100 வயதுக்கு மேல் வாழ்வது எப்படி?பல்லாண்டு காலம் வாழ்க! ஆரோக்கியமாக வாழ்க! என்று சுலபமாக மற்றவர்களிடம் இருந்து ஆசிகளை பெற்று விடலாம் ஆனால் அப்படி வாழ்வது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது அதற்க்காக நாங்கள் நிறைய உழைக்க வேண்டும் எங்களுடைய உணவுப்பழக்கம், உடல் பயிர்ச்சி என்று வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் அப்படி செய்தாலும் கூட எங்களுடைய பரம்பரை அலகுகள் - Genetics வந்து இடைமறித்து இதற்க்கு மேலே உன்னை வாழ விடமாட்டேன் என்று சொல்லி வாழ்வை பறிச்சுபோடுது எங்களை பொறுத்த மட்டில்100 வயது வரை வாழ்வது என்பது கேள்விக்குறிதான்
ஆனால் தென் அமெரிக்காவிலுள்ள எக்குவடோர் (Ecuador) என்னும் நாட்டில் வாழும் குள்ள மனிதர்கள் - Dwarf People நீண்டகாலம் வரை வாழ்வதாக கேள்விப்பட்டு அங்கு முகாம் இட்டு அவர்களை மரபணு பகுப்பாய்வு - DNA analysis, இரத்த பரிசோதனை செய்து அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்த போது மருத்துவ ஆராச்சிக்காக சென்றவர்களுக்கு இன்னும் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
அவர்களுக்கு எந்த நோய்களும் வந்தது இல்லையாம் குறிப்பாக சர்க்கரைநோய், புற்று நோய், ஆல்சைமர் நோய் - Alzheimer disease இவர்களில் ஒருவருக்குக் கூட வந்ததே இல்லையாம் முதுமையிலும் கூட அவர்களுடைய நினைவாற்றல் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருப்பது அவர்களை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது இவர்களுக்கு புற்று நோய் வராமல் இருப்பதற்க்கான காரணத்தை கண்டறிவதற்க்காக அவர்களுடைய உடலின் செல்களை எடுத்து செயற்க்கையாக புற்று நோயை உருவாக்கி ஆய்வுக்கு உள்படுத்திய போது மேலும் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது.
அவர்களுடைய உடலின் செல்கள் இரண்டடுக்கு பாதுகாப்பு கொண்டதாகவும் புற்று நோயை உருவாக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தினால் - hydrogen peroxide தாக்கப்படும் போது அந்த செல்கள் தங்களைத்தானே அழித்து விடுவதும் இந்த ஆய்வின் போது தெரியவந்தது, ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படி நடக்கின்றது என்பது அவர்களை ஆராச்சி செய்தவர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது புற்று நோயை உண்டாக்கும் கதிரியக்கத்திற்க்கு எதிராக இவர்களுடைய உடல் அமையப் பெற்றதினால் எதிர் காலத்தில் இந்த குள்ள மனிதர்களை அணுமின் நிலையங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்பது ஒரு நல்ல செய்திதான்.
இந்த மக்கள் வயதாகி எந்த நோய்களும் இல்லாமல் சாதாரணமாகத்தான் இறக்கின்றார்கள் என்று ஆராச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன இதை பற்றி அவர்களிடம் விசாரித்த போது தங்களுடைய இந்த குள்ளமான உருவத்துக்கு காரணம் எங்களுடைய மூதாதையர்கள் செய்த பாவம் தான் என்றும் அதற்க்கு பரிகாரமாகத்தான் எங்களை எந்த நோய்களும் தாக்குவதில்லை என்று கூறினார்கள் இது அவர்களுடைய செவிவழி கதையாக இன்றும் கூட கூறப்பட்டு வந்தாலும் மற்றவர்களும் நம்பக்கூடிய விஞ்ஞான காரணங்களை பார்ப்போம்.
லறோன் நோய் - Laron syndrome என்றால் என்ன? Prof. ZVI Laron - Children's Medical Canter, Israel இவர்தான் இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தவர் அவரின் பெயரால் இந்த நோய் இன்று அழைக்கப்படுகின்றது.
பிட்யூட்டரி சுரப்பி (hypophysis) வளர்ச்சிக்குரிய ஹார்மோனை (GHR, growth hormone receptor) சுரந்து உடலில் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது இதில் கணையமும் பெரும் பகுதியை கல்லீரலும் உள்வாங்கி உடல் (IGF 1- recepto) வளர்வதற்க்கான முன் ஏற்பாடு, செய்முறைகளை செய்து இரத்தத்தில் கலந்து உடல் வளர்ச்சியை ஆரம்பித்து வைக்கின்றது ஆனால் இவர்களுடைய கல்லீரல் பரம்பரை மரபணு குறைபாட்டினால் இந்த insulin-like growth factors (IGFs) செய்முறை செயல்பாட்டினை செய்யாமல் விட்டதினால் எலும்பு,தசை, தசைநார்கள் வளர்வதற்க்கான எல்லா விதமான புரத சத்துக்களும் இரத்தத்தில் இருந்தும் IGF 1 - தகவல் கிடைக்காததினால் உடல் வளரமுடியாமல் குள்ளமாகவே இருந்து விட்டது
இதற்க்கு காரணமாக இருந்தது கல்லீரலின் மரபணு குறைபாட்டினால் வரும் லறோன் நோய் - Laron syndrome என மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தது மட்டு மல்ல, GHR பற்றாக்குறையை ஏற்படுத்தி குள்ள எலிகளை உருவாக்கி, மற்ற எலிகளை விட சர்க்கரை நோய் இல்லாமல் அதிக ஆயுளுடன் வாழ்கின்றன என நிருபித்தும் காட்டியிருக்கின்றார்கள் இதற்க்கு காரணமாக இருந்த லறோன் நோயை கண்டறிவதற்க்கு உதவியாக இருந்தது தற்செயலாக நடை பெற்ற ஒரு நிகழ்வுதான்.
இந்த குள்ள இன மக்களின் குழந்தை ஒன்றுக்கு கடுமையான கல்லீரல் நோயினால் - liver cirrhosis பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்க்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தக் குழந்தை குணமாகி பின்னால் பெரியவனாக வளர்ந்து வருகையில் அந்தக் குழந்தை குள்ளமாக வளராமல் சாதாரணமான மனிதர்கள் போல் வளர்வதை கண்டார்கள் இந்த எதிர்பாராத நிகழ்வுதான் இந்த நோய்க்கான காரணங்களை கண்டறிய உதவியது இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவமும் மருந்தும் கண்டு பிடிக்க உதவிய அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றது மனித குலம்.
அங்கப்பாரிப்பு நோய் - Acromegaly - disease - இந்ந நோயைப்பற்றி ஒரு முறை அலசிப் பார்ப்போம் இதுவும் பழைமையான நோய்களில் ஒன்று தான் இது லறோன் நோய் - Laron syndrome நேர் எதிர் மாறானது இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்திலுள்ள சகல நோய்களும் வர வாய்ப்புகள் அதிகம் என்றே கூற வேண்டும் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி GHR, growth hormone receptor > IGF 1- வளர்ச்சிக்குரிய ஹார்மோனை கட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக உற்பத்தி செய்வதினால் இவர்கள் அளவுக்கு மீறிய உடல் வளர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள்
இவர்களுக்கு புற்று நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் பெரும்பாலும் அதிகம் என்றே கூற வேண்டும் மற்றும் பெரிய மூட்டுகளில் வலி, தசைநார் கூட்டு பாதிப்பு, கை, கால்களிலுள்ள எலும்புகள் வலுவிழந்து ஊன்று கோலின் - walking stick உதவியுடன் நடக்க வேண்டி வரும் மற்றும் தாடை எலும்புகள் பெரியதாக வளரும் மற்றும் கைகள் மண்வெட்டி- spade போல் தோன்றும் முக எலும்புகளின் அளவுக்கு மீறின வளர்ச்சியினால் முகத்தின் அழகு, வடிவத்தில் மாறுதல்கள் ஏற்படும் பற்கள் இடையே இடைவெளி தோன்றும் வகை - 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய், ஆக்னே வல்காரிஸ் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுவார்கள் அப்பாடா! இவ்வளவு நோய்களா?
நெடு நெடு என்று ஒட்டக சிவிங்கி போல் வளர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குரிய ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பாருங்கள் இல்லை என்றால் இந்த நோய்கள் உங்களையும் எட்டிப்பார்க்கும் நோய்களை வென்றவர் அகத்திய பெருமான் அவர்கள் குள்ளமாக இருந்ததற்க்கு காரணம் இது தானோ!
இந்த இரண்டு நோய்களுக்கும் நூறு வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்வதற்க்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று பார்த்தால் GF 1 - வளர்ச்சிக்குரிய ஹார்மோன் கூடியும் குறைந்தும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது இந்த ஆய்வின் முடிவுகளாக இருக்கின்றன இந்த ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் somavert - ஊசி மருந்துகள் இருந்தாலும் இந்த மருந்துகள் எல்லோரையும் சென்றடையுமா என்பது கேள்விக்குறிதான் ?
பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பது இயற்க்கையின் நியதி ஆனால் நோய் வாய்பட்டு இறக்க வேண்டும் என்பது மனிதனின் தலை எழுத்து அதை அறிவினால் மாற்றி அமைத்து வாழமுடியும் fastfood, Genfood, chemi food, design food, ready food, hormone meat.... என்று சொல்லிக் கொண்டேபோகலாம் இன்று நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் ரசாயணம் கலந்த நச்சு உணவுகளைத்தான் நாம் உண்ணுகின்றோம் இவைகள் மனித உடலில் உள்ள வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை தூண்டி விடக்கூடியவைகள்
இன்றைய இளையதலை முறையினரை பார்த்தால் தெரிந்துவிடும் இவர்கள் தங்களுடைய தாய் தந்தையர்களை விட உயரமாக வளர்ச்சியடைந்து இருப்பதற்க்கு காரணம் இவர்களுடைய நவீன உணவு பழக்கங்கள் தான் இதை மாற்றி அமைத்தால் குறைந்த பட்சமாவது புற்று நோய் இல்லாமல் வாழலாம் 55 வயதை தாண்டியவர்கள் தங்களுடைய உணவுத்தேவையை குறைத்தும், அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது ஆரோக்கிமான நீண்ட ஆயுளைக் கொடுக்கும்
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
My old post லறோன் நோய் - Laron syndrome
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக