உங்களுக்கான ஒரு கேள்வி ... பதில் உங்களுடையது,
நீ, யாருடைய தொழில்நுட்ப கருவிகளை (ஐபோன், கணினி...) பயன்படுத்துகின்றாய் என்று தெரியுமா.?
நீ, எந்த நாட்டு கலாச்சார ஆடைகளை அணிந்திருக்கின்றாய் என்று தெரியுமா.? (மருந்து, மருத்துவம், உணவு, மெது-பானம் மற்றும் மேற் படிப்பு, தொழில்நுட்பம், நவீன சாதன வசதிகள், பயணம் செய்யும் வண்டி, பொழுதுபோக்கு சாதனம், இன்னும் சொல்லப்போனால் நாட்காட்டி- காலண்டர், பேசும் மொழி ஆங்கிலம் இன்னும் எத்தனைகள், இவைகள் அனைத்தும் தந்த அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்வதில் எந்த குற்றமும் கிடையாது.
காலண்டர் , புத்தாண்டு தொடக்கம் என்பது, நாடு மத, இன கலாச்சார எல்லைகளை கடந்து உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நிகழ்வு, உலக மக்கள் அனைவருக்கும் உரித்தான ஒரு கொண்டாட்டம் இங்ஙனம், உங்கள் நல்லிணக்கம் நட்பு, அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஐக்கிய நாடுகள் சபை ஒன்று கூடினாலும் கூட, தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்று உண்டென்றால் அது மத, இன பிரிவு சண்டை தான்.
பிரிவினவாத எண்ணங்களை தீ வைத்து எரித்துவிட்டு, இந்த புத்தாண்டில் நல்ல புதிய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், நாம் ஒற்றுமையோடு இருந்தால் தான் அழிவு நிலையிலிருக்கும் எங்கள் பூமியை பாது காக்க முடியும்.
இயற்கையும் மனிதனும் சமாதானத்துடன் கூடி வாழ எந்த எல்லை கோடுகளும் இல்லாத புதியதொரு உலகை எங்கள் காலத்திலே உருவாக்க, ஒன்றாக இணையுங்கள்
"முன்னோக்கு சமத்துவம் உலகமெல்லாம் விளங்க,
சந்தோஷமாக கொண்டாடுங்கள்