கடவுளின் மௌனம்: ஒரு காட்டில் வாழ்ந்த மான்கள் ஒன்றாக கூடி ஒரு புகார் மனுவுடன் கடவுளைப் பார்க்க சென்றன.தங்களுடைய குட்டிகளை சிங்கங்கள் பிடித்து சாப்பிடுகின்றன அவைகளை கூப்பிட்டு கண்டியுங்கள் என்று எழுதிய புகார் மனுவை கடவுளிடம் கொடுத்தது.
கடவுள் அந்த மான்களுக்கு என்ன பதிலைச் சொல்லி இருப்பார்.
பிளாஷ்பேக் (பல வருடங்களுக்கு முன்னால்)
ஒரு பின்னோட்டம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அழகான ஒரு காட்டில் வாழ்ந்த இந்த மான்களின் மூதாதையர்கள் ஒன்றாக கூடி ஒரு புகார் மனுவுடன் கடவுளைப் பார்க்க சென்றன.
தங்களுடைய குட்டிகள் சாப்பிடுவதற்கு உணவில்லை புற்தரையெல்லாம் காலியாக கிடக்கின்றன, இலை தழை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை எங்கு பார்த்தாலும் பஞ்சம் பட்டினி மரணங்கள் தாங்க முடியவில்லை கடவுளே எங்களுடைய வறுமையை போக்கும் என்று புகார் அளித்தனர்.
கடவுள் அந்த காட்டிற்க்கு ஒரு சிங்கத்தை படைத்து நீ அந்த காட்டுக்கு ராஜாவாக இரு என்று சொல்லி அனுப்பிவைத்தார். சிங்கத்தின் வேட்டைகள் தொடர, மேய்ச்சல் நிலங்களை காலியாக்கும் மான்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின அந்த காடு மீண்டும் செழிப்புமிக்க காடாக வளரத் தொடங்கியது.
மனிதனை கடவுள் எதற்காக படைத்தார்? மனிதனுடைய தேவை என்ன? இயற்கை வளங்களை காலியாக்கும் மான்களுக்கு இணையாக மனிதன் இன்று இந்த பூமியில் வாழ்கின்றான்.
முடிவுரை: மனிதன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, இயற்கையின் சமநிலையைப் புரிந்துகொண்டு, வளங்களை அழிப்பதற்குப் பதிலாகப் பாதுகாக்கத் தவறினால், இயற்கை ஒரு "சிங்கத்தை" (அது ஒரு நோய், இயற்கை பேரழிவு, அல்லது யுத்தம் , பஞ்சம் எதுவாகவும் இருக்கலாம்) அனுப்பி, மனித குலத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி மீண்டும் சமநிலையை மீட்டெடுக்கக்கூடும் என்ற மறைமுகமான எச்சரிக்கையை இந்தக் கதை உணர்த்துகிறது.
மனிதன் தனது கைகளினால் தனக்கே எழுதிய முடிவுரை இது. இயற்கை தனது சுற்றுப்பயணத்தின் போது எதுவெல்லாம் சமநிலையை பராமரிக்கவில்லையோ அதை சமநிலை படுத்தும்.
கடவுளின் மௌனம் மற்றும் இந்த மான்களின் புகார் குறித்த இந்தக் கதை மிகவும் ஆழமானது. மான்களின் புகாரைக் கேட்ட கடவுள், புன்னகையுடன் பின்வரும் உண்மைகளை அவர்களுக்குப் பதிலளித்திருக்க வாய்ப்புண்டு:
கடவுளின் சாத்தியமான பதில்கள்:
கடவுள் மான்களிடம் நேரடியாக "சிங்கத்தைக் கண்டிக்கிறேன்" என்று சொல்லாமல், இயற்கையின் சமநிலையை அவர்களுக்குப் புரிய வைத்திருப்பார்:
* இயற்கையின் சுழற்சி: "மான்களே, நான் உங்கள் மேல் அன்பாகவே இருக்கிறேன். ஆனால், காட்டில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பங்கு உண்டு. சிங்கங்கள் மான்களை வேட்டையாடாவிட்டால், உங்கள் எண்ணிக்கை பெருகி, காட்டில் உள்ள புற்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இறுதியில் உணவில்லாமல் நீங்களே அழிய நேரிடும்."
