வயதானவர்கள் ஏன் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஆண்கள்: இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்: இது ஒரு சுயாதீனமான குறைபாடு கிடையாது. இரவில் சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் பல்வேறு காரணிகளால் தூண்டப்படலாம்,
எ.கா: படுக்கைக்கு முன் அதிகப்படியான திரவம், மதுபானம் , காபி குடித்தால் அல்லது சில நேரங்களில் இது சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது சர்க்கரைநோய் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் , டையூரிடிக் மருந்துகள். [டையூரிடிக்ஸ்] உளவியல் மன அழுத்தம், புரோஸ்டேட் பிரச்சனை, சிறுநீரக நோய் போன்ற பிற நோய்கள் பெரிய பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
வயதான காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்: வயதானவர்களில், உடலின் சொந்த ஆண்டிடியூரிடிக் ஹார்மோன் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த ஹார்மோன் இரவில் குறைவான சிறுநீரை உற்பத்தி செய்ய உதவுகின்றது. இதனுடைய குறைபாடு,
சில பாதகமான சூழ்நிலைகளில் பிட்யூட்டரி சுரப்பியால் அதிகப்படியான ஆன்டிடியூரிடிக் ஹார்மோன் (வாசோபிரசின்) வெளியிடப்படும்போது, பொருத்தமற்ற ADH சுரப்பு நோய்க்குறி ஏற்படுகிறது, இதனால் உடல் திரவத்தைத் தக்கவைத்து, சோடியம் அளவைக் குறைக்கின்றது.
ஆண்டிடியூரிடிக் ஹார்மோன்[ADH] என்பது: டைசல்பைட் பாலம் கொண்ட ஒரு நானாபெப்டைட் ஆகும் மற்றும் நீர் சமநிலையை சீராக்க ஹைபோதாலமஸின் செயல்திறன் ஹார்மோனாக செயல்படுகின்றது.
நீரிழிவு இன்சிபிடஸ் : நீரிழிவு இன்சிபிடஸ் நீர்-எலக்ட்ரோலைட் சமநிலையின் கோளாறு என வரையறுக்கப்படுகின்றது. காரணம் ஆண்டிடியூரெடிக் ஹார்மோனின் (ADH) குறைபாடு அல்லது சிறுநீரகங்களில் ADH இன் குறைந்த விளைவு ஆகும். இது சிறுநீரகத்தின் செறிவூட்டப்பட்ட சிறுநீரை உற்பத்தி செய்து தண்ணீரை மீண்டும் உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது.
ADH இன் குறைபாடு: ADH இன் குறைபாடு அல்லது சிறுநீரகங்கள் அதற்கு பதிலளிக்காதபோது நீரிழிவு இன்சிபிடஸ் ஏற்படுகின்றது. இன்சிபிடஸ் அறிகுறி: அதிகப்படியான தாகம் மற்றும் அதிகப்படியான சிறுநீர் உற்பத்தி ஆகியவை முக்கிய அறிகுறிகள். [நீரிழிவு- இது சர்க்கரைநோய் அல்ல]
எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சிறுநீரை வெளியேற்றும். வறண்டு போவதைத் தவிர்க்க, நீங்கள் மிகவும் தாகமாக உணர்கிறீர்கள் மற்றும் நிறைய குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்.
நீரிழிவு இன்சிபிடஸ் ரெனலிஸ் சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். இங்கே பிரச்சனை ADH இன் குறைபாடு அல்ல, மாறாக வாசோபிரசினுக்கு பதிலளிக்காத ஏற்பிகள் காரணமாக இருக்கின்றது.
ஆல்கஹால்: பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வாசோபிரசின் (ADH) சுரப்பதை ஆல்கஹால் தடுக்கின்றது, இதன் விளைவாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கின்றது. அதிக தாகம் ஏற்படுவதற்கு இதுவே காரணம். திரவங்களின் பற்றாக்குறை தலைவலிக்கு வழிவகுக்கும். நீரிழப்பு, திரவங்களின் தட்டுப்பாடு இரத்தம் தடிமனாகும், இதன் நிமித்தம் குருதி சுற்றோட்ட கோளாறுகள், தலைசுற்றல், மலம் கெட்டியாகி மலச்சிக்கல் ஏற்படும்.
இதற்கான மருத்துவம்: சக்கரை நோய், சிறுநீர் பை, பாதை தொற்றுநோய், உளவியல் மன அழுத்தம், மற்றும் உங்கள் புரோஸ்டேட் பிரச்சனைகளின் தீவிரம், மதுபானம் காரணமாக இருந்தால் அதற்கான சிகிச்சை எடுப்பதன் மூலம் இரவில் சிறுநீர் கழிப்பதை குறைத்து கொள்ள முடியும்.
இந்த நோய்கள் தவிர்த்து சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் இருந்தால் அது வயது மாற்றம் காரணமாக வரக்கூடியது இது இயல்பானது.
மற்றும்படி இதற்காக மருத்துவம் சிகிச்சை அளிப்பது கடினம். இருப்பினும் இதனுடைய கடின போக்கை தணித்துக் கொள்வதற்கான சிகிச்சைகள், மருந்துகள் மூலிகை குடிநீர் போன்றவை இருக்கின்றன.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine