"எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
உலகம் அழியப்போகுது என்று நம்பி உன் வாழ்க்கையை வீணாக்காதே. சண்டையும் சச்சரவும் மனித இனத்தின் இயல்பான குணங்கள் அது ஒரு போதும் விட்டொழியாது, நாடுகளின் மோதல்களை கண்டு பயந்து ஒடிங்கி ஓடி ஒழிந்து விடாதே. அடுத்த தலைமுறைக்காக உன்னை தயார்படுத்திக்கொள்,அடுத்த தலைமுறை உன் முன் வீறு கொண்டு எழுந்து நிற்கும். அதை எதிர்கொள்ள தயாராக இரு.
எத்தனை அணுக்குண்டுகள் வெடித்தாலும் இந்த பூமி ஒருபோதும் சுழல்வதை நிறுத்தாது, உயிர்கள் அழியப்போவதுமில்லை, தொடர்ந்து இந்த மண்ணில் உயிர்கள் வாழத்தான் போகின்றது மனிதன் உற்பட, இன்னும் 10000 வருடம் கடந்தும் மனிதன் புது வருடம் கொண்டாடத்தான் போகின்றான். அன்று மனிதன் எந்த மாதிரி உடை, வாகனம் எந்த உணவை உண்ணப்போகின்றான் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அன்று காடு/ கடல் வளம் புதிப்பிக்கப்பட்டிருக்கும் புது மீன்கள் துள்ளி ஓடும், அன்றும் தமிழர்கள் சிதறுண்ட சமூகமாகத்தான் இருப்பார்கள் எனக்கு திரும்பவும் ஒரு சர்ந்தர்ப்பம் கிடைக்கும் தமிழை எழுதுவதற்கு , இந்த மண்ணில் உயிர்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றவில்லை மாறாக, அடுத்த உலகத்தில் வாழ்வதற்கு, தம்மை தகவமைத்துக் தாவிக்கொண்டே வந்திருக்கின்றன. இந்த வருடத்திலிருந்தே தாங்க முடியாத வெப்ப அலை வீசத்தொடங்கி விட்டது இனி வரும் காலத்தில் இதை விட மோசமாக வெப்பம் சுட்டெரிக்கப்போகின்றது.இந்த மண்ணில் உயிர்கள் எப்படி தப்பி பிழைக்கபோகின்றன. உணவு, தண்ணீர் பற்றாக்குறை/விலை உயர்வு மனித வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள்.
இயற்கையான வெப்பத்தை காட்டிலும், தொழில் நகர்ப்புற மனிதன் உற்பத்தி செய்யும் வெப்பம் 60 விழுக்காடு அதிகம். இதனால் ஏற்படும் வெப்பம், வெப்பத்தாக்கம் மனிதனின் உணவுத் தேவையில் பல பாதிப்புகளை கொண்டு வரப்போகின்றது.
இன்று தொழில்மயமாக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வெப்பம் இயற்கையான வெப்பத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது,
இது மனித உணவுத் தேவைகளை எதிர்மறையாக பாதிக்கும் வெப்ப அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. நகர்ப்புற வெப்ப தீவு விளைவால் அதிகரிக்கும் இந்த அதிகப்படியான வெப்பம், விவசாய விளைச்சலைக் குறைக்கும், உணவு உற்பத்தியை சீர்குலைக்கும் மற்றும் உணவு விநியோகத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும்.
பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகை, வெப்ப அழுத்தம் வயதானவர்கள், ஏற்கனவே உள்ள சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் வெளிப்புற தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மக்களை விகிதாசாரமாக பாதிக்கப்போகின்றது. இதை நீ எதிர்கொள்ளத்தான் போகின்றாய்.
மற்றவர்களை நம்பி ஏமாந்துபோகாதே உன்னால் முடிந்தவரை உன்னை நீயை காப்பாற்றிக் கொள் எதுவெல்லாம் இயற்கையை அனுசரித்து வாழப் பழகிக் கொள்கின்றனவோ அவையே இந்த பூமியில் நிலைத்து நிற்கும். "இந்த நிலத்தில் வாழ்க்கை பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றவில்லை, மாறாக, அது அடுத்த உலகில் வாழத் தழுவித் தாவியுள்ளது." நன்றி.
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்