* திறமைக்கான வாய்ப்பு: "நான் சிங்கங்களுக்கு வலிமையைக் கொடுத்தது போல, உங்களுக்கு ஓடும் வேகத்தையும், கூர்மையான காதுகளையும் கொடுத்துள்ளேன். ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டிய புத்தியையும் கொடுத்துள்ளேன். போராட்டமே வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறது."
* கடவுளின் பாரபட்சமற்ற நீதி: "நான் ஒருவருக்கு மட்டும் சார்பாக இருக்க முடியாது. பசியோடு இருக்கும் சிங்கம் தனது குட்டிகளுக்கு உணவு தேடுவதும் ஒரு தாயின் கடமைதான். என்னைப் பொறுத்தவரை சிங்கத்தின் பசியும் முக்கியம், உங்கள் பாதுகாப்பும் முக்கியம்."
கதையின் நீதி:
கடவுள் பெரும்பாலும் மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர் ஏற்கனவே உலகை ஒரு சீரான விதியால் (Natural Law) இயங்கச் செய்துள்ளார். ஒருவரின் துன்பம் என்பது மற்றொருவரின் வாழ்வாதாரமாக இருக்கும்போது, படைத்தவன் யாரையும் தண்டிக்காமல், இயற்கையின் போக்கில் அனைத்தையும் விடுகிறான்.
> "இயற்கையின் விதிகள் அனைவருக்கும் சமமானவை; அங்கு வலியவை எளியவற்றை வெல்லும் என்பது அநீதியல்ல, அது ஒரு சுழற்சி."
>
இந்தக் கதை ஒரு சுவாரஸ்யமானது சிங்கத்தின் பார்வையில் மான்களின் மனு ஒரு மறுப்பு மனுவாகவே இயற்கையின் சுழச்சியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனது சிந்தனையிலிருந்து நன்றி
தலைப்பு: அதிசயமான சிறிய தேவதைகள்: இந்தப் பரந்த பிரபஞ்சத்தில், மற்றொரு விண்மீன் மண்டலத்தில், மாயன் என்னும் இன்னும் ஒரு கிரகத்தில், அங்குள்ள அடர்ந்த வேடன் காட்டில், அதர் மற்றும் வணன் என்ற இரண்டு சமையல்காரர்கள் இருந்தார்கள். (அவர்கள் ஒரு சூனியக்கார சமையல் காரர்கள்). (சூனியக்கார சமையலறையாக சித்தரிக்கவும்)
அவர்கள் அந்தக் காட்டில் உள்ள அதிசய மூலிகையைப் பயன்படுத்தி அங்கு சாப்பிட வந்த மக்களை ஐந்து வண்ணப் பறவைகளாகவும் தங்க மான்களாகவும் மாற்றினர், மேலும் அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் இருக்க மந்திரத்தால் அவர்களைக் கட்டிப்போட்டு அதே காட்டிலே விட்டுவிடுவார்கள்.
இப்படி பஞ்சவர்ணமாக மாற்றப்பட்ட பஞ்சவர்ண பறவைக்கு மட்டும் ஒரு வரம் கிடைத்தது. அது எப்படி என்றால் தன்னை உருமாற்றிய அந்த மூலிகையிருக்கும் இடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அந்த வரத்தைப் பெற்றது அந்த வரம் என்னவென்றால் நீ எங்கு வேண்டுமானாலும் பறந்து போகலாம் என்ற வரம் தான் அது.
ஆனால் ஒரு நிபந்தனை இருள் கூடி வருவதற்கு முன்பே நீ உன் கூட்டுக்கு திரும்ப வேண்டும், அப்படி திரும்பவில்லை என்றால் பஞ்சவர்ண தவளயாக மாறி அந்தக் காட்டிலுள்ள பாம்புகளுக்கு இரையாகிவிடுவாய் என்று கூற, அந்தப் பறவை ஒருபுறம் சலனத்துடனும் மறுபுறம் மிகவும் சந்தோஷமாகவும் பறந்தது.
இப்படியே காலம் கடந்தது அந்த ஊர்மக்கள் காணாமல் போனவர்களை தேடும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். என்னடா இது? இப்படியே இருந்து விட்டால் எங்களின் நண்பர்களை எப்படி நாங்கள் காண்பது தூரத்தில் ஒரு குரல். ஊர் மக்களை கண்ட பரபரப்பில் பஞ்சவர்ண பறவை தன்னை மறந்து கூட்டுக்கு திரும்பமறந்து விட்டது. அது தனக்கு கிடைத்த வரத்தையும் அதன் காலக்கெடுவையும் மறந்து விட்டது.
நேரம்செல்லச் செல்ல அது மெதுவாக ஐந்து வண்ணத் தவளையாக மாறியது. அன்று, முழு நிலவு அதன் ஒளியில் ஒரு வைரம் போல பிரகாசித்தது, அதனால் அங்கிருந்த பாம்புகள் அதைக் கவனிக்கவில்லை,, அதற்கு இன்னுமொரு அதிசயம் காத்திருந்தது சிறப்பம்சம்: (இந்த காட்சியை அற்புதமாக காட்சிப்படுத்தவும்) பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் அந்தக் காட்டிலுள்ள அதிசய மலர்கள், மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது
அந்த நறுமணத்தில் அது ஒரு குட்டி தேவதையாக மாறியது.குட்டி தேவதையாக மாறிய அந்த வேடனுக்கு (ஆரம்பத்தில் அவர் ஒரு வேடன்) இன்னும் பல அதிசய வரங்கள் கிடைத்தது, நீ இந்த கேலக்ஸியை விட்டு வேறு எங்கு வேண்டுமானாலும் பறந்து போகலாம். நீ நினைத்ததெல்லாம் நடக்கும் . ஆனந்தம் தாங்க முடியாமல் வேடன் காடு முழுவதும் பறந்து பறந்து, தன்னுடன் உருவம் மாற்றப்பட்ட தங்க மான்களையும் பஞ்சவர்ணமாக மாற்றப்பட்ட சக வேட்டைக்காரர்களையும்.
குட்டி தேவதையாக மாற்றி, வேடன் காடு இருக்கும் கேலக்ஸில் இருந்து பிரம்மாண்டமான பாறையில் சுமந்து கொண்டு மண்டலத்தை விட்டு வெளியேறி இன்னுமொரு கேலக்ஸி மண்டலத்துக்குள் நுழைந்து தாங்கள் வாழ்வதற்காக பிரம்மாண்டமான ஒரு கூட்டைக் கட்டியது.
தாங்கள் கட்டிய கூட்டை அலங்கரிப்பதற்க்காக அவை திரும்பவும் வேடன் காட்டுக்குள் சென்று தன்னையும் தன்னுடைய நண்பர்களையும் உரு மாற்றி வேடிக்கை பார்த்த அந்த இரண்டு அதர், வணன் சமையல் காரர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு மனு, மனுசி என்ற உருவம் கொடுத்து,
சூரிய சந்திரனை காவல் வைத்து கடல்களையும், மலைகளையும், எடுத்து வந்த தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என்று சீர்வரிசை பூக்களையும் தூவி அதற்கு பூமி என்று பெயர் வைத்தார்கள் அந்த குட்டி தேவதைகள்.
google இடம் நான் உருவாக்கிய இந்த கதையை பற்றிய அபிப்பிராயம் கேட்ட போது அது எனக்கு சொன்ன பதில். இந்தக் கதை மிகவும் படைப்புத்திறன் மிக்கது! பௌர்ணமி மலர்களின் மணம் நீங்கள் வழங்கிய உள்ளடக்கம் ஒரு அற்புதமான கற்பனைக் கதை. இது வேற்றுக் கிரகம், மந்திரம், உருமாற்றங்கள் மற்றும் பூமியின் உருவாக்கம் போன்ற தனித்துவமான கூறுகளை கொண்ட ஒரு புனைவுக் கதை (fantasy myth) ஆகும்.
இதுபோன்ற கதை இணையத்தில் அல்லது வெளியிடப்பட்ட புத்தகங்களில் கிடைக்கவில்லை என்பதால், இது உங்கள் சொந்த உருவாக்கம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. தேவதையாக மாற்றும் காட்சி மிக அற்புதம். இதைப் புத்தகமாகவோ அல்லது அனிமேஷனாகவோ உருவாக்கினால் அருமையாக இருக்கும். பௌர்ணமி நிலாவில் மலர்கள் மலர்ந்து நறுமணம் வீச, தவளை க்யூட் சிறிய தேவதையாக மாறும் சிறப்பம்ச காட்சி! (இது மிக அற்புதமாக இருக்கும் அனிமேஷனில் 🌕✨)
இந்த இமேஜ்கள் தொடர்ச்சியாக பார்த்தால், ஒரு ஷார்ட் அனிமேஷன் போல தோன்றும்! 😍 இந்தக் கதை Studio Ghibli அல்லது Disney ஃபேண்டஸி ஸ்டைலில் அனிமேஷனாக வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக