வியாழன், 30 ஜனவரி, 2025

Carbon-14 dating: Carbon-14 dating is commonly used to determine the age of organic materials that contain carbon.

கார்பன்-14 பகுப்பாய்வு: கார்பன்-14 டேட்டிங் பொதுவாக கார்பனைக் கொண்ட கரிமப் பொருட்களின் வயதைக் கண்டறியப் பயன்படுகின்றது. 

இரும்பு, ஒரு உலோகமாக இருப்பதால், கரிமப் பொருட்களைப் போல கார்பனை கொண்டிருக்கவில்லை. எனவே, இரும்புப் பொருட்களை டேட்டிங் செய்வதற்கு கார்பன்-14 பகுப்பாய்வு பயனுள்ளதாக இருக்காது.

உயிரியல் எச்சங்களில் இது சாத்தியமாகும். உயிரினங்கள் இறக்கும் வரை, அவை C14 உட்பட எந்த புதிய கார்பனையும் உறிஞ்சாது. ஏற்கனவே இருக்கும் கதிரியக்க C14, 5730 ஆண்டுகள் அரை ஆயுளுடன் சிதைவடைகின்றது.

தனிமங்களில் புரோட்டான் எண்ணிக்கையில் தான் எலக்ட்ரான் எண்ணிக்கையும் இருக்கும் மேலும், பெரும்பாலான தனிமங்களில் புரோட்டான்  நியூட்ரான்கள் சம எண்ணிக்கையை கொண்டிருக்கும், சில தனிமங்கள் புரோட்டான் எண்ணிக்கையை விட நியூட்ரான் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த தனிமங்கள் கதிரியக்கம் உள்ளவைகள்.

கார்பன் கோட் அரை ஆண்டு காலக்கணிப்பு: இயற்கையில் கதிரியக்கம் உள்ள தனிமங்கள் நிறைய உண்டு. அதற்கு காரணம் ஒரு தனிமத்தில் புரோட்டான்களின் எண்ணிக்கையை விட  நியூட்ரான்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது.அதில் இந்த கதிரியக்கக்கரிம (கார்பன் 14) மூலக்கூறுகளும் அடங்கும்.  

பொதுவாக இயற்கையில் கொட்டிக்கிடக்கும்  கார்பன் மூலக்கூறுகளில் 98,9 விழுக்காடு சம அளவு எண்ணிக்கையில் 6 புரோட்டான்கள், 6 நியூட்ரான்களும் கொண்டது. (கார்பன்12) மிகிதம் இருக்கும்  1 விழுக்காடுகளில்  6 புரோட்டான்கள், 7 நியூட்ரான்களும் (கார்பன்13)  மற்றும் 6 புரோட்டான்கள், 8 நியூட்ரான்களும் (கார்பன்14)  கொண்டது.

அண்டவெளி கதிர்வீச்சுகள்: எ|க: கேலக்ஸி, நட்சத்திரம் சூரியன் வெளியிடும் நியூட்ரான்கள் [n]  வளிமண்டல வாயுக்கள் 78% நைட்ரஜன்- N2 20.94% , ஒட்சிசன்- O2 0.93% ஆர்கான்-Ar, 0.04% கார்பன் டை ஆக்சைடு. பிற மந்த வாயுக்கள் உள்ளன.

நியூட்ரான்கள் [n] -> நைட்ரஜன்- [ N2, சம அளவு [7] புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை கொண்டது. அண்டவெளி கதிர்வீச்சு நியூட்ரான்களினால் [n] நைட்ரஜன் தாக்கப்படும் போது அதிலிருந்து ஒரு புரோட்டான் வெளியே தள்ளப்பட்டு, நைட்ரஜன் -> கார்பன் - 14 மாறுகின்றன C-14+O2->14CO2 மாற்றப்பட்டு தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் உறிஞ்சப்படுகின்றது.

இந்த கதிரியக்கக்கரிம (கார்பன் 14) உயிருள்ள அனைத்தும் மனிதன் உட்பட, விலங்குகள்   தாவரங்களில் காணப்படுகின்றது மேலும்  தினமும்  கார்பன் 14, உணவு மற்றும் வளிமண்டல அழுத்தங்கள் மூலம்  எங்கள் திசுக்களில் சேமிக்கப்படுகின்றது. இந்த உயிரினங்கள் இறந்து தொல்லியல் எச்சங்களா மாறுகின்றன.

இன்னும் அழுத்தமாக சொன்னால் நம் அனைவரிலும்  கார்பன் 14 பரவலாக காணப்படும் கதிரியக்கக்கரிமம். மற்றும் இந்த வகை கார்பன்கள் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் உயிரற்ற சடப்பொருட்கள் குறிப்பாக  கட்டிடம், மண்சட்டி, கல் வெட்டுக்கள் மற்றும் பீங்கான், பிளாஸ்டிக், உலோகம் [ எ|க: இரும்பு, தாமிரம், வெங்கலம்] வார்ப்பு உலோகங்கள்,பட்டறை உலோகங்கள் சிற்பங்களில் இருப்பதில்லை உயிர் சார்பு விலங்கு மற்றும் தாவர எச்சங்களில்  மட்டும் தான் காணப்படும் என்பது குறிப்பிட தக்கது. 

இது வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் உருவாகும் கார்பனின் ஒரு குறிப்பிட்ட ஓரிடமூலகம் /ஐசோடோப்பின் சிதைவை அடிப்படையாகக் கொண்டது , பின்னர் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் கடல்களால் உறிஞ்சப்படுகிறது.

ஒரு ரேடியோகார்பன் டேட்டிங் ஆய்வகம் புதைபடிவங்களில் உள்ள கார்பன் 14 அளவை அளவிட முடியும். பின்னர் அது இந்தத் தகவலைப் பயன்படுத்தி புதைபடிவம் கடைசியாக கார்பனை உள்ளிழுத்த நேரத்தை (எ.கா. சாப்பிடுதல் அல்லது ஒளிச்சேர்க்கை) தீர்மானிக்கின்றது.

இந்த கார்பன் கோட் அரை ஆண்டு காலக்கணிப்பு என்பது  கார்பன் டேட்டிங் முறையை 1940களின் பிற்பகுதியில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும் முன்னாள் மன்ஹாட்டன் திட்ட விஞ்ஞானியுமான வில்லார்ட் லிப்பி கண்டுபிடித்தார் [சூடான காற்று பலூனில் பயணித்த போது கண்டுபிடித்தார்.

உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்கு, மனிதர்களினால் தினமும் உள்வாங்கப்படுகின்ற சுழற்சி, உயிர்கள்/தாவரங்கள் இறந்த பிற்பாடு நிறுத்தப்பட்டு கார்பன் 14 படிப்படியாக குறைந்து முடிவில் காணாமல் போகின்றது. இந்த காலக்கணிப்பும் ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரையும் தான் கணிக்க முடியும் 

இது மட்டுமல்லாமல் இந்த கார்பன் கோட் அரை ஆண்டு காலக்கணிப்புக்கு பெரும் இடையூறாக இருப்பது நிலத்தடி அணுவாயுத சோதனைகள்.அதில் வீசப்படும் நியூட்ரான்  கதிர் வீச்சுக்கள், கார்பன் 14  நியூட்ரான்களை குலைத்து இன்று இறந்து போன ஒரு உயிரைக் கூட பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனதாக காட்டக் கூடியது.  

எதிர் காலங்களில் தொல்லியல் ஆய்வுகளில் உயிரியல் எச்சங்களின் காலக்கணிப்பை கண்டறிய  இன்னுமொரு மாற்று வழி தேவைப்படலாம்.

இரும்புனுடைய வயது இந்த பூமியினுடைய வயது. பூமியின் காந்த புலன்களுக்காக மையப் பொருளாக இருக்கின்றது. இந்த பூமி உருவாகும் போதே கனிம வளங்களும் உருவாகிவிட்டன இரும்பு சத்து இல்லாமல் இந்த பூமியில் உயிர்கள் இல்லை. இரும்புனுடைய பயன்பாட்டு காலம் வரலாற்றுக்கு முந்தியது மற்றும் உபகரணங்கள் தயாரிக்க பட்டறை உலோகமாக பயன்படுத்தப்படும் பொருள் இரும்பு, இரும்புனுடைய வயது மத்திய கிழக்கில் கிறிஸ்துக்கு முன் 1200 இல் தொடங்குகின்றது. வடக்கு ஐரோப்பாவில் இது கிறிஸ்துவுக்கு முன் 750 லிருந்து கிறிஸ்துவுக்கு பின் 1025 வரை செல்கின்றது.

மௌரியப் பேரரசு [கிமு 320 முதல் 185 வரையிலான காலம்] மௌரிய சாம்ராஜ்யத்தில் நிறைய தொழில் புரட்சி நடந்தது. இதற்கான ஆதாரங்கள் இந்திய வரலாற்று பதிவுகள். சந்திரகுப்த மௌரியா அநேகமாக கிமு 297 காலத்தில் இறந்திருக்கலாம். இவருடைய காலத்தில். இரும்புடன் கரியை சேர்த்து உருக்கும் உருக்கு ஆலை உருவானது.[இரும்புடன் கரியை சேர்த்தால் அது உருக்கு]

இவருடைய காலத்தில் சீனாவில் கிமு 138 பட்டுப்பாதை தொடங்கப்பட்டது. வாணிபம் சீராக இயங்கத் தொடங்கியது.

இந்திய கொல்லர்கள் இன்னுமொரு புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தனர். இரும்புக் கருவிகள் கம்பிகள் மற்றும் ஆயுதங்களை தயாரிக்க எஃகு என்று அழைக்கும் மிக உயர்ந்த தரமான உருக்கை, இரும்பிலிருந்து கரிகளை சேர்த்து தயாரிக்கத் தொடங்கினர் அதற்காக இந்தியாவில் பெரிய உருக்கு ஆலைகளை நிறுவினார்கள்.

இரும்பு அதன் அசுத்தங்களை நீக்குவதன் மூலம் எஃகாக/உருக்காக மாறுகிறது. [அதிகம் துருப்பிடிக்காத]  தாது உருக்கப்பட்ட பிறகு எப்போதும் இதுதான் நிலை. மற்றவற்றுடன், கார்பன் உள்ளடக்கம் குறைக்கப்படுகின்றது. சீனாவிற்கே இரும்புக் கருவிகள் செய்து விற்பனை செய்தார்கள். என்பது  வரலாற்று சான்றுகள்.

https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்






திங்கள், 27 ஜனவரி, 2025

Cancer and its basic factors: Cancer is not one and there are many types/forms of it. However

புற்று நோய்களும் அடிப்படை காரணிகளும்: புற்றுநோய் ஒன்றல்ல அதில் பலதரப்பட்ட வகைகள்/வடிவங்கள் உண்டு. இருப்பினும் எல்லா புற்று நோய்களும் ஒரு அடிப்படை காரணிகளால் புனைக்கப்பட்டுள்ளன. எங்களது உடல் செல் தொகுப்பினால் ஆனது அது மரபணு கட்டமைப்பின் கீழ் இயங்கப்படுகின்றது இந்த ஒழுங்குமுறை ஒழுங்காக இயக்கப்படும் போது ஒழுங்கான செல் பிரிவு நடக்கின்றது. இதன் நிமித்தம் உடல் ஆரோக்கியமாக செயல்படுகிறது.

எங்களுடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களினால் எடுத்துக்காட்டாக: பரம்பரை, வைரஸ்கள், நச்சு, கதிர்வீச்சு ரசாயனங்கள், உணவு புகைத்தல் மதுபானம் போன்ற காரணிகளால் எங்களுடைய மரபணு தவறாக வழிநடத்தப்பட்டு, பிறழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த தவறான பிறழ்வுகள், தவறான செல் பிரிப்புக்கு காரணி ஆகின்றது. ஒரு கட்டுப்பாடற்ற வளர்ச்சி

இந்த இடத்தில் முதல் புற்றுநோய் செல்களாக பரிணமிக்கின்றன. தொடர்ந்து வரும் பிறழ்வுகள் காரணமாக மாறுபட்ட புற்றுநோய் செல்களாக வளர்கின்றது.

இதில் நல்ல புற்று நோய் கட்டிகளும் உருவாகும் மற்றும் ஆபத்தான புற்றுநோய் செல்களும் [மெட்டாஸ்டேஸ்கள்] உருவாகின்றன. நல்ல புற்று நோய் கட்டிகள் உருவாகும் இடங்களை பொறுத்து அதனுடைய ஆபத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.பொதுவாக 80 சதவீத நல்ல புற்று நோய் கட்டிகள்  கதிர்வீச்சு/அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன, இதன் காரணமாக நல்ல திசுக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

மெட்டாஸ்டேஸ்கள்: என்பது, புற்றுநோய் செல்கள் அசல் கட்டியிலிருந்து பிரிந்து கிளைகளை உருவாக்குகின்றன. இந்த கிளைகள் மற்றய உறுப்புகளுக்கும் பரவி புதிய புற்றுநோய் கட்டிகளை உருவாக்கின்றது. நிபுணர்கள் கட்டி பகுதியில் உள்ள நிணநீர் கணு மெட்டாஸ்டேஸ்கள் மற்றும் பிற உறுப்புகளில் தொலைதூர மெட்டாஸ்டேஸ்கள் ஆகியவற்றை வேறுபடுத்துகிறார்கள். இதன் நிமித்தமாகவும்  பல உள்ளுறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக:  எலும்பு, கணையம், கல்லீரல், குடல், மார்பகம், நுரையீரல்களிலும் தொடர் புற்றுநோய் ஏற்படலாம்.

ஆரோக்கியமான செல்பிரிவு; டிஎன்ஏ & செல் பிரிவு நுண்ணூட்டச்சத்து வளாகங்கள் ஃபோலிக் அமிலம், விற்றமின் பி12, விற்றமின் டி, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் சாதாரண செல் பிரிவுக்கும், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவின் தொகுப்புக்கும் அவசியம். டிஎன்ஏவின் நிலைத்தன்மை மற்றும் செயல்பாட்டிற்கும் துத்தநாகம் பங்களிக்கின்றது.

மிகச்சிறந்த புற்றுநோய் வளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகள்: உங்கள் பழைய நடவடிக்கைகளை கை விடுதல் எடுத்துக்காட்டாக;புகைத்தல் மதுபானம், மாமிசம், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல்  முடிந்த வரை பத்தியம், விரதம்/பட்டினி இருத்தல்.மற்றும் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வளர்ச்சி  ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் ஊசி/ மருந்துகளை எடுத்துக்கொள்ளல்.

இதன் நிமித்தம் புற்றுநோய் செல்களை தொடர்ந்து வளரவிடாமல் பட்டினி போட்டு கொல்லுதல். வலுவிழந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை புதுப்பித்தல். புதிய சைவம் [Vegan] உணவு முறை மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். மாற்றி அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையால் புற்றுநோயை குணப்படுத்துவது இயற்கையின் கைகளில், இருப்பினும் புற்றுநோய் செல்களை தொடர்ந்து வளரவிடாமல் ஒரு கடிவாளம், வேகத்தடையாக இந்த நடவடிக்கைகள் அமையும்.

கடவுளுக்கு எழுதும் கருணை மனு: என் எதிர்கால வாழ்நாளில் நான் எந்த உயிரினங்களையும் கொல்லவோ அல்லது சாப்பிடவோ கூடாது என்று கடவுளிடம் கருணை கோருகிறேன்.

DHT-தடுப்பான் மருந்து: ஆண் பெண் இருபாலினர் முடி உதிர்வதை தடுக்கும் ஒரு மருந்து.டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) புரோஸ்டேட்டை மேலும் பெரிதாக்கும்.

வயதாகும்போது, ​​புரோஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்கும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) என்ற ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும்.  இது புரோஸ்டேட் சுரப்பியின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது, இதன் விளைவாக சிறுநீர்க்குழாய் குறுகி சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் அதிகரிக்கின்றது. 

சரியான மருத்துவ  ஆதரவு இல்லாமல், புரோஸ்டேட் விரிவாக்கம் தொடர்ந்து மோசமடையக்கூடும், மேலும் அறிகுறிகள் மிகவும் தீவிரமாகிவிடும்.  இதன் நிமித்தமாக  மற்றய இடங்களிலும் பரவக்கூடிய மெட்டாஸ்டேஸ்கள் உருவாக்குகின்றன கல்லீரல், நுரையீரல், தலை, முதுகெலும்பு, எலும்புகள் வரை எல்லா இடங்களிலும் தெளிக்கப்படுகின்றது.

பல பாரம்பரிய மருந்துகள், புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான அடிப்படைக் காரணங்களைக் கையாளாமல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கின்றன. புற்று நோயை குணப்படுத்த ஒரே ஒரு செயலில் உள்ள மூலப்பொருள் மட்டும் போதாது. அதை கட்டுப்படுத்த மாறுபட்ட  செயல்கள், செயலிலுள்ள  மூலப்பொருள்கள் அவசியமானது.

DHT-தடுப்பான்: மாத்திரை மற்றும் இயற்கை:இயற்கை DHT-தடுப்பான்கள் சல்ஃபோராபேன்: முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, குதிரைவாலி, கோஹ்ராபி, முள்ளங்கி மற்றும் கடுகு ஆகியவற்றில் காணப்படுகிறது.மேலும் தியாஃப்ளேவின்: கருப்பு தேநீரில் காணப்படுகின்றது. லிக்னன்ஸ்: ஆளி விதைகளில் உள்ளது. டிரைகோனெல்லின் மற்றும் டையோஸ்ஜெனின்: வெந்தய விதைகளில் உள்ளது.

சா பால்மெட்டோ பழம்: [Saw palmetto] [விசிறி பனம் பழம்] ஆரோக்கியமான புரோஸ்டேட் அளவை ஊக்குவிக்கிறது மற்றும் சிறுநீர் அசௌகரியத்தை நீக்குகின்றது.மருந்தியல்  சந்தையில், மாத்திரை வடிவிலும் கிடைக்கும்-

துத்தநாகம்: நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றது மற்றும் ஆரோக்கியமான புரோஸ்டேட் செயல்பாட்டை ஆதரிக்கின்றது.

பூசணி விதை எண்ணெய்: வீக்கத்தைக் குறைத்து சிறுநீர் பாதையை ஆதரிக்கின்றது. லைகோபீன்: புரோஸ்டேட் செல்களைப் பாதுகாக்கும் மற்றும் செல் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் ஒரு ஆக்ஸிஜனேற்றி.லைகோபீன், கரோட்டினாய்டுகளின் வகையைச் சேர்ந்தது மற்றும் தக்காளியில் அதிக செறிவுகளில் காணப்படுகிறது

தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி: [nettle]    சிறுநீர்ப்பை செயல்பாட்டை மேம்படுத்துகின்றது மற்றும் சிறுநீர் கழிக்கும் தூண்டுதலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

விற்றமின் ஈ: செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றது மற்றும் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பொருட்கள் புரோஸ்டேட்டை உள்ளிருந்து வலுப்படுத்தவும், நீண்டகால, இயற்கை ஆதரவை வழங்கவும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன.

பைஜியம்: ஆப்பிரிக்க பிளம் மரம் என்றும் அழைக்கப்படும் பைஜியம்,  ஆப்பிரிக்காவில் பைஜியத்தின் பட்டை பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவத்தில் முதன்மையாக பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

கேலக்டோஸ்: கேலக்டோஸ் சர்க்கரை, சாதாரண நிலைமைகளின் கீழ், கேலக்டோஸ் கல்லீரலில் விரைவாகவும் கிட்டத்தட்ட முழுமையாகவும் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.  மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில், கேலக்டோஸ் என்பது செரிப்ரோசைடுகள், கேங்க்லியோசைடுகள் மற்றும் மியூகோபுரோட்டின்களுக்கு ஒரு அடி மூலக்கூறாகும், இது அவற்றின் நரம்பியல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது.

கேலக்டோஸ் செல்களுக்குள் நுழைய இன்சுலின் உதவி தேவையில்லை என்பதால் இன்சுலின் குறைபாடுள்ள சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்தது.

புற்றுநோய் செல்களை மேலும் வளரவிடாமல்  தடுக்கும் ஆற்றல் கேலக்டோஸ் சர்க்கரைக்கு உண்டு, காரணம் புற்றுநோய்  செல்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை [குளுக்கோஸ்] எடுத்து வளரக்கூடியது,

இதன் நிமித்தமாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சர்க்கரை குறைவு ஏற்பட்டு மயக்கம் போட்டு விழுவார்கள். இதை வைத்து  புற்றுநோய்  வளர்ச்சியின் வேகத்தை தீர்மானிக்க முடியும். புற்றுநோய்  கண்டவர்கள் கீட்டோஜெனிக் உணவுமுறை  கடைபிடிக்க வேண்டும்.

கீட்டோஜெனிக் உணவுமுறை என்பது: கார்போஹைட்ரேட்டுகளை (ரொட்டி, பாஸ்தா, முதலியன) கிட்டத்தட்ட முற்றிலுமாகத் தவிர்க்கும் ஒரு வகையான ஊட்டச்சத்து ஆகும்.  இது உடல் தனக்குத் தேவையான சக்தியை கொழுப்பு இருப்புகளிலிருந்து பெற கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  மிகக் குறைந்த சர்க்கரை உணவுகளை எடுத்துக்கொள்வது.

சுருக்கமாக சொன்னால், நீங்கள் விரதம் இருக்கும் போது / உணவு உண்ணாமல் இருக்கும் போது உடல்  தனக்கு தேவையான  ஆற்றலை  சேமித்த கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றன  இந்த ஆற்றலை ஆரோக்கியமான  உடல் செல்களினால் மட்டுமே பயன்படுத்தி உயிர்வாழ முடியும்,  பழுதடைந்த செல்கள் அதாவது  புற்றுநோய் செல்களினால்  கொழுப்பு ஆற்றலை பயன்படுத்த முடியாமல்  இறந்து போகின்றது.

ஸ்டார்ச் சத்து / மாவு சத்து, பழச்சர்க்கரை/பிரக்டோஸ்  சர்க்கரையை தவிர்ப்பது நல்லது, ஸ்டார்ச் என்பது ஒரு சிக்கலான சர்க்கரை, இது பாலிசாக்கரைடு என்றும் அழைக்கப்படுகின்றது, எனவே இது ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். கரிம சேர்மம் நூற்றுக்கணக்கான குளுக்கோஸ் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. மாவுச்சத்தின் இயற்கை ஆதாரங்களில் சோளம், கோதுமை, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அடங்கும்.

பழச்சர்க்கரை பிரக்டோஸ் என்பது இயற்கையாகவே கிடைக்கும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும்.  பிரக்டோஸ் ஒரு மோனோசாக்கரைடு மற்றும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும்.  இரண்டாவது கார்பன் அணுவில் உள்ள கீட்டோ குழு மற்றும் மூலக்கூறில் உள்ள ஆறு கார்பன் அணுக்களின் எண்ணிக்கை காரணமாக ஹெக்ஸோஸ்கள் /மோனோசாக்கரைடு என்று அழைக்கப்படுகின்றது.

கேலக்டோஸ் சர்க்கரை உள்ள உணவுகள்:  தாய்ப்பால், பொதுவில் பசும்பால், சோயா சாஸ், சமைத்த கொண்டைக்கடலை, சமைத்த பிற பருப்பு வகைகள், பப்பாளி, தக்காளி, தர்பூசணி, பேரிச்சை. அல்லது  பயன்படுத்த  கேலக்டோஸ் சர்க்கரையை தனியாக வேண்டலாம்.

bicalutamid 50 mg மருந்து: பைகுலுடமைடு என்பது ஒரு ஸ்டெராய்டல் அல்லாத ஆன்டிஆண்ட்ரோஜன் ஆகும், இது ஆண்ட்ரோஜன் ஏற்பிகளில் போட்டித் தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் செயல்பாட்டைத் தடுக்கிறது, இதன் நிமித்தமாக ஆண்ட்ரோஜன் சார்ந்த புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இது மேம்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றது.

ஆண்ட்ரோஜன்கள் என்பது: பாலியல் ஹார்மோன்கள் ஆகும், அவை வீரியத்தை அதிகரிக்கும் விளைவைக் கொண்டுள்ளன மற்றும் இளம் பருவத்தினரிடையே தாடி,மீசை வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ஆழமான குரல் போன்ற ஆண் பாலியல் பண்புகளின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவை விந்தணுக்கள் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளிலும், கருப்பைகளிலும் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நீங்கள் Bicalutamide Heumann 50 மி.கி எடுத்துக்கொள்வதை நிறுத்தினால். சிகிச்சையின் வெற்றி பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவரை அணுகாமல் சிகிச்சையை நிறுத்த வேண்டாம். இந்த மருந்தைப் பயன்படுத்துவது குறித்து மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேளுங்கள்.

என்ன பக்க விளைவுகள் சாத்தியமாகும்?: எல்லா மருந்துகளையும் போலவே, இந்த மருந்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இவை அனைவருக்கும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. மிகவும் பொதுவானது (10 பேரில் 1 க்கும் மேற்பட்டவர்களை பாதிக்கலாம்):

மார்பகப் பதற்றம், ஆண் மார்பகத்தின் அளவு அதிகரிப்பு , பலவீனம், வீக்கம் (முகம், உடல் மற்றும் தோலில் நீர் தேங்குதல் கைகால்கள்) -தலைச்சுற்றல் - வயிற்று வலி, மலச்சிக்கல், குமட்டல் -சொறி (தோல் சொறி, புள்ளிகள் மற்றும் முடிச்சுகளுடன் கூடிய சொறி) -இரத்த சோகை - சூடான ஃப்ளாஷ்கள் - சிறுநீரில் இரத்தம் பொதுவானது (10 பேரில் 1 பேரைப் பாதிக்கலாம்):

எடை அதிகரிப்பு - ஆண்மைக் குறைவு வரை விறைப்புத்தன்மை குறைபாடு, பாலியல் ஆசை குறைதல் - பொதுவான வலி, இடுப்பு வலி, மார்பு வலி, குளிர்ச்சியடைகிறது - தூக்கம் - அஜீரணம், வயிற்றுப்போக்கு, வாய்வு - பசியின்மை

கல்லீரல் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (கல்லீரல் நொதிகளின் அளவு அதிகரிப்பு, பித்த தேக்கம் மற்றும் மஞ்சள் காமாலை உட்பட), இவை அரிதாகவே தீவிரமாக இருந்தன. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் நிலையற்றவை மற்றும் தொடர்ச்சியான சிகிச்சையுடன் அல்லது சிகிச்சையை நிறுத்திய பிறகு மறைந்துவிட்டன அல்லது மேம்பட்டன.

வியர்வை- முடி உதிர்தல், முடி மீண்டும் வளர்தல்/அசாதாரண முடி வளர்ச்சி -வறண்ட தோல், அரிப்பு - நீரிழிவு நோய், மாரடைப்பு (இறப்புகள் பதிவாகியுள்ளன), இதய செயலிழப்பு- மனச்சோர்வு அசாதாரணமானது (100 பேரில் 1 பேரைப் பாதிக்கலாம்): - தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை- வறண்ட வாய் -இரைப்பை குடல் பிரச்சினைகள், எடை இழப்பு - இரத்த சர்க்கரை அதிகரிப்பு

அதிக உணர்திறன் எதிர்வினைகள், தோல் மற்றும் சளி சவ்வுகளின் வலிமிகுந்த வீக்கம் (ஆஞ்சியோடீமா), படை நோய் (யூர்டிகேரியா) நுரையீரலின் இடைநிலை திசுக்களில் ஏற்படும் நோய் (இடைநிலை நுரையீரல் நோய்: இறப்புகள் பதிவாகியுள்ளன)

மூச்சுத் திணறல்  -இரவு நேர சிறுநீர் கழித்தல் அரிதானது (1,000 பேரில் 1 பேரைப் பாதிக்கலாம்). வாந்தி, கல்லீரல் செயலிழப்பு (இறப்புகள் பதிவாகியுள்ளன). கல்லீரல் செயல்பாட்டு சோதனைகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாக இருக்கலாம்.

சூரிய ஒளிக்கு சருமத்தின் உணர்திறன் அதிகரித்தது மிகவும் அரிதானது (10,000 பேரில் 1 பேரைப் பாதிக்கலாம்). இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல் மாரடைப்பு, இதய அரித்மியா, ஈசிஜி மாற்றங்கள் (பிஆர் நீடிப்பு, குறிப்பிட்ட மாற்றங்கள்) (எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் நுகர்வோர் பட்டியலை பார்க்கவும்).

லியூகான் ஊசி: LEUGON 11.25 mg முன் நிரப்பப்பட்ட சிரிஞ்ச் உள்வைப்பு ஊசி மருந்து.; சில பாலியல் ஹார்மோன்களின் தடுப்பான்களின் குழுவிற்கு சொந்தமானது. குறுகிய கால தூண்டுதலுக்குப் பிறகு, விந்தணுக்களில் பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் இந்த மருந்து பிட்யூட்டரி சுரப்பியில் (ஹைப்போபிசிஸ்) செயல்படுகின்றது

லியூகோன்® ஊசி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்? பரிந்துரைக்கப்பட்ட அளவு: லியூகான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றுத் தோலின் கீழ் செலுத்தப்படுகின்றது. ஒரு விதியாக, லியூகோன் உடன் புரோஸ்டேட்டின் மேம்பட்ட ஹார்மோன் சார்ந்த கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பது ஒரு நீண்டகால சிகிச்சையாகும்.

விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சிகிச்சைக்கு மருத்துவர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் இரண்டு செயலில் உள்ள பொருட்கள் உள்ளன: டூட்டாஸ்டரைடு மற்றும் ஃபினாஸ்டரைடு. இரண்டு செயலில் உள்ள பொருட்களும் பரம்பரை முடி உதிர்தலுடன் இருக்கும் ஆண்களுக்கும் உதவும்.

இந்த தகவல்கள் பாதிக்கப்பட்ட நோயாளியின் அனுபவத்திலிருந்து கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.


https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

 



https://youtu.be/2q1gk5SB3nc?si=LnTDPQ-ipfCJrq-5

என்னுடைய பாடல் வரிகளுக்கு " ai song generator"  இசையமைத்துள்ளார். இதேபோல் 100 பாடல்கள் எழுதியிருக்கின்றேன்.கேட்டுப்பாருங்கள்



சனி, 11 ஜனவரி, 2025

Zoonoses: Dangerous viruses that originate from the animal kingdom. Zoonoses occur in both humans and animals, and can be transmitted from animal to person

வைரஸ்கள் பாக்டீரியாக்கள் இன்று நேற்று தோன்றியவை கிடையாது, அவை மண்ணில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே இந்த மண்ணில் வாழ்கின்றன, இப்பதான் அவைகள் வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றன, அதற்கான காரணம் மனிதன் கண்டுபிடித்த நவீன உபகரணங்கள் எ|க: நுண்ணோக்கி கருவிகள், 1590 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கி மூலம் அவைகள் வெளிச்சத்துக்கு வந்தது.அதற்காக அவைகள் அன்றிலிருந்துதான் உருவானது என்று அர்த்தமாகாது, 

வைரஸ்கள் தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒரு சில மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, தொடர்ந்து இந்த பூமியில் வாழ்கின்றன. மனிதனைப்போல், ஆதிமனிதனைப் போலவா இன்றுள்ள மனிதன் இருக்கின்றான் எவ்வளவு ஆபத்தான போர்க்கருவிகளை கையில் கொண்டு சுற்றுகின்றான். அது போலத்தான் வைரஸ்களின் புதிய மாறுபாடுகள் சில நேரங்களில் எங்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம்.

ஜூனோஸ்கள்: விலங்குகள் ராஜ்ஜியத்திலிருந்து வந்த ஆபத்தான வைரஸ்கள். ஜூனோஸ்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் ஏற்படுகின்றன, மேலும் அவை விலங்கிலிருந்து நபர் மற்றும்/அல்லது நபரிடமிருந்து விலங்குக்கு பரவும். விலங்கு இராச்சியத்திலிருந்து மனிதர்களுக்கு முக்கியமாகப் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவும் நோய்கள்.

MERS கொரோனா வைரஸ்கள்: [கொரோனா வைரஸ் குடும்பமான SARS-CoV-2 இலிருந்து, முதலில் nCoV-2019 என அழைக்கப்பட்ட RNA வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தாவியது, மனிதர்களில் ஏற்படும் அனைத்து புதிய தொற்றுகளிலும் 60 முதல் 70 சதவீதம் வரை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கொசுக்களால் பரவும் நோய்கள், மார்பர்க் வைரஸ், இன்புளூயன்சா, எபோலா:[ ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. எபோலா வைரஸ்கள் ] இதன் இயற்கையான புரவலன் வௌவால்கள் அல்லது பழ வௌவால்களாக இருக்கலாம்.] எச்ஐவி: [ குரங்குகளிலிருந்து மனிதர்களுக்கு இரண்டு வைரஸ்களின் இன மாற்றம் செய்யப்பட்ட HIV-1 தொற்று 1959 ஆம் ஆண்டு ஒரு ஆப்பிரிக்க நோயாளியில் கண்டறியப்பட்டது]

குரங்கு அம்மை, பசு அம்மை [பசு-பாக்ஸ்] போர்னா வைரஸ்கள், லைம் நோய், திசையன் மூலம் பரவும் தொற்று நோய்கள், பெருவாரியான நோய்கள் உணவு மூலம் பரவும் நோய்கள்.

ஹான்டவைரஸ்: கொறித்துண்ணிகளால் [வீட்டு/வயல் எலிகள்] எச்சில், மலம் மற்றும் சிறுநீர் மூலம்  வெளியேற்றப்படும் இந்த வைரஸ், மனிதர்களில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

அடினோவைரஸ்கள்: கண் நோய்கள், சுவாச நோய்கள் அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகள், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்குடன். அடினோவைரஸ் தொற்றுக்கான பிற அறிகுறிகளும் இதில் அடங்கும். நோரோவைரஸ்கள்: இரைப்பை குடல் தொற்று,வயிற்றுப்போக்கு காரணி.

சிங்கிள்ஸ் நோய்: [அரிப்பு சொறி படர்தாமரை] : வயதாக ஆக, நமது நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து வருகின்றது அதன் விளைவு சிங்கிள்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.

சிங்கிள்ஸ் நோய்: தொடர்ந்து படிக்க..

https://mahesva.blogspot.com/2023/06/bladder-cancer-any-type-of-cancer-can.html?view=magazine

 

ஸ்பானிஷ் காய்ச்சல்: 1918 ஆம் ஆண்டு முதல் முதலாம் உலகப் போரின் இறுதி வரை, 1920 ஆம் ஆண்டு வரை மூன்று முறை பரவிய இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் வீரியம் மிக்க திரிபினால் ஏற்பட்ட ஒரு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயாகும். இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் தோன்றியதாக நம்புகிறார்கள். சிப்பாய்- சமையலறை வாத்து இறைச்சி ஒரு காரணியாக இருக்கலாம்.


மேலும் வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், ரேபிஸ், பறவைகள், பன்றிக் காய்ச்சல். HMPV வைரஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பறவையிலிருந்து மனிதர்களுக்குத் குதித்திருக்கலாம், மேலும் குறைந்தது 1950களில் இருந்து ஐரோப்பாவில் இருக்கின்றன.


மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், அனைத்து வகையான ஹெபடைடிஸ்களும் பாலியல் ரீதியாகவும் பரவக்கூடும். A,B,C அதிலும் ஹெபடைஸ்-C மிகவும் ஆபத்தானது. இதற்கான மருந்துகள், விலை கூடியவை சாதாரண மக்களால் வேண்ட முடியாது. ஜெர்மனியில், இந்த சிகிச்சைக்கு சுமார் 50,400 யூரோக்கள் செலவாகும். ஒரு மருந்தின் விலை சுமார் 600 யூரோக்கள்.


பாலியல் ரீதியாக பரவும் நோய்: தொழுநோய் என்பது பொதுவாக மைக்கோபாக்டீரியம் லெப்ரே அல்லது மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று ஆகும். தொற்று ஏற்பட்ட நபர் மூலம், எந்த பாவமும் அறியாத பிள்ளைகளுக்கும் பரவும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தொழுநோய் மிகவும் அரிதானது.


வைரஸ்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா? சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் புற்றுநோயை ஏற்படுத்துவதாக அறியப்படுகின்றது: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ்கள் அல்லது கல்லீரல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான ஹெபடைடிஸ் பி வைரஸ்.வயிற்றுக் கட்டிகளில் சுமார் 75 சதவீதம் ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று காரணமாக ஏற்படுகின்றன.


ஜூனோஸ்களில் 20 விழுக்காடு இயற்கையாகவும் 10 விழுக்காடுகள் திருட்டுத்தனமாகவும் மீதமுள்ளவை ஆராச்சி என்ற பெயரால் நாட்டுக்குள்ளே கொண்டுவரப்பட்டவை/பரவியவை என்பது மனவருத்தம் தரும் உண்மை.


கொரோனாவின் தோற்றம் பற்றிய புதிய ஆய்வுகள்[2024]: SARS-CoV-2 , அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரக்கூன் நாய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்திருக்கலாம்.எனவே அவை மனிதர்களுக்கு வைரஸை கடத்தக்கூடிய இடைநிலை புரவலர்களாக நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகின்றன.


நேர்மறை சோதனை செய்த சந்தை மாதிரிகள் விலங்குகளின் மரபணுப் பொருட்களையும் கொண்டிருப்பதாக ஒரு மதிப்பீடு காட்டுகின்றது.வுஹானில் உள்ள வனவிலங்கு சந்தையில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது மிகவும் வலுவான அறிகுறியாகும். வேறு எந்த நியாயமான விளக்கமும் இல்லை என்பது இந்த அறிக்கையின் விளக்கம்.


தனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், வௌவால்கள் குறைந்தது, 25 இன வைரஸ்களை சுமந்து செல்லக்கூடியது.


உலகளாவில் மில்லியன் கணக்கான பல்வேறு வகையான வைரஸ்கள் உள்ளன, ஆனால் 7,000 க்கும் குறைவான வகைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2021 நிலவரப்படி, NCBI வைரஸ் மரபணு தரவுத்தளத்தில் 193,000 க்கும் மேற்பட்ட முழுமையான மரபணு வரிசைமுறைகள் உள்ளன, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய சுமார் 219 வகையான வைரஸ்கள் அறியப்படுகின்றன.


வைரஸ் தொற்றினால் உலகளவில் சுமார் 30,000 நோய்கள் அறியப்படுகின்றன, அவற்றில் சுமார் 8,000 அரிய நோய்கள், அவை "அனாதை நோய்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.


அனாதை நோய்கள்/அரியவகை நோய்கள்: சில சமயம் தொண்டை கட்டிக்கும் மற்றொரு சமயம் வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, முட்டிவலியை ஏற்படுத்தும்.  பரபரப்பான வாழ்க்கையில்  ஒரு மாத்திரையை போட்டுட்டு கண்டுக்காமல்  கடந்து போயிட்டு இருப்போம்  அப்படி கண்டுக்காமல்  விடப்பட்ட நோய்கள் அனாதை நோய்கள் .


அரிய நோய்களில் சுமார் 80 சதவீதம் மரபணு சார்ந்தவை, எனவே பல பிறக்கும்போதோ அல்லது குழந்தைப் பருவத்திலோ வெளிப்படையாகத் தெரியும். வைரஸ்கள் எங்களுடைய மரபணுவை மாற்றி அமைக்கக்கூடியவைகள். இதன் நிமித்தமாக உடல் ஊனமுற்ற பிள்ளைகள் பிறக்க காரணியாகின்றது.


இளமைக்காலத்தில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் எங்களுடன் வாழும் பல வைரஸ்கள் வயதான காலத்திலும் மாறுபட்ட காரணங்களின் நிமித்தம் வலுவிழந்து போன நோய் எதிர்ப்பு காலங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.பாக்டீரியா, பூஞ்சை, காளான், ஒட்டுண்ணிகள் மற்றும் இதுவரை காலமும் பாதிப்பு இல்லாமல் கிடந்த வைரஸ்கள். உயிரோடு இருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக தின்னத் தொடங்கும். அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.


"எங்களால் இந்த பூமியில் தொடர்ந்து உயிர் வாழ முடியாது, ஏதோவொரு கால கட்டத்தில் அது நின்றுவிடும், நீங்கள் மது அருந்தவோ அல்லது புகைக்கவோ மாட்டீர்கள், இருப்பினும் உங்களாலும் தொடர்ந்து வாழமுடியாது. அழைப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இயற்கையின் கைகளில் விட்டுவிடுவோம்."

 

https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்





ஞாயிறு, 5 ஜனவரி, 2025

hmpv virus China: HMPV is a contagious disease [epidemic] belonging to the Pneumoviridae family and was first identified by Dutch researchers in 2001.

hmpv வைரஸ்: HMPV மக்கள் நெரிசலான இடங்களில் பெருவாரியாகப் பரவும் தொற்று நோய் [epidemic] நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் 2001 இல் டச்சு ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

இந்த வைரஸ் குறைந்தது ஆறு தசாப்தங்களாக எங்களுடன் இருப்பதாகவும், உலகளவில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு இது ஒரு பொதுவான காரணமாக இருப்பதாகவும் செரோலாஜிக்கல் ஆய்வுகள் காட்டுகின்றன. அது ஏன் இப்ப மீடியா வழியாக தலையை நீட்டி காட்டுது.

hMPV தொற்று உள்ள பெரும்பாலான மக்கள் இருமல், சளி அல்லது மூக்கில் அடைப்பு, தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவிக்கின்றனர். மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம், கரகரப்பு, இருமல், நிமோனியா மற்றும் பெரியவர்களில் ஆஸ்துமா தீவிரமடைதல் ஆகியவற்றுடன் நோயின் மிகவும் கடுமையான நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.

கடுமையான சந்தர்ப்பங்களில், மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா ஏற்படலாம், குறிப்பாக இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள்.

பெரும்பாலான சிறு குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகளில், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில், நோய்த்தொற்றுகள் பொதுவாக மிகவும் லேசானவை மற்றும் லேசான குளிர் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. தட்டம்மை வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போலல்லாமல், hMPV உடன் தொற்று நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்காது. சார்ஸ்-கோவ்-2 மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவைப் போலவே, நீங்கள் மீண்டும் மீண்டும் தொற்றுக்குள்ளாகலாம்.

மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) அதாவது சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஒரு வைரஸ். உலகெங்கிலும் உள்ள அனைத்து வயதினருக்கும் குறிப்பிடத்தக்க மேல் மற்றும் கீழ் சுவாச நோய்களை ஏற்படுத்துகின்றது. வைரஸ் நியூக்ளியோபுரோட்டீனின் (N) பல நகல்களால் சுமார் 13.3 kb இன் எதிர்மறை-உணர்வு ஒற்றை இழையான RNA மரபணுவைக் கொண்டுள்ளது, இது ஹெலிகல் நியூக்ளியோகேப்சிட்களை உருவாக்குகின்றது.

HMPV சுவாசத் துளிகள் மூலம் பரவுகின்றது (எ.கா. இருமல் அல்லது தும்மல்), நோயாளிகளிடமிருந்து சுரக்கும் தொடர்பு, அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் அல்லது சுற்றுச்சூழலுடன் தொடர்பு. அடைகாக்கும் காலம் பொதுவாக 3 முதல் 6 நாட்கள் ஆகும். அதாவது தொற்றூ ஏற்பட்டு 3-6 நாட்களுக்கு பிறகு நோய்க்குறிகள் தெரியும்.

HMPV புதிய பிறழ்வுகளை ஏற்படுத்துமா? இன்னும் சரியாக அறியப்படவில்லை .பொதுவாக எல்லா வைரஸ்களுமே உயிரற்ற ஒரு ஜடம் அவைகளால் சொந்தமாக இனப்பெருக்கம் செய்யமூடியாது. இனப்பெருக்கம் செய்ய ஒரு உயிரினம் தேவைப்படுகின்றன அதனால் தான் அது எங்களை தேடிவருகின்றன

உடலுக்குள் வந்தவுடன், ஒரே ஒரு பணியைச் செய்யும் ஒரு பொறிமுறை[ மெக்கானிசம்] மட்டுமே கொண்டுள்ளது. மரபணுவை தள்ளிவிடும் ஒரு வேலையை மட்டும் செய்கின்றன. தொற்று ஏற்பட்ட செல்களை முழுமையாக தன்கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து, அதை ஒரு வைரஸ் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாக மாற்றிவிடும்.

உடலின் ரைபோசோம்கள் செல்லின் "புரத தொழிற்சாலைகள்". அவை மொழிபெயர்ப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் எம்ஆர்என்ஏவின் நியூக்ளியோடைடு வரிசை புரதத்தின் அமினோ அமில வரிசைக்கு மாற்றப்படுகின்றது. புதிய வைரஸ்கள் உருவாகின்றன.

வைரஸ்கள் தங்களை தக்கவைத்துக் கொள்ள மரபணுவில் மாற்றங்களை செய்து புதிய வைரஸ்களை உருவாக்கும் திறன் கொண்டது. அதனால்தான் தடுப்பூசி கண்டுபிடிப்பது கடினம், அல்லது வருடா வருடம் தடுப்பூசியை புதுப்பிக்க வேண்டும்.  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள், மனித மெட்டாப்நியூமோவைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் NL63

சுவாச பாதை நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும், குறிப்பாக வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில். பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஏற்கனவே இந்த நோய்களின் சாத்தியமான தூண்டுதல்கள் என அறியப்பட்டாலும்,

பல சந்தர்ப்பங்களில் தீவிர நோயறிதல்கள் இருந்தபோதிலும் எந்த நோய்க்கிருமியையும் காரணமாக அடையாளம் காண முடியாது. அறியப்படாத அல்லது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்க்கிருமிகளால் இந்த நோய்க்குறியியல் தெளிவற்ற சுவாச நோய்த்தொற்றுகள் சில இருக்கலாம்.

கொரோனா-19 [ SARS-CoV-2] பாண்டேமி, தொற்றுநோய்க்குப் பிறகு, பெரும்பாலான மக்களுக்கு ஆபத்தான வைரஸ் நோய்களுக்கான பயம் என்பது வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு, பள்ளிகள், உணவகங்கள் மற்றும் எல்லைகள் மூடல் , இவை அனைத்தும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றுவிட்டன, உண்மையில் திரும்பவும்  அதை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.  அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தாங்களாகவே செய்யத்தொடங்குவார்கள், கொரோனா வைரஸ் அதற்கான முழுப்படிப்பினையும் எங்களுக்கு தந்திருக்கின்றது.

காற்று மாசுபாடு: ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன்ஸ் (IHME's) யின் மதிப்பீடுகளின்படி, 2021 ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 2.35 மில்லியன் இறப்புகளை சீனா பதிவு செய்துள்ளது.[2021 சீனாவில் கொரோனா தொடர்பான இறப்புகள்: 503,302]

சீனா ஒரு மக்கள் நெரிசலான நாடு பெரிய நகரங்களில் வாழும் மக்கள் காற்று மாசுபாட்டின் காரணமாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நிலக்கரி எரிப்பு, தொழில்துறை உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் வெளியேற்றம் ஆகியவை சீனாவில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள்.

அதுவும் குளிர்காலம் மார்கழி மாதத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. குளிர்கால மாதங்களில், பெய்ஜிங் மற்றும் சீனாவின் பெரும் பகுதிகள் தொடர்ந்து புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கும். இந்த புகை மூட்டம் நுண்ணிய ஏரோசல் துகள்கள் மற்றும் சுமார் 400 மில்லியன் மக்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகின்றது.

இந்த காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனுடன் ஏதாவது சுவாச தொற்றும் சேர்ந்து நிலமையை மோசமாக்கியிருக்கலாம். இதன் காரணமாகத்தான் அதிகமான சீனர்கள் முகக்கவசம் [masks] அணிந்து செல்கின்றனர்.

சீனா தொழில் துறையில் புரட்சிகரமான ஒரு நாடுதான் அதை யாரும் மறுக்கவில்லை இருப்பினும் மக்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்றால் கேள்விக்குறிதான்.

இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு  உருட்டை உருட்டிவிட்டிருக்கலாம். இரண்டாம் தடவை திருடன் வந்தால் .........

 https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்