்படும் போது, குறிப்பாக அயோடின்-53, கால்சியம்-20 குறைபாடு ஏற்படுகின்ற காலகட்டத்தில் சுற்றுச்சூழலில் உள்ள கதிரியக்கம் மற்றும் உணவுகளிலுள்ள கதிரியக்க பொருள்கள்,


கதிரியக்கமுள்ள அயோடின், கால்சியத்தை நல்ல கனிமங்களுக்கு பதிலாக அல்லது தவறாக உடல் இந்த மூலங்களிலிருந்து எடுத்து, திசுக்களில் சேர்ந்துகொள்கின்றது. பின்னால் இந்த திசுக்கள் புற்றுநோயாக பெருகின்றது. புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமானது நல்ல ஊட்டசத்துள்ள உணவுகளை எடுப்பது.


செர்னோபில் அணுசக்தி உலை பேரழிவு, 20 வருடம் கடந்த நிலையிலும் நெருக்கமாக எல்லைகளை கொண்ட நாடுகளில் வாழும் பல குழந்தைகள் லுகேமியா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.


புற்றுநோயினால் துன்பப்படும் குழந்தைகளுக்காக.. ஆழ்ந்த மன வருத்தம் தரும் பதிவு. மகேஷ்-ரவி Essen. நன்றி. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக