ஔடதம்-MCT: MCT எண்ணெய் என்பது நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களைக் (MCT) கொண்ட ஒரு எண்ணெய் ஆகும். 6 முதல் 12 கார்பன் அணுக்களைக் கொண்டது. [C-கார்பன்] 6கார்பன் அணுக்களை கொண்டது C:6-கேப்ரோயிக் அமிலம், C:8-கேப்ரிலிக் அமிலம், C:10. காப்ரிக் அமிலம், C:12- லாரிக் அமிலம்.
இந்த எண்ணைய் இயற்கையாக ஆரோக்கியமான குடல், பெரும் குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள் உதவியுடன், சரியாக செரிமானம் அடையாமல் பெரும் குடலுக்கு தள்ளிவிடப்படும் நார்ச்சத்து உணவுகள் மூலம், பல நோய்களின் அருமருந்தாக விளங்கும் "ஔடதம்-MCT" என்னும் குறுகிய இணைப்பை கொண்ட எண்ணைய் தயாரிக்கப்படுகின்றது. [3C< 6கார்பன் அணுக்கள்] குடல் பழுதுபட்டு, ஆரோக்கியம் இழந்த நிலையில் இந்த நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களை தாவரங்களிலிருந்து பெறமுடியும்.
மூலிகை தயாரிப்பாக, MCT எண்ணெய்கள் தேங்காய் அல்லது பனை கர்னல் எண்ணெயிலிருந்து மற்றும் நெய், ஆட்டுப்பாலில்லிருந்து பெறப்படுகின்றன. இந்த எண்ணைய் சுவை மற்றும் மணமற்றவை பல்வேறு உணவுகளுக்கு ஏற்றவை, சமைக்காமல் சூடு ஏற்றாமல் இந்த எண்ணையை அப்படியே பயன்படுத்தவும். சூடு ஏற்றினால் உடைக்கப்பட்டு அதிக கார்பன் ஏற்றப்படலாம்.
MCT எண்ணெயின் பின்னணியில் உள்ள அறிவியல் ஆதாரங்களை ஆராய்வோம். எடை மேலாண்மை,[உடலிலுள்ள மேலதிக கொழுப்பு எரிக்கபடுகின்றது] அறிவாற்றல் செயல்பாடு [ அறிவாற்றல் மேன்பட கீட்டோன் உடல்களை மூளைசெல்கள் அதிகமாக பயன்படுத்துகின்றன, இதற்கான ஒரு எடுத்துக்காட்டு, மழலைகளின் அறிவாற்றல் மேன்படுவதற்காக பரப்பிரம இயற்கை, நமது பிரபஞ்ச ஆற்றல் தாய்ப்பாலில் அதிகமாக வைத்திருக்கின்றது. இதன்நிமித்தம் பரம்பரை ஞானம் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றன]
மற்றும் கீட்டோஜெனிக் உணவுமுறைகளுக்கான ஆதரவு தொடர்பாக MCT எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் விவாதிக்கின்றேன். இந்த எண்ணையை பயன்படுத்தி பல நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். நேரடியாக இந்த எண்ணைய் உங்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
மனித உடலில் உள்ள பெரும்பாலான செல்களுக்கு சர்க்கரை வடிவில் ஆற்றல் தேவைப்படுகின்றது. இது போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், கல்லீரலில் உள்ள கொழுப்புகளிலிருந்து உருவாகும் கீட்டோன் உடல்கள் ஆற்றலை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கீட்டோன் உடல்கள் மாற்று ஆற்றல் மூலங்களாக பயன்படுகின்றன.
MCT எண்ணெய் (நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்) தேங்காய் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கீட்டோன் உடல் சாறு ஆகும், இது கீட்டோஜெனிக் மற்றும் குறைந்த கார்ப் உணவுகளுக்கு ஏற்றது. இது உங்கள் உடல் மிக விரைவாகப் பயன்படுத்தக்கூடிய நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணைய் கீட்டோன் உடல்லாக உடலுக்கு பயன்படுகின்றது. [கல்லீரல் --> C:6-கேப்ரோயிக் அமிலம் --> கீட்டோன் உடல்களாக மாற்றப்படுகின்றன.]
இதனுடைய சாராம்சம்: நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது கொழுப்பு அமிலங்கள் கல்லீரலால் கீட்டோன் உடல்களாக மாற்றப்பட்டு, உங்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன. நீங்கள் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்தாலும் பாதிப்பு ஏதுமில்லை, உடல் இயக்கம் இறந்து போகாமல் உயிர்வாழ இந்த கீட்டோன் உடல்கள் உதவுகின்றன.மனித உடல் எவ்வளவு நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பசியுடன் வேட்டையாடச் செல்லும் ஆதி மனிதனுக்கு சக்தியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை, இன்றைய கான்கிரீட் காடுகளில் வாழும் நாம், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நீங்கள் விரதம் இருக்கும் போது கீட்டோன் உடல்கள் கல்லீரலால் உருவாக்கப்படுகின்றன இதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள 75 விழுக்காடு கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றது.
இதன்நிமித்தம் உடல் பருமன், தொப்பை குறைக்கப்படுகின்றது இதுமட்டுமின்றி மிகச் சிறந்த ஹைலைட் , புற்றுநோய் செல்கள் சர்க்கரை(குளுக்கோஸ்) ஆற்றல் இல்லாமல் சுருங்கி இறக்கின்றது காரணம் பழுதுபட்ட செல்களால் அதாவது புற்றுநோய் செல்களால் கொழுப்பு ஆற்றலை பயன்படுத்த முடியாது. ஆரோக்கியமான செல்கள் மட்டுமே கீட்டோன் உடல்களை பயன்படுத்துகின்றன.
தேங்காய் பால்: அளவோடு உட்கொள்ளும்போது அது ஆரோக்கியமாக இருக்கும். இதில் கொலஸ்ட்ரால் இல்லை. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் விற்றமின்கள் நிறைந்தது. விற்றமின்கள்: B1, B2, B3, B4, B6, C, E, பயோட்டின். கனிமங்கள்: பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து.
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
ஒரு நாற்கரத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகை 360° ஆகும்.
காரணம்: ஒவ்வொரு நாற்கரத்தையும் இரண்டு முக்கோணங்களாகப் பிரிக்கலாம். ஒரு முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகை 180°, 2 × 180° = 360°.
ஒரு வடிவியல் உருவத்திற்குள் உள்ள அனைத்து கோணங்களும் எவ்வளவு பெரிய அளவில் சேர்க்கப்படுகின்றன என்பதை உட்புற கோணங்களின் கூட்டுத்தொகை விவரிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக