வியாழன், 11 ஜனவரி, 2018

பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய, யுத்தம் என்னும் சொல்லை,
ஆழக் குழி தோண்டி புதைத்திடுவோம்
முகநூல் போன்ற பெரும்பாலான சமூகவலைத்தளங்களில்,  அரசியல், ஜாதி, மதச் சண்டைகளுக்கான ஒரு களமாக மாறியிருக்கின்றது, இதிலிருந்துஎப்படி உங்களுடைய கௌரவம் மற்றும் தனித்தன்மையை  காப்பாற்றிக் கொள்ள முடியும்.

சமூகவலைத்தளங்கள் உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை புரிந்து கொள்ள தவறியதின் விளைவுகள் தான் இந்த இழிவான, சில சமயங்களில் தலைகுனிவைத் தரும் பழி, இழிச்சொல்களை எல்லாம் காணவும் கேட்கவும் முடிகின்றது,

பலர் இணைந்து ஒருவரை கேலி செய்தல். பலரறியப் ஒருவரை பழித்துரைத்தல். இல்லாது பொல்லாதது சொல்லல் இது எங்களுக்கான ஒரு அடையாளம் அல்ல,

வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு ஜாதி என்றால் என்னவென்று கூட தெரியாது. நாங்கள் அதை அவர்களுக்கு ஊட்டி வளர்க்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு மதத்தைக் கூட நாங்கள் திணிப்பதில்லை அது அவர்களின் தனிச்சுதந்திரம். ஏன் நானும் கூட ஜாதியை மறந்து பல வருடங்களானது. அதை திரும்பவு நினைவு படுத்தியதும் ஒரு சிலரின் வலைத்தள பதிவுகள்தான்.

சமூகவலைத்தளங்களான முகநூல் மற்றும் யூட்ரூப் வீடியோ மூலம் ஜாதியை ஒழிக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி  ஜாதி, மத வெறியை ஊட்டி வளர்க்கின்றார்கள் ஒரு சில சமூக ஆவலர்கள்(.....)
💙💛💕💚
இதிலிருந்து எப்படி வெளியேறுவது  அதற்கான ஒரு சர்ந்தப்பம், திருப்புமுனை கிடைக்கும் போது கண்டிப்பாக அதை பயன்படுத்த தவறாதீர்கள். பழையன கழிந்து புதியன புகும்,  போகிப் பண்டிகையில் தீய சிந்தைகள், கெட்ட பழக்கங்களை கூட தீயிலிட்டு பொசுக்கி விட முடியும். 💜💛💘💙

எனக்கும்,  உங்களுக்கும்  தெரிந்த பல நல்ல விடையங்களை  பகிர்ந்து கொள்ளவும் இயற்கை மற்றும் காட்டு விலங்குகளை அழிவின்றி பாதுகாத்து, பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய ஜாதி, மதச் சண்டைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு,

உலக மக்களின் ஒற்றுமை, இயற்கை நலன்களை பேணிக் காப்பதில் சமூகவலைத்தளங்கள் மிகுந்த அக்கறையுடன் இயங்கி வருகின்ற இந்த வேளையில் இது போன்ற சண்டைகள் அவசியம் தானா? மற்றவர்களின் மதங்களை குறை சொல்வதை விடுத்து, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விலகியிருப்பது தான் சாலச்சிறந்தது.வண்ணமயமான நண்பர்களே! எதிர்ப்பு ஒரு பொய்யான பிரச்சாரத்தை பரப்புகிறது என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள் அன்பும் நட்பும் அற்புதமானது ...... நன்றி.......♥♫ ♪♥ மகேஷ்-ரவி

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக