ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

How gold came to the earth.

ஈர்ப்பு என்பது: இரண்டு நிறை அல்லது இரண்டு உடல்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு ஆகும் அதனால்தான் இதை இரண்டு நிறைகளுக்கு இடையிலான ஈர்ப்பு என்று அழைக்கப்படுகின்றது. ஈர்ப்பு விசை என்பது: இரண்டு நிறை/உடல்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் விசையாகும். எடுத்துக்காட்டாக: [பூமி—-><—-நிலவு]


புவியீர்ப்பு ஆற்றல் ஃபார்முலா [F=G m1 ‚ m2 ———— r2]

ஈர்ப்பு விதி

F = ஈர்ப்பு சக்தி

G = புவியீர்ப்பு மாறிலி

M1 = உடல் நிறை 1(பரிமம்)

M2 = உடல் நிறை 2(பரிமம்)

R2 = நிறை மையங்களுக்கு இடையிலான தூரம்.

 


உடல் நிறை(m) மற்றும் எடை(w) இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு, இயற்பியலை பொறுத்தவரை  அதை நாங்கள் வேறுபடுத்திதான் பார்க்கவேண்டும். உடல் நிறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் எடை மாறுபடும். எடுத்துக்காட்டாக: உங்களின் எடை பூமியில் 75 கிலோ என்றால், அது நிலவில் 50 கிலோவாக இருக்கும்.


ஆனால் உடல் நிறை(m) உடலின் பரிமம் மாறாதது அப்படியேதான் இருக்கும். இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு பொருளின் உருப்படி மாறாதது எடை மாறும். புவியீர்ப்பு மூலம் உடல்நிறை(m) எவ்வளவு வலுவாக கீழே இழுக்கப்படுகின்றது என்பதை எடை விபரிக்கின்றது.


பூமிக்கு தங்கம் எப்படி வந்தது. உங்களுக்கு தெரியுமா, தங்கம் பூமியில் உருவான உலோகம் இல்லை என்று, வைரத்தை மாணிக்கத்தை பவளத்தை முத்தை, விளைவித்த பூமியினால் தங்கத்தை விளைவிக்கமுடிவதில்லை, செயற்கையாக பல வகை பிளாஸ்டிக், வேதியியல்/கெமிக்கல் பொருட்களை உருவாக்கிய விஞ்ஞானத்தினாலும்  தங்கத்தை உற்பத்திசெய்யமுடியாது.


தங்கம் ஒரு தனித்துவமான உலோகம், அதை வேறு எந்த உலோக பொருட்களிலிருந்தும் அல்லது கூட்டுச்சேர்த்தோ உற்பத்திசெய்யமுடியாது.


தனிம அட்டவணையில் காலச்சக்கர புள்ளியில் 79 வது இடத்திலிருக்கும் ஒளிரும் தங்கத்தை எளிதில் உற்பத்தி செய்யமுடியாது. விஞ்ஞானிகள் தங்கத்தை உற்பத்தி செய்ய முயற்சித்தாலும் அது சிக்கலானது. எனவே தங்கம் விலை உயர்ந்தது மட்டுமின்றி அரிதான உலோகமாகவும் காணப்படுகின்றது. இது பூமியிலும் இயற்கையாக நிகழ்வதில்லை. அப்ப எங்கிருந்துதான் வந்தது.


தங்கம் விண்வெளியில் இயற்கையாக உருவாகியது என்று கோட்பாடு கூறுகின்றது. (அட்சய திருதி) அண்டவெளியில் கற்பனை செய்ய முடியாத சக்தி வாய்ந்த மகா சக்திகள் உள்ளன. நட்சத்திரங்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பதில்லை, அவை காலச்சக்கரத்தில் சூப்பர் நோவாவாக வெடித்து சிதறுகின்றன.


ஆனால் இந்த நட்ச்சத்திரங்கள் இறந்துபோனால் அது முற்றிலும் போய்விட்டது என்று அர்த்தமல்ல. பல நட்சத்திரங்களின் எச்சங்கள் சில நேரங்களில் தீவிர சக்திகளுடன் மோதுகின்றன. அந்த நேரத்தில் ஒரு ஃபிளாஷ், பிளாஸ்மா ஜோதி ஏற்படுகின்றது, அது அதிக ஆற்றலை வெளியிடுகின்றது.


இப்படித்தான் தங்கம் பரப்பிர வெளியில் தயாரிக்கப்படுகின்றது. இந்த தங்கம் பின்னர் ஒரு விண்கல்/வின்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.


இரண்டு மெகா நியூட்ரான் நட்சத்திரங்கள் முட்டிமோதி வெடித்து சிதறும் போது உருவான பிளாட்டினம் போன்ற கன உலோகங்கள் இடையில் தங்கமும் உருவானது. அப்படி உருவான தங்கத்தை எப்படி மனிதனால் உற்பத்தி செய்யமுடியும்.


நட்சத்திரங்கள் இறந்து அதன் துகள்களில் பூமி உருவாகியிருந்தாலும் மற்றய கிரகங்களுக்கு கிடைக்காத தனிச்சிறப்பு எங்களுடைய பூமிக்கு கிடைத்திருக்கின்றது.


எங்களுடைய பூமி தனித்துவமானது தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முத்து பவளம்… உண்ண, உடுக்க, உறங்கி களிப்புற என்று எல்லாவகையான சீர்வரிசைகளையும் கொண்டுவந்திருக்கின்றது.


செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்துபார்த்தால் தெரியும்  எங்களுடைய பூமி  எவ்வளவு தனித்துவமானது என்று. அங்கு எங்களுடைய பூமியில் இருப்பதை போல் தங்கம்,வெள்ளி,பிளாட்டினம் போன்ற 118 தனிமங்களும்  இருக்குதா அல்லது  இல்லையா என்று.


எங்களுடைய பூமியில் 5056 வகை கற்கள்/கனிமங்கள்  கண்டறியப்பட்டிருக்கின்றது. இதில் மூவாயிரம் வகை கற்களை லண்டன், தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பார்க்கமுடியும்.


எங்களுடைய பூமி ஒரு அற்புதம், அதிசயமில்லையாஅதை காயப்படுத்தாமல் சுத்தமாக வைத்திருப்பது எங்களுக்கான கடமைகளில் ஒன்று. நன்றி…

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக