வியாழன், 28 டிசம்பர், 2017

💚💛கியூபா சருகு நண்டுகள்

கடல் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும் இனப் பெருக்க காலத்தில்  நீண்ட தூரம் நீந்தி வந்து கடற்கரை மண் குழியில் முட்டைகளை இட்டு விட்டு கடலுக்கு திரும்புகின்றன,

கியூபா, ஹவாய் தீவு தரை வாழ் சிவப்பு நண்டுகள் நிலத்தில் வாழ்ந்தாலும் இனப் பெருக்க காலத்தில் நீண்ட தூரம் பயணப்பட்டு கடலில் முட்டைகளை கலந்து விட்டு, திரும்பவும் தரைக்கு திரும்புகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையான நண்டுகள் இறந்தும் விடுகின்றது.

புதுசு புதுசாக கட்டிடம் சாலைகள் என்று, சுற்றுச்சூழல் இடங்கள் மாறி இருந்தாலும், இந்த நண்டுகள் எப்படித்தான் கடல் இருக்கும் இடத்தை நினைவில் வைத்து திரும்பவும் பிறந்த இடத்திற்கு செல்கின்றன  என்பது  ஒரு ஆச்சரியம் தான்.
பட்டாசு-2018
புது வருட கொண்டாட்டத்திற்காக மத்தாப்பூ வானவேடிக்கை  பட்டாசுகளை வாங்க விருப்பப்பட்டால் தேவைக்கு ஏற்ப அளவோடு வாங்கி முற்றிலும் தீர்ந்து போகும்
மட்டும் வெடித்து மகிழ்ந்து விடுங்கள். அதில் எதையாவது ஒன்றை மிச்சப்படுத்தி வீட்டில் மறைத்து வைக்காதீர்கள். அது பின் வரும் நாட்களில் பெரிய தீ விபத்துக்களுக்கு காரணமாக அமையலாம்.

❤ - வெடிக்காத பட்டாசுகளை அப்படியே நிலத்தில் விட்டு விடுங்கள், அதை எடுத்து மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்காதீர்கள்.

❤ -  கறுப்பு சந்தை மற்றும் அரசு அங்கீகாரம் இல்லாத பட்டாசுகளை மலிவு என்று வாங்க முயற்சிக்காதீர்கள் . தரக்கட்டுப்பாட்டு முத்திரை இருக்கா என்று பார்த்து வாங்குங்கள்.

❤ - எவ்வளவுதான் பாதுகாப்பான பட்டாசுகளாக இருந்தாலும் கூடுமான வரை கையில் வைத்து வெடிக்காதீர்கள். சில சமயங்களில்   சேமிப்பு கிடங்கு,போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட பழுது மற்றும் தயாரிப்பு தவறுகளை கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம்.

❤ - முதியவர்கள் இல்லம், மருத்துவமனை மற்றும் பறவைகள் படுத்துறங்கும் அடர்ந்த மரங்கள் உள்ள இடங்களை தவிர்க்கவும்.

❤ - தீ விபத்துக்களை உண்டுபண்ணும் இடங்கள், குப்பைத்தொட்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடம்,  பாதாள அறைகளை கூடுமான வரை தவிர்க்கவும்.

❤ - வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டு விடுங்கள் மற்றும் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்கு பண்ணை இடங்களையும் தவிர்க்கவும்.

-குழந்தைகள் பெரும்பாலும் கேளிக்கை மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடித்திரிபவர்களாகத்தான் இருப்பார்கள், அவர்களை உங்கள் பார்வையில் வைத்திருங்கள். வானவேடிக்கை தீப்பொறிகள் சில சமயங்களில் அவர்களின் புது ஆடையில் பற்றிக் கொள்ளலாம்

மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறும் போது நிலத்திலுள்ள கல் மண் போன்ற பிற பொருட்கள் மிக வேகமாக சுழற்றி குழந்தைகளின் முகத்தில் வீசப்படும் சாத்தியங்களும் இருப்பதினால் அவர்களை ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்து வேடிக்கை பார்க்க அனுமதியுங்கள்.

❤ -மதுபோதை, சுய நினைவு இழந்த நிலையில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்காதீர்கள், பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருப்பது இந்த சூழல்தான்.

❤ -ஆர்வக்கோளாறு காரணமாக அயலவர்களின் வீட்டு மொட்டைமாடி, முற்றம், முக்கியமாக அவர்களின் பூச்செடிகள் மீது பட்டாசுகளை கொளுத்தி எறிதல் மேலும் ஹிக்-போதைக்காக வெற்று டப்பாக்களை வெடிக்க வைத்து பறக்க விடுவது,


வர்ண்ணப் பொடி பொட்டலங்கள் சுற்றி வெடிக்க வைப்பது போன்ற விபரீத விளையாட்டுக்கள், ஆபத்தானது மட்டுமல்லாமல்  சட்டவிரோதமானதும் கூட, எப்பொழுதும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வெடி பொருட்கள், நெருப்பும்  ஒரு விளையாட்டு பொருள் இல்லை என்பதை.

❤ - எதிர் பாராமல் ஏதாவது விபத்து ஏற்பட்டால் தாமதிக்காமல் அவசர அழைப்பு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள். மதுபோதையில் முதலுதவி என்ற பேரில் ஏதாவது ஒன்றை செய்து வைக்காதீர்கள், மருத்துவமனை மருத்துவரின் உதவி உடனடியாக தேவை என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.   

நன்றி மகேஷ்-இரவி


❤ - இனிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்.

பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......
sri rama jyam-2016.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக