உண்மையில் கடவுள் இருக்கிறாரா?
பகுத்தறிவு பகுத்தறிந்து பார்ப்பது பகுத்தறியாமல் கடவுள் இல்லை என்று சொல்வதும் ஒரு மூடநம்பிக்கை.
மனிதன் சக மனிதனுக்கும் இடையில் ஊடகமாக விளங்கும் கடவுள் என்ற நம்பிக்கை அவசியமானது.
மனிதனும் இயற்கையும் சமாதானமாக கூடிவாழ கடவுள் என்ற மத்தியஸ்தம் அவசியமானது. என்னுடைய பழைய பதிவுகளில் இருந்து...
கடவுளைப் பார்த்த முதல் மனிதன் அதற்கு ஒரு உருவத்தை கொடுத்தான் அது தன்னைப் போல் இருப்பதாக பின்னால் உணர்ந்து கொண்டான்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை கேட்டால், இன்னும் அறியப்படாத பல கேள்விகளை அது முன் வைக்கும். இருப்பினும் இந்த பூமியில் என்னையும் சக உயிர்களையும் தோற்றுவித்த ஒரு படைப்பாளி /பரம்பொருள் கண்டிப்பாக இருக்கின்றது. அதை நோக்கிய என்னுடைய பயணத்தில் அவர் பல தடயங்களை அவர் தன்னை அறிந்தும் அறியாமலும் எங்களுக்கு விட்டு வைத்திருக்கிறார்.
கையில் இருப்பதை வைத்து இல்லாததை/இன்னும் அறியப்படாத அந்த பரம்பொருளை பற்றி ஆய்வு செய்து அறிதல். இதில் நான் எடுத்துக் கொண்ட விடயம் மனித உடல் இந்த உலகில் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய ராணுவ அமைப்பு இருக்குமா என்று கேட்டால் அது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான். ஒரு துளி ரத்தத்தில் பல கோடி இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த நேரமும் மனித உடலை பாதுகாத்துக் கொள்ள விழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வீரர்களுக்காக பயிற்சி பட்டறைகள் கூட அமைய பெற்றிருக்கிறது மனித உடல்.
தைமஸ் சுரப்பி [போலீஸ் அகாடமி] : இந்த சுரப்பி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. வெள்ளை இரத்த அணுக்கள் [லிம்போசைட்டுகள்] தைமஸில் அவற்றின் நோயெதிர்ப்பு பண்புகளைப் பெறுகின்றன, அதாவது அந்நிய ஊடுருவல்களை எப்படி அடக்குவது என்று இங்கு பயிற்சிவிற்கப்படுகின்றது. இது மட்டுமல்ல யார்யார் எந்த பணிக்கு அனுமதிக்கப்படுகின்றார்கள் என்று இங்கு பட்டம், உயர் பதவி கூட வழங்கப்படுகின்றது. [Natural killer cell, B cell, Cytotoxic T cell,T lymphocytes,T helper cells, Lymphocytes, Memory T cel]
கடவுளின் மொழி கணிதம் . மனித உடல் துல்லியமாக அளந்து திட்டமிட்டு கணித முறைப்படி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு கோல் உண்டு இந்த அளவீடுகள்தான் அவர் விட்டுச்சென்ற தடயங்கள் இந்த தடயங்கள் தானாக வந்ததல்ல அது ஒருவரின் கை சுவடுகள். கடவுளின் தடயங்களை தேடி..... தொடர்ந்து என்னுடைய கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் இதற்கான முழு விளக்கத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
பரப்பிரம்மம் அற்புதமான ஒரு படைப்பாளி என்பதை மறுபடியும் நிருபித்திருக்கின்றது. தன்னுடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பதற்காக தாய்/பெண்கள் ஆண்களை விட அதிகமாக வர்ண தரங்களை அங்கீகரிக்கின்றார்கள்.
குழந்தைகள் உறங்கும் இடம், விளையாடும் இடங்களில் விஷ ஜந்துக்கள், எறும்புகள் ஊர்வதை உன்னிப்பாக கண்காணிப்பதற்காக, இடஞ்சார்ந்த தகவல்களை சிறப்பாக பார்க்கின்ற திறனாக, ஆண்களுக்கு நிறங்களை உள்வாங்கும் 3கூம்புகளையும் பெண்களுக்கு ஒன்று அதிகமாக நிறங்களை உள்வாங்கும் 4கூம்புகளையும் வைத்து உருவாக்கியிருக்கின்றது.
மனிதன் எப்போது பேசத் தொடங்கினான் அவனை உருவாக்கும் போதே ஒலிகளை எழுப்பி பேச்சு தொடர்புகளை வைத்துக் கொண்டான். ஆதியில் மனித பிள்ளைகளுக்கு தன்னுடைய தந்தை யார் என்றுகூட தெரியாது பாலூட்டி உணவளிப்பதினால் தாயை மட்டுமே அறிந்திருந்தார். பெண்கள் எதற்காக வளவளவென்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் மூலம்தான் மொழி பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆண்களுக்கு அது எரிச்சலூட்டும் விதமாக இருந்தாலும் குழந்தைகள் அதை பின்பற்றி, தங்கள் மொழி அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.பெண்கள் ஒரு செயலை செய்யும் போது அதற்கான மொழி உச்சரிப்பு வடிவத்தையும் பேசித்தான் அவர்கள் செய்வார்கள். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து வீட்டில் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள்.
என்னுடைய பழைய பதிவுகள்:
https://mahesva.blogspot.com/2023/03/the-strange-faces-of-corona-virus.html?view=magazine
https://mahesva.blogspot.com/2022/09/blog-post.html?view=magazine
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

























