வண்ண வைரங்கள்; பொதுவாக தூய வைரங்கள் வெள்ளை நிறம் கொண்டது. தூய்மையற்ற வைரங்கள் வர்ணங்களை கொண்டது அதாவது அதனுடைய சேர்மங்கள் வைரங்களுக்கு நிறங்களை பூசுகின்றது.
வண்ண வைரங்களைப் பற்றி பேசுகையில், மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான வண்ண வைரங்கள் நீலம் , ரோஜா. மஞ்சள் மற்றும் பழுப்பு வைரங்கள். வைரத்தின் படிகங்களில் ஆழமாக நங்கூரமிட்ட நைட்ரஜன் அணுக்களால் மஞ்சள் நிறம் ஏற்படுகின்றது.
நிறைவுற்ற இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் நீல வைரங்கள் விலைமதிப்பற்றவை, ஏனெனில் அவை அரிதானவை மற்றும் எப்போதும் ஏற்படாது. இயற்கையில் இந்த வண்ண வைரங்கள் 10,000 வைரங்களில் ஒன்றில் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றது.
வைரக்கல் உருவாகும் போது கலக்கப்படும் சேர்மங்கள் அதனுடைய நிறத்தை முடிவு செய்கின்றது : நைட்ரஜன், இது மஞ்சள் நிறத்திற்கு காரணமாகும். இரும்பு ஆக்சைடுகள் [மிகவும் அரிதானது: சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு] புரோமின் [நீலம் அல்லது வெளிர் நீலம்] அல்லது குரோமியம் [பச்சை]ஆகியவை. வண்ண வைரங்கள் செயற்கையாகவும் உருவாக்கப்படுகின்றது.
கார்பன், கிராபைட் மற்றும் வைரம்- C-6 கார்பன், கரி, கிராபைட் மற்றும் வைரம் இடையிலான வித்தியாசங்கள் இந்த மூன்றும் தனிம அட்டவணையில் C-6 என்ற தனிமத்தின் கீழ் வருகின்றது. இருப்பினும் இவைகளின் கட்டமைப்புகள் மட்டும் மாறுபடுகின்றது.
கார்பன், கிராபைட் வெப்ப அழுத்தம் குறைவாக உள்ள இடத்தில் உருவானது, வைரம் வெப்பம் - 1300 ° C மற்றும் அழுத்தம் 70,00 kg / cm² i கூடிய ஆழமான பூமியின் மையப்பகுதியில் உருவானது. இந்த இரண்டும் கிராபைட், வைரம் தென்னாப்பிரிக்கா, நமீபியா, அங்கோலா, போட்ஸ்வானா, காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளில் தோண்டி எடுக்கப்படுகின்றது.
கடினமான, விலை மதிப்பு மிக்க வைரத்தை காட்டிலும் உதிரும் தன்மை கொண்ட பென்சில் கரி, (கிராபைட் ) தனிமத்தின் தேவை இன்று அதிகமாக இருக்கின்றது
.Diamant & Brillant இரண்டும் ஒரே கல், ஒரு வைரம். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது. "Diamant" என்ற சொல் ரத்தினத்தைக் குறிக்கின்றது, அதே நேரத்தில் "Brillant" என்ற வார்த்தை வைரத்தின் சிறப்பாக வெட்டப்பட்ட வடிவத்தைக் குறிக்கின்றது. பட்டை தீட்டுதல் வைரங்களை மிக அற்புதமாக பிரகாசிக்கச் செய்கின்றது.
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக