திங்கள், 15 ஜனவரி, 2024

Homeopathy: Homeopathy was invented over 200 years ago by the German physician

ஹோமியோபதி: ஹோமியோபதி 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் மருத்துவர் சாமுவேல் ஹானிமன் (1755-1843) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  இன்றுவரை, ஹோமியோபதியின் மருத்துவ செயல்திறனை நிரூபிக்கும் அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்,"க்ளோபுல்ஸ்" ஹோமியோபதி மருந்து ஒரு உணவு சப்ளிமெண்ட்ஸ் மற்றும் சாத்தியமான மருந்துப்போலி விளைவுக்கு அப்பால் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை  என்பதைக் முந்தைய மற்றும் தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றது.

ஹோமியோபதி மருந்துகளை பற்றி விமர்சனங்களும் கேள்விகளும், புகார்களும் உண்டு இதுவும் மற்ற மருத்துவ மருந்துகள் போல் பக்க விளைவுகளை உண்டாக்க கூடியது  என்றும், வெள்ளை மருந்து-மணிகள் குறைந்த பட்சம் அல்லது கண்டறிய முடியாத அளவு மருந்துகளை கொண்டுள்ளது என்றும்,

க்லோபுலி-Globuli என்னும் சிறிய வெள்ளை மருந்து மணிகள் வெறும் சர்க்கரை வில்லைகள் [Placebo-Effekt] என்று குறை கூறுபவர்களும்  உண்டு,  இருப்பினும் ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகளும் இருக்கின்றது.

சாமுவேல் ஹானிமனின் மறைவுக்கு பின்னால் வந்தவர் ஹோமியோபதி மருத்துவர் Dr.வில்ஹெல்ம் ஹென்ரிக் ச்கூச்லேர், ஜெர்மனி-ஓல்டன்பேக், என்னும் இடத்தில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் (1821-1898) வாழ்ந்த, இவர் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு காரணம்

உடல் செல்களின் கட்டமைப்புக்கு தேவையான  தாது உப்புக்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் குறைபாடுகளும் தான் காரணம் என தன்னுடைய ஆய்வின் மூலம் கண்டறிந்து அதற்காக  விசேஷமாக தயாரிக்கப்பட்ட,12 வகை ஹோமியோபதி- தாது உப்புக்களை கொண்டு தன்னிடம் வந்த நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தி அதில் வெற்றியும் அடைந்தார்.

மனித உடல், மருந்து போலி விளைவுகளுக்கு பதில் அளிக்கின்றனர். இதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. இதற்கு ஆதாரமாக:  ஒரே நேரத்தில் காய்ச்சல் என்று மருத்துவரை பார்க்கச் சென்ற இரண்டு குழந்தைகள் மேல், ஒரு குழந்தைக்கு உண்மையான மருந்தும் மற்ற குழந்தைக்கு போலியான மருந்தும் கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில்  குணமாயிருக்கின்றார்கள். இது எப்படி சாத்தியப்பட்டது. மனித உடல்  போலியான, பொய்யான ஒன்றுக்கு  விரைவாக பதில் அளிக்கின்றது. இதன் நிமித்தம் நோய்கள் குணமாகின்றது என்று நிரூபித்திருக்கின்றது.

[மருந்து போலி விளைவுகளுக்கு எடுத்துக்காட்டாக: கையில் நூல் கட்டுவது, வேப்பிலை விபூதி அடிப்பது போன்ற  ஒரு நம்பிக்கை தீராத நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது] ஹோமியோபதி மருந்து 200 ஆண்டுகளாக  இதன் அடிப்படையில் நோய்களை குணமாக்கியிருக்கின்றது. க்ளோபுல்ஸ்" ஹோமியோபதி மருந்துகள்  போலியான ஒரு விளைவை மட்டுமே கொண்டிருந்தன. இதில் மருத்துவ ரீதியாக செயல்படும் பொருட்கள் எதுவும் இல்லை.

ஹோமியோபதி என்பது ஒரு முழுமையான இயற்கை மருத்துவமாகும், இது சுய-குணப்படுத்தும் சக்திகளை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலுக்கு ஒரு தூண்டுதலை வழங்குகின்றன, இதன் நிமித்தம் உயிரினம் நோயை எதிர்த்துப் போராட முடியும்.என்பதை மட்டும் கொண்டுள்ளது.

நோய்களை குணமாக்கும் விளைவுகள் எதுவும் இல்லை அதனால் பக்க விளைவுகளும் இல்லை, நோய்களை குணமாக்கும் ஒரு மருந்திற்கு கண்டிப்பாக ஒன்று இரண்டு பக்கவிளைவுகள் இருக்கும், இருக்கவேண்டும். அப்படி இருந்தால்த்தான் அந்த மருந்து பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த பக்கவிளைவுகள் ஓரளவிற்கு உடலால் தாங்கக்கூடியதாக இருந்தால் நோயாளியால் ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, புற்றுநோய்க்கான கடுமையான பக்க விளைவுகளுடன் கூடிய கீமோதெரபி. இருப்பினும் பயனுள்ளதாக இருக்கின்றது இந்த மருந்துகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவு மற்றும் பெருக்கத்தைத் தடுக்கின்றன.

ஒரு காலத்தில் மூலிகைகள் என்று அழைக்கப்பட்டவை இன்று உடலுக்கு அத்தியாவசிய உணவு, ஊட்டச்சத்தாக மாறியிருக்கின்றது, இன்றைய மருத்துவ உலகம் இதை ஒரு உணவு சப்ளிமெண்ட்ஸ்டாக பார்க்கின்றது. எடுத்துக்காட்டாக: இரும்பு சத்து குறைபாடா,  நிறைய கீரையை சாப்பிடு, தைராய்டு குறைபாடு அயோடின் உப்பு. இதுபோன்று உணவு சப்ளிமெண்ட்ஸ்கள் நிறைய உண்டு. 

இரத்த சோகை என்றால் என்னவென்று அறியாத ஒரு காலத்தில் கீரைகள் ஒரு மூலிகையாக இருந்தது. இன்றைய மருத்துவ உலகம், இவைகளை ஒரு மருந்தாக இல்லாமல் ஒரு உணவு, ஊட்டச்சத்தாக பார்க்கின்றது.

நீங்கள் நம்பிக்கை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டாலும், உங்கள் நோய்கள் குணமாகும் என்பது ஒரு சாத்தியமான உண்மை.

 

ஜனவரி 22,  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கண்டிப்பாக அருள்மிகு ஆஞ்சநேயர் கலந்து கொள்வார். நீங்கள் அதில் கலந்து கொள்ளுங்கள்  ஆஞ்சநேயரை தேடுங்கள் அவர் அருள் ஆசிய பெறுவீர்கள்

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக