◼- வெப்பத் தாக்குதல். உடல் வியர்வை சிந்தி உழைக்கும் போது உழைப்பினால் ஏற்பட்ட வெப்பத்தை உடல் சுயமாக தணித்துக் கொள்கின்றது. மாசுபட்ட உலகத்தில் செயற்கையாக உருவான வெப்பம், உடலின் சராசரி வெப்பத்திலிருந்து 32 > 40 ° C வெப்பமாக உயரும் போது வியர்வை இல்லாத வறண்ட சருமம் சுயமாக வெப்பத்தை தணித்துக் கொள்ள முடியாமல் உடல் திசுக்களை(செல்கள்) வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகி அவிந்து போகின்றது.
இது உங்கள் ஆரோக்கியத்திற்கு சாவுமணி அடிக்கும் ஆபத்தான ஒரு சமிக்கை இந்த செயற்கை சுற்றுச்சூழல் வெப்பம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் போது நோய்களுக்கான காரணங்களை வேறு இடங்களில், மாறுபட்ட கோணங்களில் உணவு, குடிநீர், மருந்து மருத்துவம் மற்றும் எங்களுடைய வாழ்வியல் என்று வெவ்வேறு வழித்தடங்களில் தேட வேண்டியிருக்கும்.
◼- வெப்ப சோர்வு. ◽- ஆற்றலிழப்பு. ◽- தலைச்சுற்று. ◾- குறைந்த இதயத்துடிப்பு.◾- அதிக வியர்வை. ◾- குளிர்ச்சியான சருமம்.◽- வாந்தி, குமட்டல். ◽- தசைப்பிடிப்பு.
◼- வெப்பத் தாக்குதல் ◽- குத்தல் தலைவலி ◽- வியர்வை இல்லை.◾- வறண்ட சருமம்.◾- சூடான சிவந்த சருமம்.◾- கூடிய இதயத்துடிப்பு.◽- குமட்டல். பசியின்மை.◽- பாரமான கால்கள்.
வெப்ப எச்சரிக்கை: சூரிய குளியல், குளிர் நாட்டு மக்களுக்கு ஆரம்ப காலங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு வரவேற்கத்தக்க நிவாரணமாக இருந்தது. குளிர்காலத்திற்கு தேவையான விற்றமின் டி3 சேமிப்பிற்கு உதவியது,விஷயம் எதுவென்றால் விரைவில் அது உண்மையான ஆபத்தாக மாறும். அவசியமில்லை தேவைப்பட்டால் இதற்கு மாற்றாக விற்றமின் டி3 மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
மனித உடல் 43°C (109.4°F) வரையிலான மைய வெப்பநிலையைத் தாங்கி, உயிர்வாழ்வது மிகவும் சாத்தியமில்லாத நிலையை அடைகின்றது என்று NBC செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் வெப்பநிலை உறுப்பு சேதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். உடல் குறுகிய காலத்திற்கு அதிக வெப்பநிலையைத் தாங்கும் அதே வேளையில், நிலையான மைய வெப்பநிலையை பராமரிப்பது உயிர்வாழ்வதற்கு மிக முக்கியமானது. உடல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்குக் கீழே, இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பு செயலிழந்து, மரணம் ஏற்படுகின்றது.
ஜெர்மனி/எசென் நகரம் இப்போது வரவிருக்கும் வெப்ப அலை குறித்து அதன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கின்றது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் வானிலை 30 டிகிரி குறியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது வெப்ப அலையின் போது மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்.
வெப்பமான காலநிலையில், குறிப்பாக மாலையில், இறைச்சி மற்றும் தொத்திறைச்சியுடன் கூடிய அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை நுகர்வை குறைப்பது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது,
வெப்பமான காலநிலையில் ஐஸ்கிறீம், இனிப்பு பானங்கள் வரவேற்கத்தக்க பானமாக இருக்கின்றது, அதற்கு பதிலாக இயற்கை தந்த முதன்மை பானமான தண்ணீர் மிகச்சிறந்தது.
இன்சுலின் பயன்பாடு: இன்சுலினை வெப்பத்திலிருந்து பாதுகாப்பது முக்கியம்,வெப்ப எச்சரிக்கைகளின் போது, அதிக வெப்பமான காலநிலையில் இன்சுலின் 30°C க்கும் அதிகமான வெப்பநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டது மற்றும் வெப்பத்தால் சேதமடையக்கூடும். இது உறைந்து மேகமூட்டமாக மாறும். இந்த உறைதல் இன்சுலினைப் பயன்படுத்த முடியாததாக ஆக்குகின்றது மற்றும் இன்சுலின் பம்புகளை அடைத்துவிடும். இன்சுலினை 30°C க்கு மிகாமல் இருட்டில் சேமித்து வைக்க வேண்டும், ஐஸ் கட்டிகள் கொண்ட குளிர் பெட்டியில் ஏனெனில் இது இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்.
மதுபானங்களில் "கூலிங் பீர்" கோடை காலத்தில் வரவேற்கத்தக்க பானமாக இருக்கின்றது, இருப்பினும் வெப்ப எச்சரிக்கைகளின் போது, மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் மது உடலை நீரிழப்புக்கு ஆளாக்கி வெப்ப உணர்வை தீவிரப்படுத்தும். குறிப்பாக அதிக வெப்பநிலையில், மது இரத்த ஓட்டப் பிரச்சினைகள் மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, வரவேற்கத்தக்க நிவாரணமாக தண்ணீர், இளநீர்,மோர், கற்றாழை [Aloe Vera] பழச்சாறு அல்லது மூலிகை தேநீர் போன்ற மது அல்லாத பானங்கள் திரவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.
உடற்பயிற்சி ஜிம்,ஓட்டம், அதிக தூரம் மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டம் தவிர்ப்பது நல்லது காரணம் அதிக வியர்வை நீரிழப்பை ஏற்படுத்தும். நீரிழப்பு மெக்னீசியம் போன்ற தாதுக்களின் இழப்புக்கு வழிவகுக்கின்றது. மெக்னீசியம் குறைபாடு நரம்பு பிடிப்பு,தசைப்பிடிப்பு, இதயத் துடிப்புக் கோளாறுகள், சோர்வு மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் மினரல் வாட்டர் [mineral water] மிகச்சிறந்தது.
சந்தேகத்தின் கீழ் இறைச்சி: இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் கோழி இறைச்சி மிகவும் ஆரோக்கியமான இறைச்சி வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு ஆய்வு இப்போது இதைக் கேள்விக்குள்ளாக்குகிறது: இறப்பு ஆபத்து முன்பு நினைத்ததை விட அதிகமாக இருக்கலாம்.
பாரி (இத்தாலி) - கோழி போன்ற வெள்ளை இறைச்சி முன்பு சிவப்பு இறைச்சி மற்றும் தொத்திறைச்சிக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்பட்டது, அவை நீண்ட காலமாக புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தேசிய இரைப்பை குடல் ஆய்வகத்தின் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் கோழி இறைச்சியை உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/2024/03/we-need-to-give-immune-system-chance-it.html?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக