இந்த கலியுகத்தில் ❤❤
Pavalaran.blogspot.com
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலுள்ள பொருட்காட்சி மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம்
எனது கருத்துக் கணிப்பில்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலுள்ள விக்டோரியா & ஆல்பர்ட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உலகின் மிக சுவாரஸ்யமான கலாச்சாரங்கள், பல வியக்கவைக்கும் மெகா பொருள்கள். மட்பாண்டங்கள் அதிர்ச்சி தரும் பொருட்கள், தளபாடங்கள், ஃபேஷன், கண்ணாடி, நகை, புகைப்படம், சிற்பம், பழம் பெரும் ஜவுளிகள் மற்றும் ஓவியங்களை நீங்கள் இங்கே காணமுடியும்
எனது கருத்துக் கணிப்பில்
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலுள்ள தொல்பொருள், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் "டார்வின் மையம்" ஒரு அற்புதமான அருங்காட்சியகம் பரந்த நுழைவு மண்டபம் அங்கு முழு நீள டைனோசர் எலும்புக்கூட்டை நீங்கள் காணமுடியும் 22 மில்லியன் பூச்சிகள் மற்றும் தாவர, மனித பரிணாம தொகுப்பு, ஆதிகால மனிதர்களின் மண்டை ஓடுகள்,
'பூமியின் கருவூல' விலைமதிப்பற்ற உலோகங்கள், கற்கள் மற்றும் படிகங்களின் உருவாக்கம் இடம் தன்மைகள் போன்ற பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் நீங்கள் சேகரிக்கமுடியும்.
பூமியின் பொக்கிஷங்கள்
பல வண்ணக் கதிர்களை வெளியிடும் நவ-மணிகள் - வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் மேலும் அப்பட்டைட்டு, ஜேட் ,ஜாஸ்பர், காணீலியன், சந்திர காந்த கல், நீல மாணிக்ககல், நெருப்பு கல் மேலும்
பல்வேறு வண்ணங்கள் கொண்ட, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பச்சை, பளுப்பு, சாம்பல் தாதுக்கள் கனிமங்கள், தனிமங்கள் கல் மண் , மணல் மேலும் பஞ்ச உலோகங்கள் இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், கல்சியம், மெக்னீசியம், காந்த கல். இன்னும் எத்தனை வகை கார உலோகங்கள் விற்றமின்கள், நீர், காற்று, பல்வேறு வாயுக்கள் மரம் செடி, தாவரங்கள், பூ, காய் கனி பல்வகை தானியங்கள் பல்வேறு நீர் நில வாழ் உயிரினங்கள்
இத்தனை பொக்கிஷங்களுக்கும் சொந்தக்காரன் தான் எங்களுடைய பூமி
விண்வெளி & வானியல் சென்ற ஆய்வாளர்கள் அத்தனை பேரும் பூமியை பார்த்து சொன்ன ஒரேஒரு வார்த்தை என்ன தெரியுமா, எங்களுடைய பூமி மிகவும் அழகானது.
ஒரு நட்சத்திர வெடிப்பில் இருந்து தோன்றிய சூரிய குடும்பத்தில் எங்கள் பூமிக்கு மட்டும் ஏன் இவ்வளவு பொக்கிஷங்கள், இவைகள் எங்கிருந்து பூமிக்கு வந்து சேர்ந்தது எங்கள் பூமி வேற்று நட்சத்திர குடும்பம் அல்லது வேற்று விண்மீன் (கேலக்ஸி) கூட்டத்தில் இருந்து எங்கள் சூரிய குடும்பத்தில் இணைந்து கொண்டதா வாழ்வதற்கு ...??
நுழைவுச்சீட்டு இலவசம் மேலும் பட்டாம்பூச்சிகள் கண்காட்சி தவிர, அனைத்து பார்வைக் கட்டணம் இலவசம் - திங்-ஞா, 10:00 - 17:50 பார்வை நேரம்
லண்டன் நகர் பயண கட்டணம்
ஒரு நாள் பயண கட்டணம், மண்டலம் 1-6 (7.50 தொடக்கம் 17.50 GBP )
கவனம் செலுத்த, சிறப்பு சலுகை ஒவ்வொரு நாளும் விலை மாற்றங்கள் இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
பாதாள குழல் ரயில் வண்டி பயணம், முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் நோயாளிகள், ஆஸ்த்துமா நோயாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்கள், சக்கர நாற்காலி பயணிகளுக்கு ஏற்றதில்லை, சில சமயம் மணிக்கணக்கில் நின்று பயணம் பண்ண வேண்டி வரும் மேலும்
பெரும் இரைச்சல், கடும் வெப்பம், மூச்சு முட்டும் அசுத்தமான நச்சு காற்று, மக்கள் நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி வரும்
இரண்டு தட்டு பேரூந்து பயணம் மிகவும் இலகுவானது மட்டுமல்ல மகிழ்சியானதும் கூட, மற்ற படி லண்டனின் அருங்காட்சியகங்கள் சிறந்த ஒரு அறிவு களஞ்சியம் ... என்றும் அன்புடன் மகேஷ்-இரவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக